Blog

  • கும்ப ராசிக்கு நவம்பர் மாதம் எதிர்ப்புகள் நீங்க செய்ய வேண்டியது…?

    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சனி (வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்  – தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  ராசியில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    எந்த கடினமான வேலைகளையும் சரியாக செய்து முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு யோகம் பெறுகிறீர்கள். எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.

    பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

    அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

    மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

    அவிட்டம்:

    இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

    ஸதயம்:

    இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

    பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 25, 26, 27

    அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • மகர ராசிக்கு நவம்பர் மாதம் காரிய தடைகள் நீங்க…

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞசம ஸ்தானத்தில் குரு(வ) – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன்  – லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  லாப  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த மாத பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல் களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

    பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.

    கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. உற்சாகமாக இருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு நல்ல பெயர் ஏற்படும்.

    அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும்.

    மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

    உத்திராடம்:

    இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

    திருவோணம்:

    இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    

    அவிட்டம்:

    இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 23, 24

    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • தனுசு ராசிக்கு நவம்பர் மாதம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்

    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூரியன்  – விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  ராசிக்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    யார் எந்த பிரச்சனை என்று வந்தாலும் அவர்களுக்கு சரியாக வழிகாட்டும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் குரு நல்ல பலன்களை பெறுவதற்கு உண்டான எல்லா வகைகளிலும் சஞ்சரிக்கிறார். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பேச்சு திறமை கை கொடுக்கும்.

    தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..

    கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

    மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

    மூலம்:

    இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

    பூராடம்:

    இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

    உத்திராடம்:

    இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • விருச்சிக ராசிக்கு நவம்பர் மாத ராசிபலன்…

    விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

    கிரகநிலை:

    ராசி ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சனி (வ) – பஞசம ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன்  என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  ராசியில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  ராசிக்கு  மாறுகிறார்.

    பலன்:

    சொல் போல் செயலும் இருக்க வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.  

    தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

    குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

    பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

    கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

    விசாகம்:

    இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

    அனுஷம்:

    இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

    கேட்டை:

    இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

    பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 18, 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • துலாம் ராசிக்கு செல்வம் சேர செல்வாக்கு உயர…

    துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சூரியன்  – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பஞசம ஸ்தானத்தில் சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  ராசியில்  இருந்து  சூர்யன்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    அளவான பேச்சுடன் வேலையை சரியாக செய்து முடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.  புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும்.   எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

    குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.

    கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

    அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

    சித்திரை:

    இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

    ஸ்வாதி:

    இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், நக்ஷத்ரநாதன் ராகு தனது பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

    விசாகம்:

    இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

    பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 16, 17

    அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • அக்டோபர் 25 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  தடங்கல்
    ரிஷபம்         – நஷ்டம்
    மிதுனம்     – வெற்றி  
    கடகம்         –  ஆர்வம்
    சிம்மம்         –   புகழ்
    கன்னி         –    சுபம்
    துலாம்         –     தோல்வி
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –    லாபம்
    மகரம்         –   களிப்பு
    கும்பம்         –     வரவு
    மீனம்         –    காரியசித்தி
    சந்திராஷ்டமம்    –        கேட்டை, மூலம்

  • அக்டோபர் 25 – வெள்ளி

    அக்டோபர் 25 – வெள்ளி
    குரோதி வருடம் – ஐப்பசி 08
    அக்டோபர் 25 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30    
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : நவமி
    திதி நேரம் :  அஷ்டமி கா 7.06
    நட்சத்திரம் :  பூசம் ம 1.00
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்க இதை செய்ங்க…!

    கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன்  – தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    ரகசியம் காக்க வேண்டிய விஷயங்களை மறைத்து விடும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும்.

    தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு  கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம்.

    குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.

    பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

    கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

    சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

    உத்திரம்:

    இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    ஹஸ்தம்:

    இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குருவின் பார்வையால் உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

    சித்திரை:

    இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

    பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம்  பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • சிம்ம ராசிக்கு நவம்பர் மாதம் பொருளாதார நிலை உயரும்…

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன்  – சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சனி (வ) – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் குரு(வ) – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    எதைக்கண்டும் அஞ்சாமல் தைரியமாக நிமிர்ந்து நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம்  முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

    குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும்.  வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.

    பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.  எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்.

    கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

    மகம்:

    இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

    பூரம்:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    உத்திரம்:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும்.

    பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

    சந்திராஷ்டம தினங்கள் : 12, 13

    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • கடக ராசிக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்கும்?

    கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சூரியன்  – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இனிமையான பேச்சின் மூலமாக காரியங்களை சாதிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள்.  நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.  எந்திரங்கள் மற்றும்  தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

    பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும்  அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

    கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

    மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

    பூசம்:

    இந்த மாதம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

    ஆயில்யம்:

    இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.  வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா  பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 10, 11

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்