Blog

  • Navarathiri Important things

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

    நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

     நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

    நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

    மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

     மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

     உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

     நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

    ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

     சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

    இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.
     

  • Navarathiri Special

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம். இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.

    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.

    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.

    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.

    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.
     

  • mysuru Dasara Festival

    உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழா  மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி உள்ளது. 

    உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் 8ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் எங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த மைசூரு தசரா விழாவை காண வருவார்கள். 

    தசரா விழாவின் இறுதி நாளான அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் மிகவும் முக்கிய அம்சம் ஜம்பு சவாரி யானைகள் ஊர்வலத்தின் போது பட்டத்து யானை அர்ஜூனா 750 கிலோ எடைகொண்ட சாமூண் டீஸ்வரி தேவியின் தங்க அம்பாரியை சுமந்து அரண்மனையிலிருந்து பன்னி மண்டபம் வரை ஊர்வலமாக செல்கிறது ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். 

    ஊர்வலத்தில் பல்வேறு கலை கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன தசரா விழாவை எழுத்தளர் எஸ்எல் பைரப்பா துவக்கிவைக்கிறார் முதல்வர் எடியூரப்பா அமைச்சர் சோமண்ணா எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.  இதே போன்று மைசூரு அரண்மனையிலும் தசரா தொடக்க விழா நடைபெறுகிறது. இலவரசர் யதுவீர் அரண்மனையில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடுவார். 

    தசரா விழா தொடக்கத்தை முன்னிட்டு அரண்மனையில் கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11 மணி வரை யதுவீர் ராஜஉடையில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நவரத்தினங்களால் ஜோடிக்கப்பட்ட சிம்மாசனத்துக்கு சிறப்பு பூஜை செய்து அதில் அமர்ந்து தர்பார் நடத்துகிறார்.  அரண்மனைக்கு உரிய ராஜதர்பார் மல்யுத்தப்போட்டி ஆகிய விஷயங்கள் அடுத்த 9 நடக்கிறது. அரண்மனை மின் விளக்குகளால் ஜொலிக்கும். தசரா விழாவையொட்டி மைசூரு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

  • Thirupathy Bramorchavam Program List

    நிகழ்ச்சி நிரல்….
    29.09.1019
    7.00pm அங்குரார்ப்பணம்.
     
    30.09.2019
     3.00P.M. தங்க திருவாட்சி 5.00PM கொடியேற்றம் 
    6.00PM. ஊஞ்சல் சேவ
    7.00PM ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு.
    8.00.P.M. பெரிய சேஷ வாகனம்.

    01.10.19
    9.00AM. சின்ன சேஷ வாகனம்.
    2.00.PM. சப்னா திருமஞ்சனம். 
    8.00.P.M ஹம்ச வாகனம்.

    02.10.2019
    9.00.AM . சிம்ம வாகனம்.
    2.00.PM. சப்னா திருமஞ்சனம்.
    6.00PM. ஊஞ்சல் சேவை.
    8.00PM. முத்து பல்லாக்கு வாகனம்.

    03.10.2019
    9.00AM. கல்ப விருட்ச வாகனம்
    6.00PM. ஊஞ்சல் சேவை
    8.00PM. சர்வ பூபால வாகனம்.

    04.10.2019
    9.00.AM. மோகினி அவதார வாகனம்
    4.00PM. ஊஞ்சல் சேவை
    7.00PM. கருட வாகன சேவை.

    05.10.2019
    9.00AM. ஹனுமந்த வாகனம்
    4.00PM. தங்கத் தேரோட்டம்
    8.00PM. கஜ வாகனம்.

    06.10.2019
    9.00AM. சூரிய பிரபை வாகனம்
    2.00PM. சப்னா திருமஞ்சனம்
    6.00PM. ஊஞ்சல் சேவை
    8.00PM. சந்திர பிரபை வாகனம்.

    07.10.2019
    7.00AM. தேரோட்டம் 
    6.00PM . ஊஞ்சல் சேவை
    8.00PM அஸ்வ வாகனம்.
     
    08.10.2019
    6.00AM . சக்கர ஸ்நனம்
    7.00PM. கொடி இறக்குதல்

  • Kulasekara pattinam dasara kodiyetram video

    திருச்செந்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி…. 

