Blog

  • aiyapanukku-arupadai-veedugal

     

    பொதுவாகச் சபரிமலை ஆலயம் எப்போதெல்லாம் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்? விரதமிருந்து போனால் மட்டும்தான் தரிசிக்க முடியுமா?’’ ‘‘அப்படியில்லை. 

    ஒவ்வொரு மலையாள மாதமும் ஒன்று முதல் ஐந்து தேதி வரை ஆலயம் திறந்திருக்கும். ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளிலிருந்து 41 நாட்கள்; மற்றும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் ஆலயம் பக்தர்களின் வருகையை எதிர்நோக்கித் திறந்திருக்கும். அதேபோல மார்கழி மாதம் 25ம் தேதி முதல் மகர விளக்கு தரிசனத்தை ஒட்டி, பன்னிரண்டு நாட்கள் திறந்திருக்கும். தவிர, பங்குனி உத்திரம், வைகாசி ஹஸ்தம் நட்சத்திர நாட்களிலும் திறந்திருக்கும்.

    ‘முருகனுக்கும், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பதுபோல, நம் ஸ்வாமி ஐயப்பனுக்கு உள்ளனவாமே அப்படியா?’’ ‘‘ஆமாம், முதலாவது, குளத்துப்புழா.
    இந்தத் தலம் தமிழ்நாட்டில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறிய கோயிலில் ஐயப்பன் பாலகனாகக் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் தீர்த்த கிணறும், மகாவிஷ்ணு சந்நதியும் அமைந்துள்ளன. கூடவே இசக்கியம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். நாகதேவதை, சிவன், விநாயகர், சந்நதிகள் வெளிப்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகில் ஓடும் குளத்துப்புழா நதியும் தெய்வீகமானது. குளத்துப்புழாவில் சித்திரை விஷு திருவிழா மிகவும் பிரபலமானது.  குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து நீராடி பாலகன் மணிகண்டனிடம் வேண்டி நின்றால், குழந்தை பாக்யம் கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்கு 9ம் மாதத்தில் இங்கு வந்து முதலில் உணவு ஊட்டி வழிபாடு நடத்தினால் குழந்தை நோய், நொடியின்றி விளங்குகிறது.

    இரண்டாவதாக, அச்சன் கோயில். மேலே சொன்ன செங்கோட்டையிலிருந்து 30 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம், அச்சன் கோயில் வனத்தில் இந்தக் கோயில் உள்ளது. அச்சன் கோயிலின் அரசனாக பூர்ண-புஷ்கலா தேவியுடன் அரசாட்சி செய்கிறார் ஐயப்பன். ஐயப்பனின் வலப்புறம் அரசனின் ஐயப்பனை நாடி வரும் பக்தர்களுக்கு தம் பங்காகவும் அருள்பாலிக்க தந்தையார் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    மூன்றாவது எருமேலி.  கேரளா மாநிலத்திலுள்ள மணிமாலா நதியிலிருந்து பிரியும் கிளை நதிக்கரையில் எருமேலி சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ஐயப்பன் சாஸ்தாவாக சாந்த சொரூபனாக நின்ற நிலையில் கையில் வில், அம்பு ஏந்தி தரிசனம் தருகிறார். கோயில் வெளிப்பிராகாரத்தில் ‘அம்மே நாராயணா’ சந்நதி உள்ளது. இங்கு பிற தெய்வங்கள் கிடையாது. சற்று தொலைவில் பேட்டை துள்ளல் வசந்தவிழா பக்தி பூர்வமாக நடைபெறுகிறது.

      

    நான்காவது ஆரியங்காவு. இத்தலம் செங்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கேரளா எல்லையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. வனப்பகுதியில், தரையிலிருந்து 300 அடி ஆழத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில், மதுரை பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. பூஜை வழிபாடுகள் தமிழக கோயில் கலாசாரத்தைப் பின்பற்றியே நடைபெறுகின்றன. ஆரியங்காவு ஐயப்பன் தமிழ்ப்பெண் புஷ்கலாதேவியை இங்கு திருமணம் முடித்தார் என்பதற்கு புராண ஆதாரம் உண்டு.  ஆரியங்காவு கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள், மண்டல பூஜையும், நவராத்திரி திருவிழாவும். ஐயப்பன் சந்நதி அருகே மாம்பழத்துறை பகவதி புஷ்கலாதேவி சந்நதியுள்ளது. இந்த சந்நதி, திருக்கல்யாண உற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவத்திற்கு மட்டுமே திறக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வந்து திருக்கல்யாணம் பார்த்து மஞ்சள் கயிறு பிரசாதம் பெற்றுச் சென்ற சிறிது காலத்திற்குள்ளேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது.

