திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் 24 மணி நேரமும் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா அல்லது நிறைம்பி வழிகின்றதா? தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறை எங்கு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த தொலை பேசி எண்கள் உதவும்…
மூல் மட் மின் தொலைபேசி எண் : 0877-2277499.
புஷ்பா மாண்டபம் தொலைபேசி எண்: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் தொலைபேசி எண்: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) தொலைபேசி எண் 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் தொலைபேசி எண் 0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் தொலைபேசி எண் 0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை தொலைபேசி எண்: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் தொலைபேசி எண்: 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் தொலைபேசி எண்-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் தொலைபேசி எண்-0877-2277397.
உடுப்பி மட் தொலைபேசி எண்-0877-2277305.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் தொலைபேசி எண்: 0877-2277826.
ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் தொலைபேசி எண்: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா
ஜீயர் மட் தொலைபேசி எண்: 0877-2277301.
ஸ்ரீ சிருங்கரி சரத மடம் தொலைபேசி எண்: 0877-2277269,2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் தொலைபேசி எண் 0877-2279440.
ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடிபி மட் தொலைபேசி எண்: 0877 222 77305
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் தொலைபேசி எண்: 0877 222 77301)
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் தொலைபேசி எண் 0877 222 77370)
ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் தொலைபேசி எண்: 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி தொலைபேசி எண் : 0877 222 77436
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் தொலைபேசி எண் 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம் தொலைபேசி எண்: 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட் பட் தொலைபேசி எண்: 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் தொலைபேசி எண்: 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம்
மோதிலால் பன்சிலால் தர்மசாலா தொலைபேசி எண்: 0877 222 77445
ஹோட்டல் நரிலமா சௌல்ரி தொலைபேசி எண்: 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி தொலைபேசி எண்: 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் தொலைபேசி எண் : 0877 222 77240
கர்நாடகா விருந்தினர் மாளிகை தொலைபேசி எண் 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் தொலைபேசி எண்: 0877 222 77245
ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் தொலைபேசி எண்: 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் தொலைபேசி எண்: 0877-2220015
Blog
-
திருப்பதி போறீங்களா… உங்களுக்கான முக்கிய தகவல்…
-
மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15 சபரிமலை நடை திறப்பு….
சபரிமலை, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சபரிமலை நடை திறப்பது தமிழக காலண்டர் படி ஒரு நாள் முன்னதாக திறக்கிறது. இது தமிழக- கேரள பஞ்சாங்க கணிப்பில் ஏற்பட்ட சிறு வித்தியாசத்தால் ஏற்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை நடை எல்லா தமிழ் மாதத்தின் கடைசி நாளில் மாலை ஐந்து மணிக்கு திறந்து அடுத்த தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. தமிழக காலண்டர் படி ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி அதாவது அக்டோபர் 18 ஆகும், அன்று தீபாவளி. ஆனால் கேரள காலண்டர் படி ஐப்பசி ஒன்றாம் தேதி 17-ம் தேதி ஆகும். இதனால் சபரிமலை நடை அக்டோபர், 16-ம் தேதி மாலையில் திறந்து 17 முதல் 21 வரை பூஜைகள் நடைபெறும்.அதுபோல கார்த்திகை ஒன்றாம் தமிழக காலண்டர்களில் நவம்பர் 17-ல் வருகிறது. ஆனால் கேரளாவில் நவம்பர் 16-ம் தேதி கார்த்திகை ஒன்றாம் தேதியாகும். இதனால் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவம்பர் 15-ம் தேதி மாலை திறக்கும்.
-
திருமலையில் தேரில் மலையப்பர் பவனி …
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையான 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்நிலையில், 8ம் நாளான இன்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் மலையப்பர் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரின் மீது உப்பு, மிளகு போன்றவைகளை தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பவனி வந்து அருள் பாலித்தார்.
-
அதிசயம்! தலைகீழாக விழும் கோபுர நிழல்…
இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது. அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.
