Blog

  • Kalyana Varadha Raja Perumaluku Pista Malai

    சென்னை திருவொற்றியூரில் சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் 400 ஆண்டு பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு விஷேச புஷ்ப அலங்காரம் செய்யபட்டது.

    இதனையடுத்து  உத்சவர் ஸ்ரீ பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயாருக்கு 16   கிலோ எடையுள்ள பிஸ்தா  மற்றும்  அலங்கார பொருட்கள் கொண்டு கோர்க்கப்பட்ட  மாலை  முந்திரி  ஜடை ,கிரீடங்கள் அணிவித்து ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இரண்டாவது சனிக்கிழமையான இன்று மஹாளய அமாவாசை ,திருப்பதி குடை ,என ஆன்மிக வாரமானதால் கட்டுக்கடங்காத கூட்டம் பெருமாளை சேவிக்க நீண்ட நேரம் வரிசையில் காந்திருந்து தரிசனம் செய்தனர்     

    ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இத்திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரங்களும்  விதவிதமான மலர்கள் பழங்கள் என மாலை  அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதனால்  வெளிபகுதிகளில் இருந்து எராளமான பக்தர்கள்  வந்து  சாமி தரிசனம் செய்கின்றனர்.
     

  • Navarathiri kolu Alangaram

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், மாலை நேரத்தில், வீட்டில் வைத்திருக்கும் கொலு முன்பாகத் திருவிளக்கேற்றி, அம்மன் படம் வைத்து, அன்னையின் திருமுன் அமர்ந்து பக்திப்பாடல்களைப் பாடி முறைப்படி வழிபட வேண்டும்.

    முதல் நாள்: அம்பிகையைக் குமாரி வடிவமாக அலங்கரித்து, மல்லிகை மலர் மாலை சூடி வெண்பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

    இரண்டாம் நாள்: அம்மனை இராஜராஜேஸ்வரியாக வழிபட வேண்டும். மல்லிகை, துளசி மாலை சாற்றி, புளியோதரை சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் நாள்: அம்பிகையைக் கல்யாணி வடிவமாக வழிபட வேண்டும். சம்பங்கி, மரிக்கொழுந்து முதலிய மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

    நான்காம் நாள்: ரோகிணி தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ஜாதிமல்லிப்பூ மாலை சூடி, கதம்ப சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஐந்தாம் நாள்: அன்னையைக் காளிகா தேவியாகப் பாவித்து, பாரிஜாத மலர் மாலை சூட்டி, தயிர்சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஆறாம் நாள்: சண்டிகா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். இந்நாளில், செம்பருத்திப் பூக்களால் அன்னையை அலங்காரம் செய்து, தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.

    ஏழாம் நாள்: தேவியை அன்னபூரணியாகப் பாவித்து, தாழம்பூ மாலை சூட்டி, எலுமிச்சை சாதம் படையல் செய்து வழிபட வேண்டும்.

    எட்டாம் நாள்: அஷ்ட தேவிகளுடன் எழுந்தருளும் அன்னை துர்க்கா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ரோஜாப்பூ மாலை சாற்றி, பாயசம் படைக்க வேண்டும்.

    ஒன்பதாம் நாள்: அன்னை காமேஸ்வரி என்னும் சிவசக்தி கோலத்தில், அம்மனை சுபத்திரா தேவியாகப் பாவித்து, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, திரட்டுப்பால் படைத்து வழிபட வேண்டும்.

    இவ்வாறு ஒன்பது நாட்களும் அன்னையை ஒன்பது விதமாக அலங்கரித்து வழிபடுவதால், இல்லத்தில் செல்வம், கல்வி, வீரம் ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து விளங்கும்.

  • Pudhidhaga kolu vaipavara neengal

    புதிதாக கொலு வைப்பவர்களா நீங்கள்? எந்த படியில் எந்த பொம்மை வைக்க வேண்டும் என்று தெரியுமா? இத கொஞ்சம் படிங்க

    முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், செடி, கொடிகளையும், 2 ஆம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3 ஆம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளையும் அடுக்க வேண்டும்.

