Blog
-
2018-04-14-06-16-11
அசுரர்களான மது கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்க மூங்கில்கள் அடங்கிய வனத்தில் சிவபெருமானைப் பூஜிக்கிறார். அவருக்கு அருள் பாலிக்க மூங்கில்களுக்கிடையே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளுகிறார். பாசூர் என்றால் மூங்கில்.மூங்கில்களுக்கு இடையே தோன்றியதால் பாசூர் நாதர் என்று போற்றப்படுகிறார். இந்தத் தலமும் திருப்பாசூர் என்று வழங்கப்படுகிறது. இறைவனுக்கு வாசீஸ்வரர் என்கிற பெயரும் உண்டு. இவ்வழியே செல்லும்போது, மூங்கில்களுக்கிடையே இருக்கும் சிவலிங்கத்தைக் கண்ட கரிகாலச் சோழன் இக்கோவிலை எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.சோழன் கரிகால் பெருவளத்தானின் சிற்றரசராக இருந்த குறும்பன் என்பவர் கப்பம் கட்ட மறுக்க, இறைவன் நந்தீஸ்வரரை அனுப்பி குறும்பனுக்கு உதவியாக இருந்த காளிக்குப் பொன் விலங்கிட்டு அழைத்து வந்து கப்பம் கட்டச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தலம் என்று தலபுராணம் கூருகிறது. சோழர் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன. சுவாமி சன்னிதியின் வலப்புறம் அம்மன் சன்னிதி இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இருப்பது ஆக்கும் சக்தியை அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.இறைவி தங்காதளி அம்மன். இரு சன்னிதிகளும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. சொர்ணகாளிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளே இங்கு இறைவனைப் பூஜை செய்துள்ளதால், முதல் பூஜை அம்பாளுக்கு நடைபெறுகிறது. கருவறை வாயிலில் இடப்புறம் 11 விநாயகர் மூர்த்தங்களுடன் ஏகாதச விநாயகர் சபை நம்கண்களைக் கவர்ந்திழுக்கிறது.அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும் இது. திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கடம்பத்தூருக்குப் பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். -
2018-04-14-06-06-31
தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் சகல வசதியும் நிறைந்த திருமலை திருப்பதி கோயிலுக்கு வரு வோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகை யில் வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

திருமலையில் தரிசன முறைகள் :திருமலையில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், சுதர்ஸன தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் ஆகிய தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. இது தவிர கட்டண சேவை முறையும் உண்டு.
திவ்ய தரிசனம்:
இது திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனமாகும். இதில் திருப்பதியிலிருந்து அலி பிரி வழியாகவும், சீனிவாச மங்காபுரத்திலுள்ள ஸ்ரீ வாரி படிக்கட் டுகள் என இரண்டு வழியாகவும் செல்லலாம்.
அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டிற்கு செல்வத ற்கான சீட்டு வழங்கப்படும். அதனை எடுத்துச்சென்று திருமலை யில் நடந்து வரும் பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழி படலாம்.இலவச தரிசனம்:
திருமலையில் கட்டணம் ஏதும் இல்லாமல் பக்தர்கள் வைகுண்டம் 1 வழியாக இலவசமாக தரிசிக்கும் முறை யாகும். இதில் பக்தர்கள் உள்ளே சென்ற உடன் அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும். இதில் தரிசன நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. இந்த அட்டையை கொ ண்டு பக்தர்கள் காத்திருக்காமல் அதில் குறித்த நேரத்திற்கு வந் தால் போதுமானது.
சுதர்ஸன தரிசனம்:
இந்த தரிசனம் ரூ. 50 செலுத்திச் செல்லும் தரிசனமாகும். இது திருப்பதி மற்றும் எல்லா நகரங்களிலுள்ள திருமலை திருப்பதி தகவல் மையங்களிலும் விவரங்களை அளித்து பெற்றுக்கொள்ளலாம். இதில் தரிசனத்திற்குச் செல்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிரு ப்பதால், அந்த நேரத்தில் சென்று வழிபடலாம்.
சிறப்பு நுழைவு தரிசனம்:
இது ரூ. 300 செலுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து தரிசிக்கும் முறை. இதில் விரைவாக சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.