    ஐந்தாவது, பந்தனம். திருவனந்தபுரம், எம்.ஜி.சாலையில் உள்ள, ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த பழைய அரண்மனை எதிரே வாழியக் கோயிலில் உள்ள கருவறையில் ஐயப்பன் விக்ரக வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எதிரே பம்பை நதி பாய்கிறது. இங்கேதான் ஐயப்பன் பந்தள மன்னனால் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. பங்குனி உத்திரம் நாள் ஐயப்பனின் அவதார தினவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை விஷு, மண்டல பூஜை, மகர ஜோதி விழாவும் கொண்டாடப்படுகின்றன. பந்தளம் கோயிலே,  கேரளா ஐயப்பன் கோயிலின் மூலம் ஆகும்.

      

    ஆறாவதாக சபரிமலை. இங்கு ஐயப்பன் கோயில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பம்பையிலிருந்து நடைப்பயணமாக நான்கு கி.மீ. தொலைவு. எரிமேலியிலிருந்து பெருவழி நடைபாதையில் 42 கி.மீ. தொலைவு. சபரிமலை வனத்தில் 18 படி நடை வைத்து கலைநயத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டப்பட்டுள்ள கோயில் அமைப்பு மிக வித்தியாசமானது. 18 படி ஏறி கோயில் வாயிலின் உள்ளே சென்றால் எதிரே தங்கக் கொடிமரம் காட்சியளிக்கிறது. சோபன மண்டபத்தை அடுத்து தங்கக் கூரை வேய்ந்த கருவறையில் ஐயப்பன் கொலுவிருக்கிறார். ஐயப்பன் கோயில் பிராகாரத்தைச்சுற்றி நாகர், விநாயகர், காவல் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பதினெட்டாம்படி அருகே கருப்பசாமியும், கருத்தசாமியும் காவல் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். ஐயப்பனுக்கு முக்கியமாக நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்தனபிஷேகம், புஷ்பாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியவை பிற அபிஷேகங்களாகும்.

    உதய ஸ்தமன பூஜை, உஷத் பூஜை, உச்சி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை முக்கியமான பூஜைகளாகும், 18ம் படி பூஜையும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் 10ம் நாள் ஆராட்டு உற்சவம் மிக முக்கியமானது. இந்த நாட்களில் உற்சவ பலி தரிசனம், ஸ்ரீபூதபலி பூஜை, சுவாமி பள்ளிவேட்டை பம்பை நதியில் ஆராட்டு ஆகியவை பிரதான சம்பிரதாயங்களாக நடத்தப்படுகின்றன.’’

  • kubera-kirivalam

    நீங்களும் செல்வந்தராக வேண்டுமா? 

    நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம்.நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம்.
    சரி.பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும்,அடிக்கடியாவது உணர்கிறோம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம்.

    அதென்ன குபேர கிரிவலம்! 

    ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும்  சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார்.வந்து அவர் திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார்.அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார்.அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும்.இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.நாம்,நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்புடனும் வாழும்.

    இந்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக மகான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.கி.பி.2007 ஆம் ஆண்டில் ஜோதிடபூமி என்ற புத்தகத்தில் சென்னையில் வாழும் எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.அய்யா அவர்கள் எழுதினார். எனவே, எனது நட்புவட்டம் அனைவரும் குபேர கிரிவலம் சென்றால் அவர்கள் அனைவரும் செல்வந்தராகலாம் என்பது  நம்பிக்கை.

    *இந்த ஆண்டின் குபேர கிரிவலம் 17.11.2017 அன்று.

    *ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.

    *இந்த வருடம் 17.11.2017 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கின்றது.

    *இந்த நாளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும்.

    *(போன வருடமே ரொம்ப கூட்டமாக இருந்தது)*

    *இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்;மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்.

    *காலை 11 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    *கிரிவலம் செல்லும் போதே,அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்

    *ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை.

    *கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.

    கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.

    ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!

                

    குபேரன் குறிப்புகள்….
    அலைமகளுடன் ஆந்தை…..