  • September 29 Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவலை 
    ரிஷபம் – வெற்றி 
    மிதுனம் – நன்மை 
    கடனம் – பயம் 
    சிம்மம் – சுகம் 
    கன்னி –  சிக்கல் 
    துலாம் –  ஆதரவு    
    விருச்சிகம் – தோல்வி
    தனுசு –     பணிவு
    மகரம் –   லாபம் 
    கும்பம் – செலவு
    மீனம் – சுபம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி
     

  • September 29 Navarathiri Starts

    செப்டம்பர் 29 – நவராத்திரி ஆரம்பம் 
    விகாரி வருடம் – புரட்டாசி 12
    நவராத்திரி ஆரம்பம் (கொலு வைக்க காலை 7.30 – 9.00 மணி)
    29-செப்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    10.29
    நட்சத்திரம்    :    அஸ்தம்    இ    9.53
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thirupathy Bramorchava alangaram

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி, திருமலை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நாளை இரவு அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி திங்கட்கிழமை மாலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறக்கூடிய  பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 14 வாகனங்களில் காலையில் எழுந்தருளி காலை 9 மணி முதல் 11 மணி வரையும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை  நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 

    பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருடசேவை நான்காம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்திற்காக வரும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க 8  லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

    பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து முன்னுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் 4200  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 1500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கோவிலின் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல் தெரிவித்துள்ளார். பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி , திருமலை முழுவதும் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது.
     

  • Sundaranandha Siddhar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    அழகில் சிறந்த 
    அற்புதச் சித்தர்
     சுந்தரானந்தர்.

    சித்தர்களில் அவர் ஓரு சக்கரவர்த்தி.

     சுந்தரானந்தரின் சித்து விளையாட்டு பாண்டிய நாடு எங்கும் மெல்ல மெல்ல பரவி வந்த காலம்.

    அது மன்னன் செவிகளுக்கும் எட்டியது, ஒருநாள்.

    அரசன் அபிஷேக பாண்டியன் ஆன்மீக நாட்டம் உடையவன்.

    அரசன் என்பதால் அகங்காரமும் அதிகாரத் திமிரும் அவனுக்கு இயல்பாய் இருந்தன.

    அரசன் வீரர்களை அழைத்தான்.

    " சுந்தரானந்தரை அழைத்து வாருங்கள்.., அவரைக் காண அரசர் ஆவலாய் இருக்கிறார் எனச் சொல்லி அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டான்.

    வீரர்கள் விரைந்தனர் சுந்தரானந்தர் வசிப்பிடத்திற்கு.

    "ஐயா , எங்கள் அரசர் உங்களைக் காண காத்திருக்கிறார்..அழைத்து வரச்சொன்னார்.. எங்களோடு வாருங்கள்.." பணிவாகத்தான் சொன்னார்கள் பணியாட்கள்.

    தவசீலர் மெலிதாகச் சிரித்தார்.

    "என்னப்பா வேடிக்கையாய் இருக்கிறதே !

    ஆற்றைக் காண அரசன் விரும்பினால் அவரல்லவா ஆற்றுப்பக்கம் வரவேண்டும்.

     ஆற்றை வெட்டி அரண்மனைக்கு அழைத்துச் செல்வீர்களா? 

     அழைப்பது அரசனாய் இருக்கலாம் ..,. ஆனால் அழைக்கப்படுவது முற்றும் துறந்தவனை .. முக்காலமும் உணர்ந்தவனை…

     அரசனைப் பார்த்து எனக்கு ஆவதென்ன ?

     ஒன்றுமில்லையே !

    ' நான் அரசன்' என்னும் மமதையால் மகிழ்ந்து இருப்பவனைக் காண்பதில் என்ன பயன் ?!

    அரசனைச்  சொல்லிக் குற்றமில்லை.
    அவன் உத்தரவிடுபவனாகவே இருக்கிறான்.

    பலரும் இப்படித்தான்.

    'நான்' இருப்பவர்களிடம் ஞான 'நாண்' இருக்காது. அது சேரும் இடம் போய் சேராது.

     சுந்தரானந்தர் கூறியது வீரர்களுக்கு புரியவில்லை.

     ஆனால் அதை அப்படியே அரசனிடம் ஒப்பித்தார்கள்.

     அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன் முதலில் அதிர்ந்தான். வியந்தான். யோசித்தான். உண்மை இருப்பதாய் உணர்ந்தான்.

     துறவி  உரைத்த ஒவ்வொரு சொல்லிலும் லயித்தான்.

     அதன்பின் அவரது வார்த்தைகள் நாள் முழுதும் அசரீரியாய் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

     பின்னொரு நாள்..

    மதுரை ஆலவாய் அழகன் கோயிலில் மன்னனும் சுந்தரானந்தரும்  எதிரெதிராக வந்தபோது சந்திக்க நேர்ந்தது.

    உள்ளத்தில் அவர் பற்றிய ஓவியம் உயர்வாய் இருந்தாலும் அரசன் என்ற மிடுக்கு அப்போதும் மன்னனுக்கு இருந்தது.

     " நீர் தான் மாயங்களை நிகழ்த்தும் மாயாவியா? " திமிர் கொஞ்சம் வார்த்தைகளில் தெறித்தது.

    " மன்னா தப்பாக நினைத்து உள்ளீர்கள்…. மாயம் என்பது வேறு.
     சித்து என்பது வேறு…

     மாயங்கள் அற்பமானவை சித்தர் சாகசங்கள் இறையருள் கொண்டவை.

    ஐம்புலன் சுருக்கி உள்ளொளி பெருக்கி பஞ்சபூதங்களை வசமாக்கி பிரபஞ்சம் அறிந்துணர்ந்து செயல்படுவது சித்தாடல்.

