Blog

  • காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்?

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சந்நதி செல்லும் வழியில் ஒரு தூணியில் ‘விநாயக தாரணி’ எனப்படும் பெண்வடிவ விநாயகியை பார்க்கலாம். இவருக்கு ‘சந்தனக்காப்பு’ அலங்காரம் செய்து வணங்கினால் பெண்களுக்கு திருமண தோஷம் விலகும்.

    சென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ‘சகோதர விநாயகரை’ வணங்கினால் பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று கூடுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கீழ ஆவணிமூல வீதி பைரவர் கோயிலுள்ள ‘சோம சூரிய கணபதி’யை அமாவாசை நாளில் வேண்டிக்கொள்ள கிரக, நாக தோஷம் விலகும்.

    திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போல திருத்துறைப்பூண்டி அருகில் இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடற்நுறையாலான வெள்ளை விநாயகர் அருள்கிறார். இவருக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்து வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.

    கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

    ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள ‘கண் கொடுத்த விநாயகரை’ அங்குள்ள புஷ்கரணியில் 48 நாட்கள் நீராடி வணங்கிவர கண்பார்வை கோளாறு குணமாகுமாம்.

    காரைக்குடி அருகே உள்ள மாத்தூரிலும், சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரியிலும் ‘கலங்காத கண்ட விநாயகர்’ கோயில்கள் உள்ளது. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இவர்களிடம் முறையிட கடன் பிரச்னை தீரும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுள்ள விநாயகரை ‘புரமோஷன் விநாயகர்’ என்கிறார்கள். இவருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வேண்டினால் பணி உயர்வு கிடைக்குமாம்.

    கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள அமணீஸ் வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழ் உள்ள சதுர் விநாயகர்களை வணங்கினால் தாய், பிள்ளைகளுக்கு இடையேயான மனக்கசப்பு தீரும்.

    தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளி மலை அருவியின் அடிவாரத்திலுள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் தனிச்சந்நதியில் ‘கால் நடைகளைக் காக்கும் கணபதி’ உள்ளார். பால் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ இவரை வேண்டிக்கொள்ள குணமாகும்.

    சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுள்ள ‘மும்முடி விநாயகரை’ வேண்டிக்கொள்ள முன்னோர்கள் ஆத்ம சாந்தி அடையும். நினைத்த பேறுகளையும் அடையலாம்.

    உடுமலைப்பேட்டையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நின்று விநாயகரை வணங்கினால் அவரவர் ராசியில் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

    வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11 விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

    பொள்ளாச்சி அருகிலுள்ள குமாரலிங்கம் தத்தாத்ரேயர் சுவாமி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில்களில் விநாயகர் வயிற்றில் ராகு, கேது எனும் பாம்புகள் பின்னியுள்ள நிலையில் இருப்பார்கள். இவர்களை வணங்கினால் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்கள் தீரும் என்பது ஐதீகம்.

    விநாயகரின் நர்த்தனக் கோலம் மிகவும் அபூர்வமான ஒன்று. இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகிலுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இவரை வழிபட்டு இனிப்பு நைவேத்யம் படைத்தால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

  • ஜூலை 24 – சதுர்த்தி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஜெயம்  
    ரிஷபம்         – கவலை
    மிதுனம்     – பக்தி  
    கடகம்         –  பரிசு
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     உதவி
    விருச்சிகம்     –  சிக்கல்
    தனுசு         –     நோய்
    மகரம்         –    லாபம்
    கும்பம்         –      திறமை
    மீனம்         –      சாதனை  
    சந்திராஷ்டமம்    –         திருவாதிரை, புனர்பூசம்

  • ஜூலை 24 – சங்கடஹர சதுர்த்தி…

    ஜூலை 24 – சங்கடஹர சதுர்த்தி…
    குரோதி வருடம் – ஆடி 8
    ஜூலை 24 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை கா 11.01
    நட்சத்திரம் :  சதயம் இ 10.17
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஜூலை 23 – இன்றைய நல்லநேரம்…