    தென் நாட்டில் ஆந்தையைக் கண்டால் அலறி ஒடுகிறோம். ஆனால் வடநாட்டவர் தீபாவளி அன்று மகாலட்சுமியின் வாகனமாக அருகில் வைத்து வழிபடுகின்றனர். அன்று யார் வீட்டிலாவது ஆந்தை வந்து அமர்ந்து குரல் எழுப்பினால் லட்சுமி குபேரன் அருள் வரப்போகிறது என்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆந்தை கண்ணில் பட்டால் யோகம் அடிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. 

    குபேரன் பெயரில் தீர்த்தம்……

    கும்பகோணம் மகாமகக் குளத்தில் மொத்தம் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 20 தீர்த்தங்கள் மட்டுமே வெளியில் தெரிபவை. அவற்றில் ஒன்றுதான் குபேர தீர்த்தம். ஒவ்வொரு வருடமும் மாசி மக தீர்த்த உற்சவத்தின்போது குபேரன் இந்த தீர்த்தத்தில் தங்கி அனைவருக்கும் அருள்வதாக ஐதீகம். இந்திர தீர்த்தத்திலிருந்து சுற்றில் 6வதாக உள்ளது.

    குபேரனுக்கு மருத்துவரான பிள்ளையார்…….
    பணத்திற்கு அதிபதியாக நாம் குபேரனைப் குறிப்பிடுகிறாம். அவர் திருப்பதி வெங்கடாசலபதிக்கே கடன் கொடுத்தவர். ஒரு காலத்தில் குபேரன் எவருக்கும் பணத்தைத் தராமல் மூட்டை கட்டி வைத்திருந்தார். இதனால் பாவம் சேர்ந்து தொழு நோய் வந்து விட்டது. தன் நோய் குணமாக விநாயகரை வணங்கினார். அவருக்குப் பிள்ளையார் அருகம்பில்லை அரைத்து மருந்தாக கொடுத்து நோயை குணமாக்கினார். அதன் பிறகே குபேரன் மக்களுக்குப் பணத்தை வாரி இறைந்தார். எனவே விநாயகப்பெருமானை லட்சுமி குபேர கணபதியாக வழிபட்டால் குபேரனுடைய திருவருள் கிடைக்கும்.

    கடன் அடைய மைத்ர முகூர்த்தம்……
    உங்களுக்குப் பெரிய கடன் அடைபடாமல் இருக்கிறதாப கடன் அடைப்பட்டு நிம்மதி அடைவதும் குபேர யோகம் தான். மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் வாங்கிய தொகையில் சிறிதளவு அடைத்து விட்டால் ஒரு ஆண்டிற்குள் கடன் முழுவதும் அடைந்து விடும் என்பது உண்மை.

    *குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக!!!*

  • iyappa-bakthargal-kavanikka-vendiyadhu

    சபரிமலை பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல் 6 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டலகால பூஜை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது.

    மண்டலகால பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மண்டல சீசனை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். இவர்கள் புனித நீரான பம்பையில் குளித்த பின்னரே சாமிதரிசனம் செய்ய சன்னிதானம் செல்வார்கள்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதாலும், உடை, கவர்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசுவதாலும் பம்பை அசுத்தம் ஆவதாக ஏராளமான புகார்கள் உள்ளன.

    இதையடுத்து பம்பை நதியை மீட்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பம்பை ஆற்றை அசுத்தப்படுத்தக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி குளிக்க பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

  • 2017-11-09-07-07-34

    சபரிமலை பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல் 6 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டலகால பூஜை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. மண்டலகால பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மண்டல சீசனை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். இவர்கள் புனித நீரான பம்பையில் குளித்த பின்னரே சாமிதரிசனம் செய்ய சன்னிதானம் செல்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதாலும், உடை, கவர்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசுவதாலும் பம்பை அசுத்தம் ஆவதாக ஏராளமான புகார்கள் உள்ளன. இதையடுத்து பம்பை நதியை மீட்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பம்பை ஆற்றை அசுத்தப்படுத்தக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி குளிக்க பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

  • 2017-11-09-06-52-37

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல பூஜையின்போது சுவாமி தரிசனம் செய்வதற்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்குவார்கள். சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். இதனால் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக கேரள காவல்துறை சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தரிசனத்துக்காக இலவசமாக இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 2016-ம் ஆண்டு மட்டும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் இணையதள வசதியை பயன்படுத்தி 22 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எனவே, இந்தாண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் சென்று சுவாமி தரிசனத்துக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம்.

