திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாசுதர்சன ஹோமம் நடைபெற்றது. வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக நன்மைக்காகவும் மக்கள் மகிழ்ச்சியுற வேண்டி காலை முதல் வேள்வி தொடங்கப்பட்டு நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் கலந்துக்கொள்வதால் ஏவல், பகைமை, வாழ்வில் செழிமை, நன்மக்கள் பேறு, நோயின்மை ஆகியவை பெற்று வளமுடன் வாழலாம் என்பதால் திரளான பொதுமக்கள் ஹோமத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து உலகநன்மைக்காக 1008பாராயணம் நடைபெற்றது. பின்னர் சுதர்சன பெருமாளுக்கு பூஜிக்கப்பட்ட கலங்களை விற்பன்னர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.
Blog
-
கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாசுதர்சன ஹோமம்….
-
காளஹஸ்தி கோயிலில் வெள்ளிக் கட்டிகளை விற்பனைக்கு!
காளஹஸ்தி சிவன் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள வெள்ளிக் கட்டிகளை விற்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வருகின்றனர்.
பரிகார பூஜையின் போது அளிக்கும் வெள்ளி நாகர் உருவங்களை பூஜைக்குப் பின், பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன் கோயில் நிர்வாகம் பூஜைக்கான நாகர் உருவங்களை ஒப்பந்தப்புள்ளி மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகம் உண்டியலில் கிடைக்கும் வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி வெள்ளிக் கட்டிகளாக மாற்றி, நாகர் உருவங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், பல்லாண்டுகளாக கோயிலின் பாதுகாப்பு அறையில் நிலுவையில் உள்ள சுமார் 17 ஆயிரம் கிலோ பழைய வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி, அதிகாரிகள் வெள்ளிக் கட்டிகளாக மாற்றி உள்ளனர்.
இதனை தற்போது கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ரூ. 75 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். -
காளஹஸ்தி கோயிலில் வெள்ளிக் கட்டிகளை விற்பனைக்கு!
காளஹஸ்தி சிவன் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள வெள்ளிக் கட்டிகளை விற்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வருகின்றனர்.
பரிகார பூஜையின் போது அளிக்கும் வெள்ளி நாகர் உருவங்களை பூஜைக்குப் பின், பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன் கோயில் நிர்வாகம் பூஜைக்கான நாகர் உருவங்களை ஒப்பந்தப்புள்ளி மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகம் உண்டியலில் கிடைக்கும் வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி வெள்ளிக் கட்டிகளாக மாற்றி, நாகர் உருவங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், பல்லாண்டுகளாக கோயிலின் பாதுகாப்பு அறையில் நிலுவையில் உள்ள சுமார் 17 ஆயிரம் கிலோ பழைய வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி, அதிகாரிகள் வெள்ளிக் கட்டிகளாக மாற்றி உள்ளனர்.
இதனை தற்போது கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ரூ. 75 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். -
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரம்பா
நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தையுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
நடிகை ரம்பா கடந்த 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபரான இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கனடாவில், கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நடிகை ரம்பா கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விருப்ப மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ரம்பாவுடன் சேர்ந்து வாழ அவரது கணவரும் விருப்பம் தெரிவித்ததன் பேரில் இருவரும் தற்போது சேர்ந்துள்ளனர்.
இருவரும் சேர்ந்த பிறகு தங்களது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து முதல் தரிசனமாக திருப்பதி சென்று ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்துள்ளனர். -
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 18ம் தேதி தேரோட்டம்….
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் மேற்கொள்ளும் பச்சை பட்டினிவிரதம் கடந்த மாதம் 12ம் தேதி துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் கடந்த 4 வாரமாக அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
பச்சைப்பட்டினி விரதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவின் 10ம் திருநாளான வரும் 18ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடைபெறுகிறது. 13ம் திருநாளான 21ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். -
திருவண்ணாமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர மூலவர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மூலவர் சந்நிதியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்துக்கு புறப்பட்ட அம்மன்: இரவு 7 மணிக்கு தனது தாய் வீடான குமரக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் எழுந்தருளினார்.
பின்னர், திருக்கல்யாண உற்சவத்துக்காக ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி மேளதாளங்களுடன் அம்மன் சென்றடைந்தார்.
மாலை மாற்றும் நிகழ்வு: இரவு 10.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் அருகே ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. -
நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதிஉலா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களுடன் வீதிஉலா வந்த கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
சைவத் தலங்களில் முக்கிய தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 7ஆவது நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் மற்றொரு முக்கிய விழாவான அறுபத்து மூவர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி கோலவிழி அம்மன், விநாயகர் உற்சவர்களைத் தொடர்ந்து, அறுபத்து மூவர் வீதியில் வலம் வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சியளித்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தனர்.
பதினாறுகால் மண்டபத்தை இரவு 9.40 மணிக்கு அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்: அறுபத்து மூவர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் தனியார் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. -
பங்குனி உத்திர விரத முறை!
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மணம் செய்து கொண்டார். இந்தவிழா முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தா அவதரித்ததும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான். உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும். உத்திர விரத முறை: பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இளைஞர்களே 48 ஆண்டு விரதமிருங்க: பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம். சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது
-
பங்குனி உத்திரம் சிறப்பு நிகழ்ச்சிகள் ….
பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பங்குனி உத்திரத்திற்கு இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக அந்த நாளில் புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மனத பண்டிகைகளையும் கொண்டுள்ளது. அதோடு அல்லாமல் அன்று பெளர்ணமியும் உள்ளது.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம். -
பங்குனி உத்திரத்தின் மகிமைகள்…
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.
அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி – பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் – ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.