Blog

  • February 20 2024 Sarva Egadasi

    பிப்ரவரி 20 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – மாசி 8
    20-பிப்-2024 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி ம 1.11
    நட்சத்திரம் : திருவாதிரை ம 3.13
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • hosur koil kumbabishegam

    கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அடுத்த  தேன்கனிக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான சௌந்தர்யவல்லி சமேத  ஸ்ரீ பேடராயசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.  

    கடந்த 16ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கிய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.  மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 16ம் தேதி ரக்ஷாபந்தனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.17ஆம் தேதி யாகசால பிரவேசம் கலச ஸ்தாபன சாந்தி ஹோமம் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. 18ம் தேதி பிரதிஸ்தாபன ஹோமம், கோபுர கலச அபிஷேகம், தத்துவ ஹோமம் நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நித்யாராதனம், பிரதிஷ்டான ஹோமம், மகா பூர்ணாஹுதி, பிராண பிரதிஷ்டை, மந்திர புஷ்பம், யாகசாலை பூஜைகள் நடந்தன.  

    பின்னர், வேத பண்டிதர்கள் புனித நாடி தீர்த்தங்களுடன் வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நாடி தீர்த்தங்களை ஊற்றி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்தினர்.  பின்னர் மகா மங்களஹாரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி ஹெலிகாப்டர் மூலம் கோவில் கோபுர கலசங்களுக்கு மூன்றுமுறை பூக்களால் தூவப்பட்டது.அப்போது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

  • February 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நன்மை
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     –  துயரம்
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   பயம்
    கன்னி         –    தனம்
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  அமைதி
    தனுசு         –     கவலை
    மகரம்         –    முயற்சி
    கும்பம்         –      ஜெயம்
    மீனம்         –      உதவி
    சந்திராஷ்டமம்    –       சுவாதி, விசாகம்

  • February 19 2024 Subamuhurthanaal

    பிப்ரவரி 19 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – மாசி 7
    சுபமுகூர்த்த நாள்
    19-பிப்-2024 திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி ம 12.55
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் ம 2.21
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • February 18 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     போட்டி
    ரிஷபம்         – நஷ்டம்
    மிதுனம்     –   மறதி
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   சலனம்
    கன்னி         –    கவனம்
    துலாம்         –     தோல்வி
    விருச்சிகம்     –  கஷ்டம்
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    போட்டி
    கும்பம்         –      உயர்வு  
    மீனம்         –      பரிவு
    சந்திராஷ்டமம்    –       சித்திரை, சுவாதி

  • February 18 2024 Indrayanaal

    பிப்ரவரி 18 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 6
    18-பிப்-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : தசமி
    திதி நேரம் : நவமி ம 1.10
    நட்சத்திரம் : ரோகிணி ம 1.57
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Sri sailam thangaradham

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீசைல மல்லிகார்ஜுனசுவாமி கோயிலுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதத்தை காணிக்கையாக வழங்கினார்.

    ஸ்ரீசைல பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமிக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி. வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது மனைவி ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதத்தை காணிக்கையாக வழங்கினர்.  முன்னதாக சாஸ்திர சம்பிரதாயங்களோடு பூஜைகள் செய்தனர்.  

    தங்க ரதத்திற்கு அர்ச்சகர்கள் சம்ப்ரோக்ஷண ​​நிகழ்ச்சிகளை நடத்தினர்.  23.6 அடி உயர தேரில் சுவாமியும், அம்பாளும் கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

  • February 17 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     பக்தி
    ரிஷபம்         – பெருமை
    மிதுனம்     –   சுகம்
    கடகம்         –  மேன்மை   
    சிம்மம்         –   தோல்வி
    கன்னி         –    மறதி
    துலாம்         –     தேர்வு  
    விருச்சிகம்     –  வரவு
    தனுசு         –     சுகம்
    மகரம்         –    எதிர்ப்பு
    கும்பம்         –      தேர்ச்சி  
    மீனம்         –      அனுகூலம்
    சந்திராஷ்டமம்    –       ஹஸ்தம், சித்திரை

  • February 17 2024 Indrayanaal

    பிப்ரவரி 17 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 5
    17-பிப்-2024 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி ம 1.52
    நட்சத்திரம்: கார்த்திகை ம 2.02
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Thirupathy radha sapdami

    ரதசப்தமி  உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு இன்று காலை திருப்பதி மலையில் நடைபெற்றது.சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலிலிருந்து எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நைவேத்தியங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே அதிகாலை முதல் ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    தட்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்கி உள்ள நிலையில் உத்தராயன காலத்தில்  இன்று சூரிய பகவான் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தை துவக்கும் நாள் ஆகும்.  இன்றைய நாளை சூரிய ஜெயந்தி நாள் என்றும் கூறுவார்கள்.