    4ஆம் படியில் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5ஆம் படியில் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், 6ஆம் படியில் மனிதர்களின் உருவ பொம்மைகளையும் வைக்கலாம்.

    7ஆம் படியில் சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளையும், 8ஆம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகளையும் அடுக்கலாம். 9 ஆம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பொம்மைகளை வைக்கலாம். அதன் நடுவில் ஆதிபராசக்தியை கொலுவின் அதிபதியாக வைத்து வழிபட வேண்டும்.
     

  • Mahalaya Amavasai Tharpanam

    புரட்டாசி சனிக்கிழமை அன்று மஹாளய அமாவாசை திதி வந்தது சிறப்பாக கருதப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு சனிக்கிழமை மஹாளய அமாவாசை வந்ததையடுத்து 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புரட்டாசி 2 வது  சனிக்கிழமை அன்று அமாவாசை தர்பணம் கொடுப்பது சிறப்பு பெற்றதாக கருதுகிறார்கள்.

    இந்துகளின் புனித நாளான  மஹாளய  அமாவாசையான  இன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த  ஆயிரகனக்கான  இந்துக்கள்  புனித  நீராடி தங்கள்  முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நடத்தி வணங்கினார்கள்.

    மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர்  தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் குளத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு  ஏராளமானோர்  தங்களது முன்னோர்களுக்கு திதி எனப்படும்  தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில்  மஹாளய அமாவாசை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிக்கிழமை  அன்று  மஹாளய அமாவாசை வருவதால் வீரராகவப் பெருமாளை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரம் நிரம்பி வழிந்தது. 

    மஹாளய அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. மதுரை மாவட்டம் . திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் சரவண பொய்கை தெப்பகுளத்தில் புரட்டாசி மாத மஹாலய அமவாஸையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் எனும் "பித்ரு " சாந்தி செய்து கொண்டனர். 

    திருவொற்றியூரில் மஹாளய அமாவாசை தர்ப்பணம்  செய்வதற்காக கடற்கரையில் ஏராளமானோர் குவிந்து  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பவித்ரா ஜோதி மக்கள் அறக்கட்டளை சார்பில்  இலவசமாக ஆண்டுதோறும்  திருவெற்றியூர் திருச்சினாம் குப்பம்  கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆறுகளிலும் குளங்களிலும் கடற்கரையிலோ தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் சென்னையில் கடற்கரை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க வசதியில்லாத நிலையில் கோவில்களில் சத்திரங்களில் தர்பணம் கொடுத்து வருகிறார்கள்.


     நம் முன்னோர்களுக்கு அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற்று முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை    அதிலும் காசியில் ஓடும் நதிக்கரையில் அல்லது ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பது முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும் இதனைத் தீர்ப்பதற்கு காசிக்கோ ராமேஸ்வரதுக்கோ ஒரு சிலரால் மட்டுமே செல்ல முடியும் என்பதனால் ஏழை எளியவர் வசதி படைத்தவர் யாவரும் ஒரே இடத்தில் இலவசமாக திதி கொடுக்க ஏதுவாக சித்தர்களின் பூமி  என்றழைக்கப்படும்   திருவொற்றியூரில் கடலில் காசி விஸ்வநாதர் கோயில்  மூழ்கிய  இடத்தில் தர்பணம் கொடுப்பது காசியில் தர்பணம் கொடுத்த பலனை தரும் என்பதால்  கடற்கரையில் எள்ளும் தண்ணீரும்  கரைத்து முன்னோர்கள்  ஆசியை பெறுவதற்க்காக  ஏராளமானோர் குவிந்தனர் 

  • September 28 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தாமதம் 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – வரவு
    கடனம் – சிக்கல்
    சிம்மம் – முயற்சி   
    கன்னி –  எதிர்ப்பு
    துலாம் –  வெற்றி    
    விருச்சிகம் – கவலை
    தனுசு –     பயம் 
    மகரம் –   நட்பு
    கும்பம் – தடங்கல்
    மீனம் – களிப்பு
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • September 28 Mahalaya amavasai

    செப்டம்பர் 28 – மகாளய அமாவாசை
    விகாரி வருடம் – புரட்டாசி 11
     அமாவாசை 
    மகாளய அமாவாசை
    28-செப்-2019 சனி  மொகரம்28
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    12.44
    நட்சத்திரம்    :    உத்திரம்    இ    11.24
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Mahalaya Amavasai in Saturday

    சனிக்கிழமை அமாவாசை எப்படி மிக சிறப்பான நாளாக பார்க்கப்படுகின்றதோ, அதை விட மிக சிறப்பாக பார்க்கப்படுவது சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை.

