Blog

  • ஜூலை 20 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உயர்வு
    ரிஷபம்         – பாசம்
    மிதுனம்     – மேன்மை  
    கடகம்         –  பக்தி
    சிம்மம்         –   சோதனை
    கன்னி         –    அன்பு
    துலாம்         –     ஆர்வம்
    விருச்சிகம்     –  ஆக்கம்
    தனுசு         –     விவேகம்
    மகரம்         –    பொறுமை
    கும்பம்         –      தடங்கல்
    மீனம்         –      சாந்தம்
    சந்திராஷ்டமம்    –         கார்த்திகை

  • ஜூலை 20 – இன்றைய நல்லநேரம்…

    ஜூலை 20 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஆடி 4
    ஜூலை 20 – 2024
    சனி    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி மா 6.09
    நட்சத்திரம் :  மூலம் அ.கா 3.05
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு….

    வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ  ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.

    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளிகிழமை மற்றும் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன்,அரிசி மாவு,பால்,தயிர்,விபூதி,கரும்புசாறு சந்தனம் பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து இறுதியாக கலசாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் மலர்மாலைகள் வில்வ இலைமாலைகள் அருகம்புல் தாமரைமலர்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து தட்டு ஆரத்தி கும்ப ஆரத்திகளை செய்து இறுதியாக மகாதீபாரதனைகள் நடந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர்.

    பின்னர் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி ஜலண்டீஸ்வரி அலங்காரங்கள் செய்து திரு ஊடல் வாத்தியங்கள் முழங்கிட பக்தர்கள் புடை சூழ உட்பிரகார உலாவும் வந்தது.

  • பிரதோஷம்…. தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு அபிஷேகம்…

    ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

    தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும், இன்று ஆடி மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர்,பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

  • ஜூலை 19 – பிரதோஷ நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அச்சம்
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – ஆக்கம்
    கடகம்         –  கவனம்
    சிம்மம்         –   ஆர்வம்
    கன்னி         –    சிரமம்
    துலாம்         –     ஊக்கம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     சுபம்
    மகரம்         –    இரக்கம்
    கும்பம்         –      ஜெயம்
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –         பரணி

  • ஜூலை 19 – ஆடி முதல் வெள்ளி, பிரதோஷம்…

    ஜூலை 19 – ஆடி முதல் வெள்ளி, பிரதோஷம்…
    குரோதி வருடம் – ஆடி 3
    ஜூலை 19 – 2024
    வெள்ளி    
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  திரையோதசி இ 7.01
    நட்சத்திரம் :  கேட்டை அ.கா 2.54
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • நாமக்கல் சாய்பாபா கோவிலில் ஆடி முதல் வியாழன் சிறப்பு வழிபாடு

    நாமக்கல் – திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் ஆடி மாதம் முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலையில் சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் ஆரத்தி தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கோவிலில் பக்தர்கள் தியானம் செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • ஜூலை 18 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     – சாந்தம்
    கடகம்         –  பாராட்டு
    சிம்மம்         –   நலம்  
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     அசதி
    விருச்சிகம்     –  பக்தி
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    ஆக்கம்  
    கும்பம்         –      தனம்  
    மீனம்         –      உற்சாகம்
    சந்திராஷ்டமம்    –         பரணி

     

  • ஜூலை 18 – தமிழ்நாடு தினம்…

    ஜூலை 18 – தமிழ்நாடு தினம்…
    குரோதி வருடம் – ஆடி 2
    ஜூலை 18 – 2024
    வியாழன்    
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சூன்ய
    திதி நேரம் :  துவாதசி இ 7.23
    நட்சத்திரம் :  அனுஷம் அ.கா 2.14
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம்…

    திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் போர் (வதம் செய்யும்  நிகழ்ச்சி ) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி ஆயிரம் கண்காண பக்தர்கள் பங்கேற்பு

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் காமாட்சியம்மன் பேட்டை  பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்  உள்ளது இங்கு துரியோதனன் படுகள போர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக 3 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி  அன்று முதல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் ஆன்மீம நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடைபெற்றது. இதனிடையே முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் போரில் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதற்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையில்  கூத்து கலைஞர்களால் பீமன் துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சியிகள் தத்துரூபமாக நடைபெற்றது

    இதில் பீமன் வேடம் அணிந்தவர் பிரமாண்ட துரியோதனன் சிலையின் தொடை பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அப்பொழுது இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     மேலும்  மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிப்படையவும் பொதுமக்களிடையே நாணயமும் பொறுமையும் மக்கள் மனதில் விதைக்கப்படவும் தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தும் இந்த மகா பாரதம் விளங்குகிறது அதை உணர்த்தும் விதமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நடைபெறுவதாக  அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.