Blog

  • Thirupathy Secrets

    திருப்பதி என்றாலே நல்ல திருப்பங்களை கொடுக்க கூடிய இடம் தான் . ஏழுமலையானை எந்த  தினத்தில் வணங்கினால்,செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பதை பணவளக்கலை தெரிவித்துள்ளது

    ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம்..சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி..அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும்…ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்..

    தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை  கண் கூடாக பார்க்க முடியும். 12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். அதாவது தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சென்று வர  படிப்படியாக  கண்டிப்பாக  செல்வம்  பெருகும் என்பது  ஐதீகம்
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  சிக்கல்
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – நன்மை 
    கடனம் – சிரமம்
    சிம்மம் – நிம்மதி 
    கன்னி – லாபம் 
    துலாம் –   சுகம் 
    விருச்சிகம் – மேன்மை 
    தனுசு – வெற்றி
    மகரம் –   நற்செயல்
    கும்பம் – ஆக்கம் 
    மீனம் – அன்பு
    சந்திராஷ்டமம்    – சுவாதி

  • April 7 Indraya naal eppadi

    ஏப்ரல் 7 இன்றைய நாள் எப்படி 
    விளம்பி வருடம் – பங்குனி 24
    07-ஏப்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    மா    4.09
    நட்சத்திரம்    :    அசுவினி    இ    8.54
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  ஏமாற்றம் 
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – கவலை
    கடனம் – லாபம் 
    சிம்மம் – நட்பு
    கன்னி – தடங்கல்
    துலாம் –   மகிழ்ச்சி 
    விருச்சிகம் – தாமதம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   வரவு
    கும்பம் – சிக்கல்
    மீனம் – அசதி
    சந்திராஷ்டமம்    – சித்திரை

  • April 6 Ugadi Festival

    விளம்பி வருடம் – பங்குனி 23
    தெலுங்கு புத்தாண்டு
    06-ஏப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    ம    3.49
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    7.44
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

  • Ugadhi Vazhipadu Murai

    காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. 

    இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். 

    ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம். 

    வசந்த காலத்துக்கு வரவேற்பு விழா :

    யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். 

    எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 

  • Yugadhi Pachadiyin Thathuvam

    ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான், 'யுகாதி பண்டிகை'. இந்தப் பண்டிகை, 'உகாதி' என்றும் அழைக்கப்படுகிறது.பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

    யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. `சைத்ர மாதத்தின் முதல் நாளான இன்றுதான் பிரம்மதேவர் யுகத்தைத் தொடங்கினார்’ என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தருமபுரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் யுகாதிப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

     மராட்டிய மக்கள் 'குடிபாட்வா ' என்றும், சிந்தி இன மக்கள் 'சேதி சந்த்' என்றும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். 

    வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.  
     

  • Thirupathiku malargal anuppi vaippu

    யுகாதி பண்டிகைக்காக திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு 5 டன் மலர்கள் சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து சிறப்பு விழாக்களுக்கும் சேலம் ஸ்ரீ திருமலை திருவேங்கடமுடையான் நித்திய புஷ்பா கைங்கரிய சபா சார்பில் வாசனை மலர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலைகள் அனுப்பப்படுவது வழக்கம்.

    அதேபோல் இம் மாதம் யுகாதி பண்டிகை வைபவ தினம் திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. 

    அந்த வகையில், சேலம் ஸ்ரீ திருமலை திருவேங்கடமுடையான் நித்திய புஷ்பா கைங்கரிய சபா சார்பில் பூ மாலைகள் தொடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று 5 டன் எடை உள்ள அரளி, மரிகொழுந்து, ரோஜா, சாமந்தி துளசி, குண்டு மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்களை மாலையாகத் தொடுத்தனர். பின்னர் இந்த மாலைகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு லாரி மூலம் திருப்பதி திருமலைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  கவனம் 
    ரிஷபம் – வரவு
    மிதுனம் – தாமதம் 
    கடனம் – செலவு
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – அசதி
    துலாம் –   வெற்றி
    விருச்சிகம் – வருத்தம்
    தனுசு – நன்மை
    மகரம் –   அமைதி
    கும்பம் – நற்சொல்
    மீனம் – பயம் 
    சந்திராஷ்டமம்    – அஸ்தம்

  • April 5 – Indraya Naal Eppadi

    ஏப்ரல் 5 – இன்றைய நாள் எப்படி?
    விளம்பி வருடம் – பங்குனி 22
    05-ஏப்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    அமாவாசை    ம    2.55
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    6.10
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்