இது தவிர மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயி லின் எதிரே உள்ள வரிசையில் காத்திருந்தால், கோயில் ஊழியர்களால் மகா துவாரம் வழியாக வழிபாட்டிற்காக அழை த்துச் செல்லப்படுவர். இந்த முறை நாளொன்றுக்கு 4 முறை அனுமதி க்கப்படும். மேலும் 1 வருட கைக் குழந்தையை எடுத்து வரும் பெற்றோர் கோயிலின் அருகே உள்ள சுபதம் நுழைவாயில் வரிசையில் அனுமதிக்கப்படுவர்.இது தவிர சில கட்டண சேவைகள் உள்ளன. இதில் கலந்து கொள் ள விரும்புவோர் திருமலையில் உள்ள விஜயா வங்கியில் சென்று கைரேகை மற்றும் அடையாள அட்டையைக் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம். இது குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங் கப்படும்.
மேற்கண்ட வழி முறைகளை பின் பற்றி திருமலையில் ஏழு மலையானை பக்தர்கள் வழிபடலாம். இதில் எந்த முறையில் சென்று வழிபட்டாலும் அவர்களுக்கு புகழ்பெற்ற பிரசாதமான லட்டுகள் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும்.திருவேங்கடமலையானை தரிசிக்க எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:
திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.
திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.
தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் , மலைப்பாதையில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும், நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.
கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்.பார்த்து ரசிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்
பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.
ஆன்மீக அம்சங்களை தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. ஷிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.
திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும் பக்தர்களும் நன்கு அறிந்ததே. ஆந்திர மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவுவகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம்.மேலும், இங்கு உள்ளூர் தயாரிப்புகளாக பலவகை கைவினைப்பொருட்கள், மரக்குடைவு பொருட்கள், மரப்பொம்மைகள், கலம்காரி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் சந்தன பொம்மைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. ரசனை மிக்கவர்கள் இவற்றில் ஏதாவதொன்றை வாங்காமல் ஊர் திரும்புவதில்லை.
பயண வசதிகளும் பருவநிலையும்:
திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிதாகவே உள்ளது. நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ரேணிகுண்டாவில் திருப்பதிக்கான உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.
டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து இந்த விமானநிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. தற்போது இதனை வெளிநாட்டு சேவைகளை இயக்குவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மேலும், முக்கிய போக்குவரத்து வசதியாக திருப்பதியில் பிரத்யேக ரயில் நிலையமும் உள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கு இணைப்புகள் உள்ளன.
அது மட்டுமல்லாமல் பெங்களூர், ஹைதராபாத், வைசாக் மற்றும் அருகிலுள்ள சென்னை நகரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் அடிக்கடி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.
ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பதி நகரின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் இதர அம்சங்களை சுற்றிப்பார்க்க வாடகைக்கார்கள் மற்றும் உள்ளூர் தேவஸ்தான பேருந்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நாள் வாடகைக்கும் டாக்சிகளை பயணிகள் அமர்த்திக்கொள்ளலாம். -

2018-04-13-06-04-48
மதுரை மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடம் ஆகும். தேவியின் பெயர் தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறாள். தல விருட்சமாக கடம்ப மரமும் தீர்த்தங்களாக பொற்றாமரைக் குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி ஆகியவை உள்ளன. மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமைகின்றன. வேண்டும் வரமெல்லாம் அருளும் அன்னையாக மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும், நிம்மதியான முக்தியும் கிடைக்கும்.
-
2018-04-13-05-58-27
தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது, ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும், 1005 ஆண்டுகளை கடந்தும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
முன்னதாக அதிகாலை பெரியகோவிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்று பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.