    ஜூலை 23 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஆடி 7
    ஜூலை 23 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை ம 1.13
    நட்சத்திரம் :  திருவோணம் அ.கா 1.05
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : வடக்கு2
    பரிகாரம் : பால்

     

  • ஜூலை 23 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  போட்டி
    ரிஷபம்         – முயற்சி
    மிதுனம்     – தடங்கல்
    கடகம்         –  அன்பு
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    சாந்தம்
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  கடன்தீரல்  
    தனுசு         –     மேன்மை
    மகரம்         –    அசதி
    கும்பம்         –      புகழ்
    மீனம்         –      ஆதரவு  
    சந்திராஷ்டமம்    –         மிருகசீருஷம், திருவாதிரை

  • ஜூலை 22 – திருவோண விரதம்…

    ஜூலை 22 – திருவோண விரதம்…
    குரோதி வருடம் – ஆடி 6
    ஜூலை 22 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் :  பிரதமை ம 3.11
    நட்சத்திரம் :  உத்திராடம் அ.கா 2.07
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஜூலை 22 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அனுகூலம்
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – பகை
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   மகிழ்ச்சி  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     மேன்மை
    விருச்சிகம்     –  ஆர்வம்
    தனுசு         –     இன்பம்  
    மகரம்         –    தேர்ச்சி
    கும்பம்         –      நன்மை  
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –         ரோகிணி, மிருகசீருஷம்

  • தங்க கருட வாகனத்தில் தாழம்பூ சூடி எழுந்தருளிய வரதராஜ பெருமாள்…

    பிரசித்திபெற்ற தேவராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருடன் உற்சவத்தை முன்னிட்டு, தங்க கருட வாகனத்தில் தாழம்பூ சூடி வரதராஜ பெருமாள் எழுந்தருளிய  கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி அனந்த சரஸ் குளக்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜா பெருமாள் கோவிலில்  வருடத்தில் மூன்று கருட  சேவைகள்  வைகாசி ,ஆனி , ஆடி  மாதங்களில்  நடைபெறும்.  இந்த  ஆடி கருட  உற்சவம் கஜேந்திர மோட்சம் என அழைக்கப்படும்.

    காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் சாபம் பெற்ற கந்தர்வன் எனும் முதலை,, யானையின் காலை கவ்விய பொழுது யானையானது வலி பொறுக்காமல் பூக்களை தும்பிக்கையால் எடுத்து பெருமாளே என  அழைத்ததாகவும், யானையின் குரல் கேட்டு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சக்கரத்தை ஏவி யானையையும் முதலையையும் பிரித்து இருவருக்கும் மோட்சம் அளித்ததால் கஜேந்திர மோட்சம் என அழைக்கப்படுகிறது.

    இந்த நிகழ்வில் வரதர் தங்க  கருட வாகனத்தில் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி மல்லி ,முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு தருவித்த மாலைகள் அணிந்து ,கையில் தாழம் பூ சூடி, தேசிகர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அனந்த சரஸ் குளம்  அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் உற்சவம்  நடைபெற்றது .

    பின்னர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர் நான்கு மாட  வீதிகளை வலம் வந்து கோவிலை அடைந்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • ஜூலை 21 – பவுர்ணமி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  லாபம்
    ரிஷபம்         – நலம்
    மிதுனம்     – களிப்பு
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   பரிசு
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  கவலை
    தனுசு         –     அச்சம்
    மகரம்         –    உதவி
    கும்பம்         –      ஆதரவு
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –         ரோகிணி

  • ஜூலை 21 – ஆடி பவுர்ணமி…

    ஜூலை 21 – ஆடி பவுர்ணமி…
    குரோதி வருடம் – ஆடி 5
    ஜூலை 21 – 2024
    ஞாயிறு
    சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசு,
    அழகர்கோவில், வடமதுரையில் தேர்    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  பவுர்ணமி மா 4.51
    நட்சத்திரம் :  பூராடம் அ.கா 2.49
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்