Blog

  • Pradhosham Viradham Thodanga Ugandha naal

    சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

    பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

    பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.

    பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

    நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

    தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும்.

    சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.

    கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.

    பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

    இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.

    பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

    பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.

    பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.

    பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.

    பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.
     

  • November 20 Kala Bairavashtami

    நவம்பர் 20 – கால பைரவாஷ்டமி
    விகாரி வருடம் – கார்த்திகை 4
    கால பைரவாஷ்டமி
    20-நவ-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    11.52
    நட்சத்திரம்    :    மகம்    மா    6.55
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • November 20 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நலம்
    ரிஷபம் – பெருமை 
    மிதுனம் – மறதி
    கடனம் – நட்பு
    சிம்மம் – அமைதி
    கன்னி –  சாந்தம் 
    துலாம் –  கஷ்மம்   
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு –     கோபம் 
    மகரம் –  புகழ்
    கும்பம் – சாதனை
    மீனம் –     இன்பம்  
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • Guru Dhosham Neenga

    குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.

    அப்பேர்பட்ட குருவினால் ஏற்பட்ட தோஷம் விலக வேண்டுமென்றால் கீழ்க்கண்ட இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். வியாழக்கிழமைகளில் குருவுக்கு உகந்த முல்லை பூவையும், கொண்டைக் கடலையும் நிவேதனமாகப் படைத்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மேலும் சிறப்பு.

    தேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்திமன்தம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

    மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
    நறை சொரி கற்பகப்பொன் நாட்டினுக்கதிபனாகி
    நிறை தனஞ் சிவிகை மண் வீடு போகத்தை நல்கும்
    மறையவன் குரு வியாழன் மருமலர்ப் பாதம் போற்றி!​

    9 அல்லது 108 தடவை சொல்ல குரு பகவான் மகிழ்ந்து தன் தோஷத்தை விலக்கிக் கொள்ளுவார்
     

  • Sabari malai 18 Steps

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.
     

  • Thirupathi laddu Paper bag

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சணல் மற்றும் பேப்பர் பெட்டிகளில் லட்டு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.   அவ்வாறு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு வழங்குவதற்காக லட்டு பிரசாதத்தை ஒவ்வொரு பக்தர்களும் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்று செல்கின்றனர். 

    இதற்காக லட்டுகளை எடுத்துச் செல்ல மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்கள் தேவஸ்தானம் சார்பில் ரூ 3 விலைக்கு பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இருப்பினும் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    அதன் ஒரு கட்டமாக பிளாஸ்டிக் கவர்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இன்று முதல் பேப்பர் மற்றும் சணல் மூலம் தயார் செய்யப்பட்ட பை மற்றும் அட்டை பெட்டிகள் மூலம் லட்டு கொண்டு செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக ஒரு லட்டு பிடிக்கும் விதமான அட்டை பெட்டி 3 ரூபாயும், 2 லட்டுகள் பிடிக்கும் விதமான அட்டைப்பெட்டி 5 ரூபாயும்,  4 லட்டுகள் பிடிக்கக்கூடிய அட்டைப் பெட்டி 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதேபோன்று 5 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சனல் பை 25 ரூபாயும், 10 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 30 ரூபாயும்,  15 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 35 ரூபாய்,  25 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 55 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் லட்டு  பெறக்கூடிய பக்தர்கள்  பேப்பர் பெட்டி அல்லது சணல் பைகளில் மட்டுமே லட்டுகளை கொண்டு செல்ல முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சணல் அல்லது பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

  • November 19 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – உற்சாகம் 
    ரிஷபம் – லாபம் 
    மிதுனம் – நட்பு
    கடனம் – உயர்வு
    சிம்மம் – போட்டி 
    கன்னி –  எதிர்ப்பு 
    துலாம் –  பொறுமை  
    விருச்சிகம் – ஏமாற்றம் 
    தனுசு –     வரவு
    மகரம் –  ஜெயம் 
    கும்பம் – உழைப்பு
    மீனம் –     விவேகம் 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்
     

  • November 19 Indraya Nalla Neram

    நவம்பர் 19 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – கார்த்திகை 3
    19-நவ-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சப்தமி    ம    2.03
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    8.26
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sabari Malai Bakthargal Kootam

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் முதல்நாளான நேற்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையில் கூட்டம் அலைமோதியது. தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளுடன், தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    உண்டியல், நெய் அபிஷேகம் உள்ளிட்ட இனங்களில் முதல் நாளான நேற்று 3 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானம் என தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல பூஜை  முதல் நாள் வருமானத்தை விட 1.28 கோடி அதிகம்.. கடந்த ஆண்டை விட  அதிக பக்தர்களின் வருகையால் வருமானம் அதிகரித்துள்ளது.

  • Yoga Narashimarkoil karthigai vazhipadu

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவில் கார்த்திகை மாத முதல் வார வழிபாடு துவங்கியது.

    பதினொரு மாதங்கள் கண்மூடி அருள்பாலித்து வரும் யோக லட்சுமி நரசிம்மர் கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் பக்தர்களுக்கு கண்திறந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

    நரசிம்மரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    தற்போது வரை 50,000 பேர் தரிசனம் செய்து உள்ளனர். பாதுகாப்பு பணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..