18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26ந்தேதி நடைபெற உள்ள, இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். -
2018-04-13-05-50-22
திருமலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் அறங்காவலர் குழு தலைவர் பதவி சுமார் ஓராண்டாக காலியாக உள்ளது. இந்நிலையில் புதிய அறங்காவலர் குழு தலைவராக புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதாகர் யாதவ், ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புட்டா சுதாகர் யாதவ் நேற்று முன்தினம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆசி பெற்றார். -
2018-04-13-05-45-08
தமிழ் புத்தாண்டு விளம்பி சனிக்கிழமை பிறப்பதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. கிராமப் புறங்களில் ஏர் உழுது சிறப்பு வழிபாடு நடத்தவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
நடப்பு தமிழ் ஆண்டான ஹேவிளம்பி நிறைவடைந்து சனிக்கிழமை விளம்பி புதிய ஆண்டு பிறக்கிறது. இதையடுத்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் சிறப்பு புத்தாண்டு பூஜைகளும் நடத்தப்படவுள்ளன. மதுரைகூடலழகர் பெருமாள், இம்மையில் நன்மைதருவார் திருக்கோயில் மற்றும் அழகர்கோவில், திருப்பரங்குன்றம் திருக்கோயில்களிலும் தமிழ் புத்தாண்டுக்கான சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு மதுரை ஊரகப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயிகள் ஏர் உழுது கொண்டாட உள்ளனர். மேலும், கருவேலங்குச்சியில் தார்க்குச்சி அமைத்து அதை வீட்டின் முன் வைத்து ஏர் கலப்பையுடன் பூஜை செய்வதையும் விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வறட்சியான நிலத்திலும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஏர் உழுதால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அறுசுவை உணவு வகைகளை புத்தாண்டு பிறக்கும் நாளில் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு வழக்கமாக நாம் பின் பற்றுகிறோம். இனிப்பு, காரம்,புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்பவையே அறுசுவையாகும். தேன்குழல், அதிரசம், காரமான உணவுவகைகள், மாங்காய் பச்சடி, புளிக்கூட்டு, உப்புவற்றல், வாழைப்பூ வடை,வேப்பம்பூ பச்சடி என்று எல்லா வகை உணவுகளும் இடம்பெற்றிருக்கும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித் தான் உண்டாகும். துன்பக் கலப்பில்லாத இன்பத்தை நாம் பெறவே முடியாது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத் தான் சாப்பிடும் உணவிலேயே அறுசுவைகளையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை அறுசுவை உணவு உணர்த்துகிறது. -
2018-04-13-05-01-00
அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள்.
முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர்.
அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாள் திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் 3ம் நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. எப்படி அட்சயப்பாத்திரத்திற்கு பெருமை உள்ளதோ அதுபோல் தான் அட்சய திருதியைக்கும் உண்டு. இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் நற்பலனை தரும்.
* இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் குறையாமல் நிறைந்து இருக்கும். அட்சய திருதியையன்று மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்நாளில் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு பொருளை தானம் செய்து நாம் வாங்கும் எந்த பொருளும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.
* அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேர பூஜை நடத்துவது அதிக பலன்களை தரும்.
* அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றையும் தாண்டி 4 ஏழைகளுக்கு தானம் வழங்குவது அதிக சிறப்பு.
* அட்சய திருதியை புனித ஸ்தலங்களில் நீராடி இறைவனை வணங்கினால் பாவங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.
* அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவு வழங்கலாம். அதுவும் பசு மாட்டுக்கு வாழைப்பழம் வழங்கி வணங்கினால் நல்லது. பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக நம்புவதால், வாழைப்பழம் வழங்குவது அனைத்து இறைவனுக்கு படைப்பதற்கு சமம்.
* அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி. ஒருபடி உப்பு வாங்கி வீட்டில் வைத்தாலும் பலன் கிடைக்கும்.
* ஜைன மதத்திலும் அட்சய திருதியைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஜைனர்கள் அட்சய திஜ் என்று அழைக்கின்றனர். இதை மிக புனிதமான நாளாகவே கருதுகின்றனர். தானம் செய்வதற்கு ஜைனர்கள் இந்த நாளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
* அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி வீடு கட்டுதல், வியாபார நிறுவனங்களை தொடங்குதல், புனித சுற்றுலா செல்வது போன்றவற்றையும் செய்யலாம்.
* பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் வசிக்கும் யாதவர்கள், இந்நாளை விளைபொருட்கள் விதைப்புக்கு உகந்த நாளாக கருதுகின்றனர். -
18
பொன் கிடைத்தாலும் புதன் கிடைப்பதில்லையாம் அந்தப் புதனில் பிறக்கிறது இந்த அட்சய திருதியை.
“அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூசை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள். இந்த வருடம் சித்திரை மாதம் 5 ஆம் நாள் (18-04-2018) அன்று அட்சய திருதியை வருகிறது.
அட்சய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. -
2018-04-11-15-07-35
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். விஷூ பண்டிகையின் போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்குரிய விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
வருகிற 15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் நிகழ்ச்சியுடன், பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.
தொடர்ந்து சித்திரை மாத பூஜைகள் நடைபெறுகின் றன. இந்த பூஜைகள் நிறைவு பெற்ற பின்பு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 18- ந் தேதி வரை திறந்திருக்கும் என்பதால், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.