  • chennaiku-varugai-thantha-saibabavin-pathugai

     

    இறைவனை தரிசிக்கும்போது திருவடி தொடங்கி திருமுடி வரை தரிசிக்க வேண்டும் என்பார்கள். இறைவனின் திருவடிகளுக்கு அத்தனை உயர்வு; அத்தனை பெருமை! திருவடிகளை அலங்கரிக்கும் பாதுகைகளின் மகிமையை விவரிக்க முடியாது. தீட்சைகளிலேயே திருவடி தீட்சைதான் மிகவும் உயர்வானதாகச் சொல்லப்படுகிறது. பாதுகைகளின் மகிமையை உணர்ந்ததால்தான் போலும், பரதன் ஶ்ரீராமபிரானின் பாதுகைகளை தலையில் தாங்கிச் சென்று அரியாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான்.

     மகான்களின் பாதுகைகளைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கிறதென்றால், நாம் பாக்கியசாலிகள்தான். அந்த வகையில் சென்னைவாழ் மக்களுக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது.நம்பிய அடியவர்களைக் காக்கும் கண்கண்ட தெய்வமாம், ஸ்ரீ சாய் பாபா மஹாசமாதி அடைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அந்த மகானின் அருள்சக்தி நாள்தோறும் பல்கிப்பெருகி அடியவர்களைக் காத்து வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி ஶ்ரீசாய்பாபாவின் ஆலயம் 1952-ம் ஆண்டு முதலே சாய்பக்தர்களுக்கு அருள்நிறைந்த சரணாலயமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு சாய்பாபாவின் மஹாசமாதி நூற்றாண்டு என்பதை முன்னிட்டு இந்த ஆலயம் பல சிறப்பான வழிபாடுகளையும், உற்சவங்களையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஷிரடி சாய் பாபாவின் சந்நிதானத்தில் உள்ள ஸ்ரீ சாய்பகவானின் திருப்பாதுகைகளைச் சென்னைக்கு எழுந்தருளச் செய்து பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

     

     கண்ணாடிப்பேழைக்குள் இருந்த பகவான் சாய்பாபாவின் பாதுகைகளை வணங்கிய பக்தர்கள் சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். ‘சாய்பகவானின் திருவடிகளைத் தாங்கிய பாதுகைகளைத் தரிசிக்க என்ன தவம் செய்தோமோ’ என்று அவர்கள் கண்ணீர் சிந்தினர். வெளியே வானமும் தன் பங்கிற்கு நீர் மலர் தூவி வரவேற்பை அளித்துக்கொண்டிருந்தது.

     மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பிகை மண்டபத்தில் இந்தத் திருப்பாதுகைகள் தரிசிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று தரிசிக்கலாம். நாளை இரவு 7 மணிக்கு மேல், இந்தத் திருப்பாதுகைகள் மயிலாப்பூர் மாடவீதிகளில் அலங்காரமாக ஊர்வலம் கொண்டு செல்லப்படும். பின்னர் மீண்டும் ஷீரடி ஆலயத்துக்கு உபசாரங்களுடன் அனுப்பிவைக்கப்படும். காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம் சாய்பகவானின் திருப்பாதுகைகள், அது நம்மருகே வந்து இருப்பது உண்மையிலேயே நாம் செய்த பாக்கியம்தான்.

  • 2017-11-09-06-39-18

    பாளையங்கோட்டை அருகே வசவப்பபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சம்ப்ரோட்ஷணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    பழமைவாய்ந்த பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பல லட்சம் மதிப்பில் விமானம் புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தேவதா பிரார்த்தனை, அனுக்கை, கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், திக்பலி, அங்குரார்ப்பணம், ஆச்சார்ய, எஜமான வர்ணம், யாகசாலை பிரவேசம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தாமிரவருணியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், த்வார வேதிகா பூஜைகள், வேதபிரபந்த கோஷம், ஹோமம் நடைபெற்றது. பூர்ணாஹுதி, திருவாரதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வாக நவம்பர் 9 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு மகா சம்ப்ரோட்ஷணம் நடைபெற்றது. நண்பகலில் திருக்கல்யாண உற்சவம், மந்திர புஷ்பம், மாலையில் கருடசேவை உற்சவம் ஆகியன நடைபெற்றன.

