Blog

  • Lemon Edhirmarai shakthi

    உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறதா? குடும்பத்தில் சண்டை, பணப்பிரச்சினைகள் அதிகம் இருக்கிறதா? உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

    பச்சை நிற எலுமிச்சையை பயன்படுத்தி வீட்டில் உள்ள எதிர்மறை  சக்தியை எளிதாக வெளியேற்றி விடலாம். மூன்று எலுமிச்சை பழங்களை வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்க வேண்டும். அதன் நிறம் எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் புதிய எலுமிச்சை வைக்க வேண்டும். அவ்வளவு தான்.

    மழைநீரில் எலுமிச்சையின் தோலினை போட்டு கொதிக்க வைத்து வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் நம்மை விட்டு அகலும் என கருதப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அல்லது மேஜையில் மூன்று எலுமிச்சைகளை வைத்து கொள்வது மிகவும் நல்லது.

    வீட்டிற்கு வெளியே செல்லும் போது ஒரு எலுமிச்சையை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். திரும்ப வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சையை எடுத்து பார்க்க வேண்டும்.அது காய்ந்து இருந்தால் உங்களை நோக்கிய எதிர்மறை சக்தியை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

    இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சையை நான்கு துண்டாக அறுத்து உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைக்க வேண்டும். கட்டிலுக்கடியில் வைத்து விட்டு விடிந்ததும் கையால் தொடாமல் பிளாஸ்டி கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிய வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.
     

  • Prasanna lakshmi

    கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் உள்ள ஶ்ரீபிரசன்ன லக்ஷ்மி வெங்கட நாராயணசுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடைபெற்றது. 

    அங்குள்ள ராபர்ட்சன் பேட்டையில், 84-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவின் 11-வது நாளில், புஷ்ப பல்லக்கு வைபவம் வெகு விமரிசையாக அரங்கேறியது.  

    தென்னகத்தின் மிகப் பெரும் புஷ்ப பல்லக்கு வைபவமாக கருதப்படும் இந்நிகழ்வில், தமிழகத்தின் குடியாத்தம், தர்மபுரி மற்றும் ஆந்திராவின் குப்பம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, இரண்டு டன்னுக்கும் அதிகமான வண்ண மலர்களால்,13 அடி அகலத்திலும் 40 அடி உயரத்திலும் புஷ்ப பல்லக்கு தயாரிக்கப்பட்டிருந்தது. 

    அலங்காரத்துடன் விளங்கிய அதனை 250 பக்தர்கள், பரவசத்துடன் சுமந்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த பிரம்மோற்சவ விழாவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நலம் 
    ரிஷபம் – துணிவு 
    மிதுனம் – முயற்சி
    கடனம் – ஆதாயம்  
    சிம்மம் – பாராட்டு 
    கன்னி – லாபம் 
    துலாம் –   கோபம் 
    விருச்சிகம் – பொறுமை 
    தனுசு – போட்டி 
    மகரம் –   ஆக்கம் 
    கும்பம் – பக்தி  
    மீனம் – ஊக்கம் 
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை,ரோகிணி
     

  • March 27 Indraya Naal Eppadi

    விளம்பி வருடம் – பங்குனி 13
    27-மார்-2019 புதன் 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    1.42
    நட்சத்திரம்    :    கேட்டை    ம    12.57
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Maasani Amman Koil

    தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் மிகவும் புகழ்பெற்ற அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் 'மயான சயனி" என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரைந்துள்ள இடம் கோவை மாவட்டத்தில், ஆனைமலை என்னும் சிற்றுரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

    ஆனைமலை பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.

    ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த பெண்கள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். 

    இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.

    பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு, வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போக்கில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.

    பொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி அளிப்பதை கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

    நான்கு கைகளில், இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு, மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

    இந்தக் கோவிலில் ஒரு பிரத்யோகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் சமர்ப்பித்தால் அந்த குறை தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.

    இந்தக் கோவிலின் மிக சுவாரஸ்யமான விஷயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளகாய் போட்டு அரைப்பார்கள். அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழ்ந்த பக்தியுடன் பூசுவார்கள். இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர்.
     

  • chittirai viradhangal

    மாதத்தின் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நெறிமுறை உண்டு. அதன்படி சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்களை பார்க்கலாம்….. 

    1.வளர்பிறை சப்தமிதிதி- வாழ்வில் வளம்.
    2.பௌர்ணமி-சிவன்- லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.
    3.பௌர்ணமி- சித்திரகுப்தர்-ஆயுள் பலம், புண்ணிய பலம்.
    4.சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் -வெள்ளி-பார்வதிதேவி -சர்க்கரை நிவேதனம் -இனியவாழ்வு அமைய.
    5.பரணி நட்சத்திரம்-பைரவமூர்த்தி -தயிர்சாதம் நிவேதனம் -எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.
    6.மூல நட்சத்திரம்-மகாலட்சுமி+நாராயணன் இஷ்டசித்திகள் -விஷ்னுலோகம் அடைய.
    7.சுக்லபட்ச திரிதியை-உமா-மகேஸ்வரர்-தானம் செய்தல்-சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.
     

  • thirupathy telugu varuda pirappu

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க் கிழமைகளில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 

    அப்போது கருவறையில் உள்ள பொருள்கள் வெளியேற்றப்பட்டு, தரிசன வரிசைகள், உயர்மட்டப் படிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். 

    இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க் கிழமையான ஏப்ரல் 2-ம் தேதி ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அன்று ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    கோயிலில் சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பாராட்டு 
    ரிஷபம் – கவனம் 
    மிதுனம் – தொல்லை
    கடனம் – உற்சாகம் 
    சிம்மம் – பயம் 
    கன்னி – அசதி
    துலாம் –   சலனம்
    விருச்சிகம் – துணிவு
    தனுசு – ஜெயம் 
    மகரம் –   சோதனை 
    கும்பம் – நன்மை 
    மீனம் – மேன்மை 
    சந்திராஷ்டமம்    – பரணி, கார்த்திகை

  • March 26

    மார்ச் 26 – சஷ்டி திதி
    விளம்பி வருடம், பங்குனி மாதம் 12ம் தேதி  
    செவ்வாய்க்கிழமை தேய்பிறை
    அதன்பின் சப்தமி திதி
    அனுஷம் நட்சத்திரம் மதியம் 12:10 வரை 
    அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.
    நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி 
    ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி 
    எமகண்டம் : காலை 9:00–10:30 மணி 
    குளிகை : மதியம் 12:00–1:30 மணி 
    சூலம் : வடக்கு 
    பரிகாரம் : பால் 
    சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
     

  • Selva Ganapathy latcharchanai

    புதுச்சேரியில் உள்ள ஶ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் நடைபெற்ற ஏகதின லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி,  கிருஷ்ணா நகரில் பிரசித்திபெற்ற ஶ்ரீ செல்வகணபதி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 8 ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

     விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சர்கள் மற்றும் குருக்கள் விநாயக மந்திரங்கள் முழங்கினர். பின்னர் விநாயகருக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.