     அரசே….
    சித்து எல்லோருக்கும் கைவரும். அதற்கு பயிற்சி, முயற்சி தேவை.

     உமக்கும் வரும் …இதோ இந்த வீரர்களுக்கும் வரும்."

    துறவியின் கணீர் சொற்கள் கோயில் சுவரில் முட்டி மோதி எதிரொலித்தன.

    "அப்படியா….. நல்லது… எங்கே உங்கள் 
    தவசக்தியால் – சித்த சாகசத்தால் இந்த கல் யானையை உயிருள்ள யானையாக உலவச் செய்யுங்கள் பார்க்கலாம்.."

      அபிஷேக பாண்டியன் அருகிலிருந்த ஒரு கல்லாலான யானையை சுட்டிக்காட்டி ஆர்வமுடனும் சற்று ஆணவத்துடனும் கேட்டான்.

     அரசனை ஒருமுறை பார்த்து சிரித்தபடி கல் யானையின் மீது கண் பதித்தார் சுந்தரானந்தர்.

     அடுத்த நொடி கல் யானை உயிர்பெற்றது. மண்டபம் அதிர பிளிறியது.
    காதுகளை ஆட்டியபடி காலடி எடுத்து வைத்தது .

    பிரமித்துப் போயினர் மன்னரும், அவரது பரிவாரமும் .

    பரி வாரத்தில் ஓர் ஏவலாளி.
    அவன் கையில் கரும்பு இருந்தது .

    கரும்பைக் கண்ணுற்ற கருத்த யானை  தும்பிக்கையை நீட்டி அக்கரும்பை பறித்தது சாறு ஒழுக கரும்பை ருசித்து மகிழ்ந்தது.

    ' பார்ப்பது கனவா' என திகைத்த அபிஷேக பாண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    அரசனின் கழுத்தை அலங்கரித்து இருந்த முத்துமாலையை லாவகமாக எட்டிப் பறித்தது விளையாட்டாக.

    பதறிப் போனான் பாண்டியன்.

    சித்தரின் மகத்துவம் சிந்தையை நிறைத்தது .

    கல்யானை 
    சித்த சாகசத்தை உரைகல்லாக உணர்த்திய பின்னர் வேறுஎன்ன இருக்கு !

    அப்படியே சுந்தரானந்தர் திருவடி விழுந்தான். கண்ணீரால் அவர்தம் பாதம் துடைத்தான்.

    "சுவாமி ….உள்ளம் தெளிந்தேன் சித்தர் மகத்துவம் அறிந்தேன்..

    எனக்கு ஓர் அருள் வரம் நீங்கள் தரவேண்டும்.

     எனக்கு பிள்ளைப்பேறு இல்லை. அரச குலத்தில் பிள்ளை இல்லாதது பெரும் தொல்லை .பிள்ளை வரம் தாருங்கள்."

    காலில் விழுந்தவன் ஏழாமல் கேட்டான்.

    கைப்பிடித்து 
    எழச்சொன்ன இறைமுனி உறுதி தந்தார்.

    "மன்னா.… பிள்ளை பிறப்பான்.. உன் குலம் விளங்கும்… கவலைப்படாதே"
     கண்ணீர் துடைத்தார் .

    நடந்தவற்றையெல்லாம் ரசித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
    நிஜ யானை  மன்னர் கழுத்தில் முத்து மாலையைப் போட்டு வாழ்த்தியது .

    பின்னர் சித்தரை தாழ்பணிந்து வணங்கியது. மீண்டும்
    ' கல்' யானையானது.

     மன்னனும் பரிவாரமும் கைகூப்பித் தொழ  அவர்கள் கண் முன்னேயே ஆலவாயன் சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.

    இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கல்யானை பார்க்கலாம்.

    அருகிருக்கும் சன்னதியில் சித்தர் சுந்தரானந்தரை தரிசிக்கலாம் பேரருள் பெறலாம்.

  • Kulasekarapattinam Dasara Nalai Kodiyetraam

    உலகப்புகழ்பெற்ற  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்  தொடங்குகிறது .

      தசரா திருவிழாவிற்கு  புகழ்பெற்ற மைசூருக்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சரியாக கொண்டாடப்பட்டுவருகிது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு இங்கு தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  தொடரந்து பத்து நாட்கள் வெகு விமர்சரியாக நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை கொடியேற்றத்தினை தொடர்ந்து  விரதமிருந்து வரும் பக்தர்கள்  காப்பு அணிந்து  தாங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தாங்கள் விரும்பும் வேடங்களான அம்மன் வேடம்,  காளி வேடம்,  ஆஞ்சநேயர் , குரங்கு,  கரடி மற்றும் சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று காணிக்கை எடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் திருநாளன்று நடைபெறும்.

    மகிசாசூரசம்காரம் அன்று கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.  தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி குலசேகரன்பட்டிணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.