  • punaiku-kovila

    பூனை குறுக்கே வந்தால், அபசகுனமாக கருதப்படும் நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கிராமத்தில், பூனைக்கு கோவில் கட்டி பூஜை செய்யப்படுகிறது.இங்கு, மாண்டியா மாவட்டத்தில், பெக்காலாலே கிராம மக்கள், பூனையை கடவுளாக வழிபடுகின்றனர்.  கன்னடத்தில், ‘பெக்கூ’ என்பதற்கு, பூனை என, பொருள். அதன்படி, இந்த கிராமத்தின் பெயரும் அமைந்துள்ளது.மாண்டியாவில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், பூனையை வழிபடும் வழக்கம், 1,000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியதாக கூறப்படுகிறது. பெண் கடவுளான, தேவி மங்கம்மா, பூனையின் உருவில் கிராமத்திற்கு வந்ததாகவும், தீய சக்திகளை விரட்டி மக்களை காத்ததாகவும், கிராம மக்கள் நம்புகின்றனர்.

    கோவில் பூசாரி கூறியது:  எங்கள் முன்னோர் எதிரே, தேவி மங்கம்மா, பூனை வடிவத்தில் தோன்றி, தன்னுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தி மறைந்தார். அந்த இடத்தில், ஒரு புற்று தோன்றியது. அதன்பின், பூனை வடிவில், தேவியை வணங்கும் வழக்கம் துவங்கியது. கிராமவாசிகள் யாரும் பூனையை துன்புறுத்தக் கூடாது. மீறினால், அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். பூனை இறந்து கிடப்பதை பார்த்தால், அதை அடக்கம் செய்யாமல் அங்கிருந்து செல்வதில்லை. மேலும், மங்கம்மா தேவிக்கு திருவிழாவும் நடத்தப்படுகிறது.

  • periyavargal-kalil-vizhunthu-aci-peruvathu-yen

     

    தகுதியில்லாதவர்களின் காலில் விழுந்தால் என்ன ஆகும். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின், பூதவுடல் நம் கண்ணில் படவில்லை என்றாலும், இன்னும் இந்தப் பூமியில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    இந்த சிரஞ்சீவிகளில் ஒரு பிரபலம் மார்கண்டேயன். பின்னே.. இவனைக் காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமானே காலனை காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், அவர் காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் அநேகருக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா?

    மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும், அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்றுக் கொள்” என்று சொல்லியிருந்தார்.

    மார்க்கண்டேயனும், தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். ஒருமுறை அத்திரி, வசிஷ்டர், கவுதமர், கஷ்யபர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்தரிஷிகள் மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர்.

    அவர்களின் பாதங்களில், மார்கண்டேயன் பணிந்தான். அப்போது அவர்கள், “தீர்க்கா யுஷ்மான் பவ” (தீர்க்காயுளுடன் வாழ்க) என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் சொல்வதற்காக செல்கிறார்கள். மார்க்கண்டேயனும் அவர்களுடன் செல்கிறான். போனவன், பிரம்மாவின் காலிலும் விழுந்து ஆசி பெற்று விட்டான். விதியை எழுதிய அவரும், அவனுக்கு ‘தீர்க்காயுஷ்மான் பவ’ என்று வாழ்த்தி விட்டார். இப்படி பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.

    பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமை. ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 வயதாக, அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரம் தருகிறார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.

    எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியைப் பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றிவிடும். அதேநேரம், ஆதாயத்துக்காக தகுதியற்றவர்களின் கால்களில் விழாதீர்கள். அப்படி செய்தால் அவர்களின் பாவங்களையும் நீங்கள் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்.

     

  • suriyana-parththal-super-shakthi-kidaikum-nasa-thagaval

     

    அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியனை பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சூரியனை பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாசா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

    பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது.எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாசா.

    சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும். இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம். பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக்குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

    தன்னை ’சூரியக்கதிர்களை உண்பவன்’ என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த ”ஹிரா ரத்தன் மானக்” என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாசா விஞ்ஞானிகளை அணுகினார். நாசாவினால் நிதியுதவி பெறக்கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.

    100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர்வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று ’ஹைபோதாலமஸ் பாதை ’என்ற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது. கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே ’ஹைபோதாலமஸ் ’ என அழைக்கப்படுகிறது.

    இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம். மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம்.

    சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம். இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.

    வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம். இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம். வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம்.

    சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர். அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சூரியக்கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது