Blog

  • திருப்பதி கோயிலில் 7 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்பயாகம்

    திருப்பதி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 7வது நாள் புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கைவிடப்பட்ட இந்த புஷ்ப யாகத்தை 1980ம் ஆண்டு முதல் மீணடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவனம் ( திருவேணம் ) நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி திருமலை பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து துளசி, சாமந்தி, மல்லிகை, முல்லை, தாழம்பூ, ரோஜா, தாமரை, உள்ளிட்ட 18 வகையான 7 டன் மலர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. புஷ்பயாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட சுகந்த திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு நட்சத்திர ஆரத்தி நடந்தது. தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 7 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு வேத மந்திரம் முழங்க புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சகஸ்கர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், அறங்காவலர் குழுத்தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • எலுமிச்சையின் மகிமை

    ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

    இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு.

    வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

    மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

  • எலுமிச்சையின் மகிமை

    ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

  • எலுமிச்சையின் மகிமை

    ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

    இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு.

    ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

  • எலுமிச்சையின் மகிமை

    ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

  • ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நிறைவு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய தெப்ப திருவிழா நிறைவடைந்தது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் உள் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார்.
    அங்கு மாலை வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து மாலையில் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பந்தக்காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பின்னர் படிப்பு கண்டருளி இரவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய தெப்ப திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

  • திருப்பதி கோவில் தெப்போற்சவ விழா….

    திருப்பதியில் வருடாந்திர தெப்போற்சவ விழா தொடங்கியது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று சீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீராமர் வலம் வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசி மாத ஏகாதசியன்று தொடங்கி பவுர்ணமியன்று முடிவு பெறும் விதமாக தெப்போற்சவ விழா நடை பெறுவது வழக்கம். அதன்படி, ஏகாதசியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. இந்த தெப்போற்சவ விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தின் நடுவே இரண்டடுக்கு தெப்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமர் உற்சவ மூர்த்திகள் 5 முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இதனை கான திரளான பக்தர்கள் திரண்டனர். விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • திருச்செந்தூரில் மாசித் திருவிழா….

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஏழாம் நாளில் மாலையில் சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருக்கோயிலில், மாசித் திருவிழா மார்ச் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்று வருகிறது. ஆறாம் திருநாளான மார்ச் 6 ஆம் தேதி காலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி ,வீதியுலா நடைபெற்றது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன செந்தில் அருள்பணி கட்டளை மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் மற்றும் ஜெயந்திநாதர் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. ஏழாம் திருநாளான மார்ச் 7 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருக்கோயிலில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் சண்முகவிலாச மண்டபத்திலிருந்து சுவாமி ஆறுமுக நயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின், மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மார்ச் 8ஆம் தேதி எட்டாம் திருநாளை முன்னிட்டு அதிகாலை பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று, முற்பகல் 11.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.

  • ஏழுமலையானுக்கு தங்க சடாரி

    திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க சடாரி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
    தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை அடுத்த கைரதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமானவர் ராமசந்திரா ரெட்டி என்பவர், தனது மகன் கங்கேந்திர ராமானுஜ ரெட்டியின் 15-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தங்க சடாரி ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க உள்ளார்.
    ரூ. 17 லட்சம் மதிப்புள்ள இந்த தங்க சடாரியை வரும் நேற்று ஏழுமலையானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷகம்….

    திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபி ஷேகம் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 4-ம் தேதி சனிக்கிழமை நவக்ரஹ ஹோமம், பூர்ணாஹூதி, யாகசாலை நிர்மாணம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றது. 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சாந்தி ஹோமம், யாத்ரா ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று 2-வது கால ஹோமம், 2-வது கால யாக பூர்ணாஹூதி, 3-வது கால யாகசாலை பூஜை மற்றும் 3-வது கால யாக பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன. மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை, 11-மணிக்கு 4-வது கால யாக மஹாபூர்ணாஹூதி, பகல் 12 மணிக்கு அம்மன் அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாகசாலை பூஜை, 5-வது கால மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேக தினமான மார்ச் 8-ம் தேதி காலை 6 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜையும், 7 மணிக்கு பரிவார யாக சாலைகள் மஹா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு யாத்ரா தானம் கடப்புறப்பாடும், காலை 9 மணியில் இருந்து 10.15 மணிக்குள் ராஜகோபுரம் அனைத்து விமானங்கள், பரிவாரங்கள், விநாயகர், சண்முகர், அம்பாள், துர்க்கை, சண்டிகேஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு தீபாராதனையும், பிற்பகல் 3 மணிக்கு மஹாபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் திருவீதியுலா மற்றும் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.