பெங்களூரு- குண்டக்கல் சாலையில் அமைந்துள்ள ஹம்பி, விஜய நகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. இங்குள்ள பம்பபதி மற்றும் விருபாட்சர் சிவன் கோவில்கள், கலை பொக்கிஷமாக திகழ்கின்றன. அன்னை பார்வதி, பம்பா தேவி என்ற பெயரில் பூமியில் பிறந்தாள். இத்தலத்தில் தவமிருந்து, சிவனைக் கணவராக அடைந்தாள். அரக்கர்களை வெல்வதற்காக வீரம் மிக்க ஆண் குழந்தையை பெற்றாள். பம்பாதேவியை மணந்த சிவன் இங்கு லிங்க வடிவில் கோவில் கொண்டார். சிவனுக்கு “பம்பபதி’ என்றும், ஊருக்கு “பம்ப ஷேத்திரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் “ஹம்பி’ என மாறியது. கோவிலின் வெளி பிரகாரம் மிகப் பெரியது. இதிலுள்ள ஒரு மண்டபத்தில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபம் சிறிய அளவில் உள்ளது. இதன் நடுவே செல்லும் வடிகால் கால்வாய் வழியாக துங்கபத்திரா ஆற்று நீர் மடப்பள்ளியை அடைந்து, வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. இங்குள்ள ராயர் கோபுரம் மூன்று தளங்கள் கொண்டது. இதைச் சுற்றிலும் சிறிய சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் என ஒரு நகரத்தைப் போல கட்டமைத்துள்ளனர். கலை ஆர்வலர்கள் இந்தக் கோவில்களுக்கு சென்று வரலாம். இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது. -
விஜயதசமி அ,ஆ… எழுதும் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு அ, ஆ.. எழுத கற்று கொடுத்தனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சக்தியை 3 நாள் துர்க்கையாகவும், 3 நாள் லெட்சுமியாகவும், 3 நாள் சரஸ்வதியாகவும் வழிபடுவார்கள். 9வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவின் 10வது நாளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரியவர்கள் மடியில் அமர செய்து, அரிசியில் குழந்தைகளுக்கு எழுத்து எழுத கற்று கொடுத்தனர். முதலில் அ, ஆ.. எழுத செய்தனர். ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயதசமியில் ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியுடன் கைகூடும் என்பது நம்பிக்கை ஆகும். இதே போல் நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளில் நேற்று குழந்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த விஜயதசமி திருநாளின் போது ஏராளமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும் பெற்றோரின் வழக்கம்.சரஸ்வதி பூஜையன்று பள்ளியில் சேர்ந்தால் தன் குழந்தை நன்றாகப் படிக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோரின்நம்பிக்கையும் கூட.
-
கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது?
நவராத்திரி திருநாளில் பத்து நாட்களும் , விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து தெய்வத்தின் நாமாவளிகளை பாடி மகிழ்ந்தோம். உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் என பலரையும் அழைத்து உறவுகளையும் மேம்படுத்தும் திருநாளாக அமைந்தது நவராத்திரி பெரு விழா. இந்துகளின் பண்டிகைகளில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவான நவராத்திரி கால கட்டத்தில் நமது வீட்டில் அனைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது.நம் வீட்டில் வைத்திருந்த கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு எல்லா அனுக்ரஹங்களும் சர்வ நிச்சயமாக வந்து சேரும்.
நவராத்திரி திருநாளில் போற்றி வைத்திருக்கும் கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது. இந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.
கொலு பொம்மைகளை பராமரிக்க எளிய வழிகள்
முதலில் கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்குவதற்கு முன் கொலு படிகளை நன்றாக சரிபார்க்க வேண்டும். கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும். கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். கொலு பொம்மைகளை அழுத்தி துடைக்ககூடாது.தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் படைத்த தின்பண்டகளை எடுத்து விட வேண்டும். எலி போன்ற ஜீவ ராசிகள் கொலு படியை தள்ளி விடக்கூடும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை.
இப்படி கொலுவை பாதுகாத்த நாம் கொலு முடிந்தவுடன் இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்வது அடுத்த வருடத்துக்கு கொலு வைக்கும் போது எளிதாக இருக்கும்.கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை எழுதிவைத்து கொள்வதும் குழப்பங்களை தவிர்க்க உதவும். அடுத்த வருடம் கொலு வைக்கும்போது நம்மிடம் இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு பயன்படும்.
.
கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடுக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .பெட்டிகளில் பொம்மைகளை அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிற்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.
எவ்வளவு ஆர்வத்துடன் கொலு வைக்கின்றோமோ அந்த ஆர்வத்துடனே பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,
இந்த பராமரிப்பு அடுத்தாண்டு கொலுவை மேலும் சிறப்பிக்கும்.
-
ஆயக் கலைகளின் நாயகியை போற்றுவோம்
நம்முடைய இந்து மதத்தில், கல்விக்குரிய தெய்வமாக சரஸ்வதியைப் போற்றுகிறோம். கலைமகள், சியாமளா என்றெல்லாம் அழைக்கப்படும் கலைவாணி முப்பெருந்தேவியரில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆயகலைகள் 64ல் கல்வி மட்டுமல்லாமல் அனைத்து கலைகளுக்கும் அதிபதி கலைமகள்.
