இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – அசதி
கடகம் – வேலை
சிம்மம் – செலவு
கன்னி – சினம்
துலாம் – புகழ்
விருச்சிகம் – வெற்றி
தனுசு – முயற்சி
மகரம் – ஊக்கம்
கும்பம் – லாபம்
மீனம் – அறிவு
சந்திராஷ்டமம் – உத்திரம், ஹஸ்தம்
Blog
-
February 16 2024 Rasipalan
-
February 16 2024 Karthigai
பிப்ரவரி 16 – கார்த்திகை
சோபகிருது வருடம் – மாசி 4
கார்த்திகை
16-பிப்-2024 வெள்ளி
ரத சப்தமி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : திதித்துவயம்
திதி நேரம் : சப்தமி ம 3.04
நட்சத்திரம் : பரணி ம 2.34
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Thiruthani masi bramorchavam
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா பிரம்மோற்சவ நிகழ்ச்சி இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்நிகழ்வு10 நாட்களுக்கு நடைபெற உள்ளது இந்த நாட்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் உற்சவர் முருகப்பெருமான் புலி வாகனம் யானை வாகனம் திருத்தேர் போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதனைத் தொடர்ந்து மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணம் பிப்ரவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மலைக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் அதிகாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் மகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
-
thiruporur murugan temple kodiyetram
திருப்போரூர் முருகர் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா தங்க கொடி மரத்தில் கொடியேற்றி பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் துவங்கியது. மாசி மாதம் முருக பெருமானுக்கு பிரம்மோற்சவ திருவிழா நடைப்பெருவது வழக்கம்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் தங்க கொடி மரத்தில் பக்தர்களின் அரோகரா அரோகரா என்ற கோஷம் வின்னை முட்ட கொடியேற்றம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தெய்வானை முருகப் பெருமானை வழிபட்டனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21ம் புதன்கிழமையும், வள்ளி முருகப்பெருமான் திருக்கல்யாணம் வரும் 27ம் தேதியும் நடைபெறவுள்ளது.
-
February 15 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – அமைதி
மிதுனம் – உயர்வு
கடகம் – களிப்பு
சிம்மம் – வரவு
கன்னி – பெருமை
துலாம் – பரிவு
விருச்சிகம் – அசதி
தனுசு – களிப்பு
மகரம் – பொறுமை
கும்பம் – நன்மை
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – பூரம், உத்திரம் -
February 15 2024 sasti viradham
பிப்ரவரி 15 – சஷ்டி விரதம்
சோபகிருது வருடம் – மாசி 3
15-பிப்-2024 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி மா 4.36
நட்சத்திரம் : அசுவினி ம 3.30
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
February 14 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நட்பு
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – ஆக்கம்
கடகம் – மறதி
சிம்மம் – வலிமை
கன்னி – மேன்மை
துலாம் – பக்தி
விருச்சிகம் – புகழ்
தனுசு – வெற்றி
மகரம் – செலவு
கும்பம் – உயர்வு
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – மகம், பூரம் -
February 14 2024 Vasantha panjami
பிப்ரவரி 14 – வசந்த பஞ்சமி
சோபகிருது வருடம் – மாசி 2
14-பிப்-2024 புதன்
வசந்த பஞ்சமி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி மா 6.28
நட்சத்திரம் : ரேவதி மா 4.39
யோகம் : மரணயோகம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Kottai mariamman koil kodiyetram
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 23ஆம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் அன்று மாலை திருத்தேர் உலாவும்
24 ஆம் தேதி தசாவதாரம்
25ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதல் நடைபெறும்
27 ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது
-
Masi month magimaigal
மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம் என்றும் சொல்வார்கள். எனவே மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது என்கிறார்கள். இந்தக் காரணங்களால்தான், உபநயனம் என்கிற பூணூல் கல்யாண வைபவத்தை, மாசி மாதத்தில் நடத்துகின்றனர். மாசி மாதத்தில்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடல் புராணம்.
முழுமுதற்கடவுளான விநாயகரை, மாசி மாத சங்கடஹர சதுர்த்தியில் விசேஷமாக வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.
முருகக் கடவுளுக்கும் உகந்தது மாசி மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தந்தை சிவபெருமானாருக்கு பிரணவ உபதேசம் செய்து ஞானகுரு எனப் பெயரெடுத்தார்.
மாசி மக நன்னாளில், தேவியை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். சோகத்தையும் துக்கத்தையும் விரட்டியடிக்கும். மாசி மாத சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவதால் கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.
காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா விமரிசையாக பல ஆலயங்களில் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம். வாடகை வீடு மாறுவதற்கும் உகந்த உன்னதமான மாதம்.