Blog

  • சனிபிரதோஷம்… நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை….

    ஆவணி மாதத்தில் வரும் இரண்டாவது சனிபிரதோஷத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குருஸ்தலமான நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் வெகு விமரிணையாக நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் மழை பெய்ததால் பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் நாமபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இன்று ஆவணி மாதத்தில் வரும் இரண்டாவது சனிபிரதோஷ விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

    இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு எதிரே உள்ள நந்தி பெருமானுக்கு திரவியங்கள், மஞ்சள் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

    மேலும் உற்சவ பிரதோஷ மூரத்தி கோவில் உள்பிரகாத ஆலயத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு தீபாதாரணை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    இதில் சூறை காற்றுடன் பெய்த கனமழையும் பொருட்படுத்தாமல்  பக்தர்கள்  கலந்து கொண்டு சிவபுராணம் பாடல்கள் பாடியும் நந்தி பெருமானையும் சிவனையும் வழிபட்டு சென்றனர்.

  • செப்டம்பர் 01 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – அலைச்சல்
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   லாபம்  
    கன்னி         –    பக்தி
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  ஆர்வம்
    தனுசு         –    ஆதரவு
    மகரம்         –   பெருமை  
    கும்பம்         –     சிந்தனை
    மீனம்         –    நன்மை
    சந்திராஷ்டமம்    –         கேட்டை, மூலம்

     

  • செப்டம்பர் 01 – மாத சிவராத்திரி

    செப்டம்பர் 01 – மாத சிவராத்திரி
    குரோதி வருடம் – ஆவணி 16
    செப்டம்பர் 01 – 2024
    ஞாயிறு
    மாத சிவராத்திரி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 5.17
    நட்சத்திரம் :  ஆயில்யம் இ 11.49
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஆகஸ்ட் 31 – பிரதோஷ நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அனுகூலம்
    ரிஷபம்         – மகிழ்ச்சி
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  சாதனை
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    வரவு
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  முயற்சி
    தனுசு         –    ஓய்வு
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     சாந்தம்
    மீனம்         –    வளர்ச்சி
    சந்திராஷ்டமம்    –         அனுஷம், கேட்டை

  • ஆகஸ்ட் 31 – மகா பிரதோஷம்

    ஆகஸ்ட் 31 – மகா பிரதோஷம்
    குரோதி வருடம் – ஆவணி 15
    ஆகஸ்ட் 31 – 2024
    சனி
    மகா பிரதோஷம்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி அ.கா 4.42
    நட்சத்திரம் :  பூசம் இ 10.14
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஆகஸ்ட் 30 – சுபமுகூர்த்த நாள்

    ஆகஸ்ட் 30 – சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – ஆவணி 14
    ஆகஸ்ட் 30 – 2024
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  ஏகாதசி அ.கா 4.38
    நட்சத்திரம் :  புனர்பூசம் இ 9.09
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஆகஸ்ட் 30 – இன்று எந்த ராசிக்கு வரவு, எந்த ராசிக்கு செலவு…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  மகிழ்ச்சி
    ரிஷபம்         – பெருமை
    மிதுனம்     – நேர்மை
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   ஈகை
    கன்னி         –    சினம்  
    துலாம்         –     தனம்  
    விருச்சிகம்     –  அலைச்சல்
    தனுசு         –    கவனம்
    மகரம்         –   தோல்வி
    கும்பம்         –     அன்பு
    மீனம்         –    வாழ்வு  
    சந்திராஷ்டமம்    –         விசாகம், அனுஷம்

  • விநாயக பெருமானை பற்றிய அற்புத உண்மைகளை தெரிந்து கொள்வோம்…!

    விநாயகர் பெருமான் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார் விநாயகர். யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

    விநாயகர் பெருமான் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

    தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார். முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

    சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள். எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

     

  • ஆகஸ்ட் 29 – ஏகாதசி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  களிப்பு
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – ஆர்வம்  
    கடகம்         –  சாந்தம்  
    சிம்மம்         –   செலவு   
    கன்னி         –    பாசம்
    துலாம்         –     உறுதி
    விருச்சிகம்     –  உதவி
    தனுசு         –    கீர்த்தி
    மகரம்         –   சலனம்
    கும்பம்         –     லாபம்
    மீனம்         –    கவனம்
    சந்திராஷ்டமம்    –         சுவாதி, விசாகம்

  • ஆகஸ்ட் 29 – ஏகாதசி

    ஆகஸ்ட் 29 – ஏகாதசி
    குரோதி வருடம் – ஆவணி 13
    ஆகஸ்ட் 29 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  தசமி அ.கா 4.59
    நட்சத்திரம் :  திருவாதிரை இ 8.38
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்