Blog

  • January 14 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பேராசை
    ரிஷபம்         –  நிறைவு
    மிதுனம்     –   சுகம்
    கடகம்         –  பகை
    சிம்மம்         –   சலனம்
    கன்னி         –    குழப்பம்     
    துலாம்         –     சோதனை   
    விருச்சிகம்     –  பரிவு
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    எதிர்ப்பு
    கும்பம்         –      ஆதாயம்  
    மீனம்         –      போட்டி
    சந்திராஷ்டமம்    –      புனர்பூசம், பூசம்

  • January 14 2024 Bogi

    ஜனவரி 14 – போகிப் பண்டிகை
    சோபகிருது வருடம் – மார்கழி 29
    14-ஜன-2024 ஞாயிறு
    போகி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை ம 12.21
    நட்சத்திரம் : அவிட்டம் ம 2.44
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : மேற்கு

     

  • Melmalayanur Angalamman Rajakaliamman show in the decoration!

    மேல்மலையனூர் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் காட்சி!

    மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் மார்கழி மாத அமாவாசை தினத்தில் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  • Special Abhishekam Aradhana for 18 feet tall Anjaneya!

    18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை! 

    அனுமன் ஜெயந்தியை ஒட்டி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

  • Maha Chandi Homam Festival at Angala Parameswariyamman, Kalishakti Peedam Temple

    அங்காள பரமேஸ்வரியம்மன், காளிசக்தி பீடம் ஆலயத்தில் மஹா சண்டி ஹோமம் திருவிழா

     

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன், காளிசக்தி பீடம் ஆலயத்தில் மஹா சண்டி ஹோமம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

  • January 13 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பொறுமை
    ரிஷபம்         –  நட்பு
    மிதுனம்     –   செலவு
    கடகம்         –  உற்சாகம்  
    சிம்மம்         –   நன்மை  
    கன்னி         –    விருத்தி    
    துலாம்         –     உழைப்பு  
    விருச்சிகம்     –  நற்செயல்
    தனுசு         –     அமைதி
    மகரம்         –    ஆதாயம்
    கும்பம்         –      போட்டி
    மீனம்         –      ஆக்கம்
    சந்திராஷ்டமம்    –      திருவாதிரை, புனர்பூசம்

  • January 13 2024 Indrayanaal

    ஜனவரி 13 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 28
    13-ஜன-2024 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : துவிதியை ம 2.35
    நட்சத்திரம் : திருவோணம் மா 4.16
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • thai month viradhangal

    தை பொங்கல் திருநாள் முதலாக, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம், தை கிருத்திகை ஆகியன நாமறிந்த சிறப்பான நாட்கள். தை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய வேறு சில வழிபாடுகளும் உண்டு.

    சாவித்ரி கௌரி விரதம்: தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய  விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும்.

    பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…

    ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.

    நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம். பைரவ வழிபாடு: தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

    வீரபத்திர வழிபாடு: மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.

  • Kothandaraman koil hanumal jayanthi

    காரைக்காலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பத்து ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயர் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

    காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள், உற்சவர் ஸ்ரீகோதண்டராமர் மற்றும் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.

    இதில் பால்,தயிர், மஞ்சள், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், திரவியப்பொடி மற்றும் பலவகை பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தார் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • January 12 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – போட்டி
    ரிஷபம்         –  சிரமம்
    மிதுனம்     –   உற்சாகம்
    கடகம்         –  நஷ்டம்
    சிம்மம்         –   முயற்சி   
    கன்னி         –    செலவு    
    துலாம்         –     ஆக்கம்  
    விருச்சிகம்     –  இன்பம்
    தனுசு         –     பாசம்
    மகரம்         –    மறதி
    கும்பம்         –      லாபம்
    மீனம்         –      அமைதி
    சந்திராஷ்டமம்    –      மிருகசீருஷம் , திருவாதிரை