    2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மகாளய அமாவாசை தினம் வருகின்றது. மகாளய பட்சமான அதாவது செப்டம்பர் 14 முதல் 28ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

    இந்த தினங்களில் தர்ப்பணம், முன்னோர் வழிபாடு செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக நாளை வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றிடுங்கள்.

    1999ம் ஆண்டு இந்த மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வந்தது. தற்போது மீண்டும் இந்த மகாளய அமாவாசை இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை தினத்தில் அமைந்துள்ளது முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகின்றது.

    செப்டம்பர் 28ம் தேதி அதிகாலை 03.07 மணிக்கு அமாவாசை வருகிறது.
    செப்டம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12.44 மணிவரை அமாவாசை நீடிக்கின்றது.
     

  • Mahalaya amavasai Seiya vendiyavai

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி, தர்ப்பணம் அமாவாசை தினம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் திதியோ அல்லது தர்ப்பணமோ செய்வதால் நம் தலைமுறை தலைக்கும். பொதுவாக ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரத்தில் வரும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பானது. நல்ல பலனை கொடுக்கும். அப்படி ஒவ்வொரு வாரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை தினங்களிலாவது விரதம் இருந்து பெருமாளைத் தரிசிப்பது உகந்தது.

    தற்போது சனிக்கிழமையும், மகாளய அமாவாசையும் கூடி வரும் நாளில் நாம் கட்டாயம் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, வீட்டில் தீபம் ஏற்றி இறைவனையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது.

    பொதுவாகச் சனிக்கிழமை விரதம் இருப்பதால் நம்மீது இருக்கும் சனி பகவானின் வக்கிர பார்வை குறையும். இந்த சனி மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வதால் நமக்கும், நம் முன்னோருக்கும் இருக்கும் சனி பார்வை பிரச்சினை விலகும்.

    இதனால் முன்னோர்கள் ஏதேனும் சில பாவங்களால் வைகுண்டம் அடைய முடியாமல் இருந்தால், நாம் இந்த நாளில் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களை வைகுண்டம் அடைய வழிவகுக்கும்.

  • Mahalaya Amavasai

    மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள ‘மணிகர்ணிகா காட்' என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி ,

    எல்லா நாட்களிலும்  மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம்  பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு  சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது.

     மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.

     அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது. இந்த விஷேச மணிகர்ணிகா தீர்த்தங்கள் காசி மட்டுமல்ல வேதாரண்யம், திருபுவனம், திருநீர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள்  புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம்.

     நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.

                                                                     

    அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,வீட்டில்  உயிர் நீத்த பெரியவர்களின்  படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.

     

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் அமாவாசை  மற்றும் தர்ப்பண தினங்களில் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம். இது போல் நாம் செய்யும் பித்ரு தர்ப்பண பூஜையின் போது மனிதர்களுக்கு  செய்யப்படும் உணவு தானத்தைப் போன்று, காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு, இறைகின்ற அரிசி எள் என மற்ற உயிர்களுக்கும் தானம் இடும் புண்ணியத்தைப் பெறுகிறோம். தர்ப்பண  காலங்களில் பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கலாம்.

     

    இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்.
     

  • September 27 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – செலவு
    கடனம் – வெற்றி
    சிம்மம் – கவலை   
    கன்னி –  வரவு
    துலாம் –  தாமதம்   
    விருச்சிகம் – முயற்சி 
    தனுசு –     ஆதரவு
    மகரம் –   பக்தி
    கும்பம் – தெளிவு
    மீனம் – பாசம் 
    சந்திராஷ்டமம்    – அவிட்டம், சதயம்