வெண்ணிறத் தாமரைப் பூவில் உறைபவளான கலைமகளுக்குரிய வாகனம் வெண்ணிறப் பறவையான அன்னம். அவள் உடுத்தும் ஆடையும் பளிங்கு நிற தூய வெள்ளைப் புடவை. அழகுத் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் முத்துக்களால் ஆன ஜபமாலையும் வெள்ளை. சரஸ்வதியை மனக்கண்ணில் நிறுத்தி காணும் போது தூய்மைக்கு இலக்கணமாகத் திகழும் வெள்ளை நிறம் தான் நம் உள்ளத்தை நிறைக்கும். இதன் தாத்பரியம் எந்த ஒரு கலையில் நாம் சிறந்து விளங்க வேண்டுமானாலும், நம் உள்ளம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே. உள்ள அர்ப்பணிப்போடு, கலையை கற்பிப்பவர்கள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்காக தான் ,வெண்மை நிறத்தை சரஸ்வதிக்குரியதாக வைத்தனர். வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளும் வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு தான் வேண்டிய ஞானத்தை வாரி வழங்குகிறாள்.
சரஸ்வதிதேவி என்றதும்,வெண்மை நிறத்திற்கு அடுத்து அவள் கையில் இருக்கும் வீணை தான் நம் நினைவிற்கு வரும். கல்விக்கு எல்லை என்பதே கிடையாது. மேலும் கல்வியின் சிறப்பே, எடுக்க எடுக்க ஊறும் ஊற்றைப் போல அடுத்தவர்க்கு சொல்லி கொடுக்க கொடுக்க கற்பிப்பவர்களுக்கும் ஞானம் வளரும். எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள விஜயதசமி நன்னாளே சிறந்தது. சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள் சரஸ்வதி தேவியின் மூலமந்திரம், அஷ்டோத்ர நாமம் , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,நாமாவளி ,ஸ்லோகங்கள் ஜெபித்து வழிபட கலைகள் வசப்படும்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி பல நாமங்களால் போற்றப்படுகிறாள். பாரதி , சரஸ்வதி, சாரதா தேவி, ஹம்சவாகினி, ஜகதீக்யாதா,மகேஸ்வரி,கௌமாரி, பிரம்மச்சாரிணி, வித்யதாத்ரிணி,வரதாயினி,ருத்ரகண்டா,புவனேஸ்வரி.
வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச் சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும் ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை நாள்தோறும் சொல்லலாம்.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே! கல்வித் தொடக்கத்தை செய்கிறேன். அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!
இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.
சரஸ்வதி காயத்திரி மந்திரம் :
‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
பீதவர்ணாயை தீமஹி தன்னோ
பிராம்ஹீ ப்ரசோதயாத்’
பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம். சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக.
சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.
-
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்….
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ. -
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்….
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ. -
கோயில்களில் 6 கால பூஜைகள் நேரம்:
நாம் கோவிலுக்கு செல்லும் போது நேரம் பார்க்காமல் சென்று விடுவோம். ஆனால் அங்கு சென்றப்பின் பார்த்தால் சன்னிதானம் நடைச் சாத்தியிருக்கும். நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே எப்போது நடை திறந்திருக்கும், சன்னிதானத்தில் தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் நேரம் எப்போது என்றுப் பார்த்து சென்றால் சிறந்தது. ஒரு நாளில் ஆறு கால பூஜைகள் நடைபெறும் எந்த நேரத்தில் அந்த பூஜைகள் நடைபெறும் என்று தெரிந்துக்கொண்டு நாம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் ……..
ஆறு கால பூஜைகள் நடைபெறும் நேரம்:
1.உஷக்கால பூஜை-கலையில் ஆறுமணிக்கு….
2.காலசந்தி பூஜை -காலையில் பத்து மணி முப்பது நிமிடத்திற்கு …..
3.உச்சிக்கால பூஜை -மதியம் பன்னிரெண்டு மணிக்கு …
4.சாயங்கால பூஜை -மாலையில் ஐந்து மணிக்கு …..
5.இரண்டாங்கால பூஜை -இரவு எட்டுமணிக்கு ….
6.அர்த்தஜாம பூஜை -இரவு ஒன்பதுமணிக்கு ….
குறிப்பிட்ட நேரத்திற்கு அரைமணிநேரம் முன்பாகவே நாம் சன்னிதானம் சென்றுவிட்டால் சிறப்பான தரிசனம் கிடைக்கும்.