மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.
அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி – பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் – ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.
Category: old…
old…
-
பங்குனி உத்திரத்தின் மகிமைகள்…
-
ஏகாம்பரநாதர் கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சூரிய பிரபை, சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் செவ்வாய்க்கிழமை 63 நாயன்மார்களுடன் ஏகாம்பரநாதர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து ஏலவார் குழலி அம்மன் திருவீதி உலா, வெள்ளித் தேர் பவனி, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரினண்த்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். -
கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடு
சித்திரை திருவிழாவையொட்டி அடுத்த மே மாதம் 8 ஆம் தேதி அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். இந்த திருவிழா மே மாதம் 6-ந் தேதி அழகர்கோவிலில் தொடங்குகிறது. 7-ந் தேதி கோவிலிலேயே சாமி புறப்பாடு நடைபெறும். 8-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து அழகரை வணங்கி வழியனுப்பி வைக்கின்றனர். அதன்பின்பு மதுரை வரும் வழியில் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
9-ந் தேதி அதிகாலையில் மூன்றுமாவடி, புதூர் பகுதிகளில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவிலில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் அங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிகொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை சாத்துபடி செய்யப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதன்பின்பு அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலுக்கு போய் இரவு அங்கு எழுந்தருளுகிறார். 11-ந் தேதி அங்கிருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். பின்னர், கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12-ந் தேதி அதிகாலையில் மோகனவதாரத்திலும், பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்திலும் கள்ளழகர் அனந்தராய பல்லக்கில் காட்சி தருகிறார். அன்று இரவு பூப்பல்லக்கு திருவிழா நடக்கிறது. 13-ந் தேதி அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து பிரியாவிடைபெற்று கள்ளழகர் திருமலை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.
அன்று இரவு மறவர் மண்டபம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி காட்சி தருகிறார். 14-ந் தேதி காலையில் கள்ளழகர், அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேருகிறார். -
சபரிமலையில் புதிய கொடிமரபீடம்….
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செய்யப்பட்ட புதிய கொடி கொடிமரபீடம் செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திலிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள கொடிமரம் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் புதிய தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பத்தனம் திட்டை வனப்பகுதியில் இருந்து கொடிமரம் அமைப்பதற்கான மரத்தடி வெட்டி எடுத்துவரப்பட்டது. பம்பையில் மூலிகை தொட்டியில் மூழ்கடித்து வைக்கப்பட்டிருந்த அந்த மரத்தடியை தங்க தகடுகள் பதித்து தற்போது கொடிமரமாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி புதிய தங்க கொடி மரம் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
தங்க கொடிமரத்திற்கான பீடம் அமைக்க தஞ்சை மாவட்டத்தில் இருந்து பெரிய பாறாங்கல் பத்தனம் திட்டா அருகே உள்ள செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அழகிய வேலைபாடுகளுடன் கொடி மர பீடம் தயாரானது.
இந்த கொடிமர பீடம் அங்கிருந்து இன்று காலை சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு புனிதநீர் தெளித்து பூஜை செய்தபிறகு கொடி மர பீடம் ஊர்வலம் தொடங் கியது.
இன்று மாலை பம்பை கணபதி கோவிலை இந்த பீடம் சென்றடையும். அங்கு விசேஷ பூஜைகளுக்கு பிறகு அந்த பீடம் சபரிமலை சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்படும். -
திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடக்கம்
திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவம் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
வசந்தகாலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் காலத்தில், கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க, திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, பலவித பழரசங்களாலும், மூலிகை கலந்த வெந்நீராலும் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
வசந்தோற்சவம் நடைபெறும் 3 நாள்களும் திருமலையில் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. -
ராம நவமி விரதம் வழிமுறை மற்றும் பலன்கள்
இலங்கை வேந்தனான ராவணனின் அதர்மப் போக்கையும், ஒழுக்கமற்ற வாழ்வையும் அழிக்கும் பொருட்டுதான் மகாவிஷ்ணு, பூமியில் அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாக ராமர் என்ற பெயரில் பிறப்பெடுத்தார். அவ்வாறு ராமர் பிறப்பெடுத்த தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமி திதியில் நண்பகல் நேரத்தில் ராமர் பிறந்தார். பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர்.அப்போது விஷ்ணு பகவான், ‘உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.
இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். -
பழனியில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்…
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடு என்னும் சிறப்பு பெற்ற பழனி திருத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா திருஆவின்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாப்படும் இத்திருவிழாவில் தினசரி காலை 8.00 மணிக்கு மேல் தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்து குமார சுவாமி வள்ளி-தெய்வநாயகி அம்மனுடன் திருவுலா காட்சியும், இரவு 8.00 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
பங்குனி உத்திரத் திரு விழாவின் 6-ம் திருநாளான ஏப்ரல் 8-ந் தேதி இரவு 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் துலா லக்கினத்தில் முத்து குமார சுவாமி, வள்ளி-தெய்வநாயகி அம்மன் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருவுலா காட்சியும் நடைபெறுகிறது. 10-ந் தேதி அன்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி – தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது. 11-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை 7.20 மணிக்கு திரு ஆவினன்குடி கோவிலில் அபிஷேக ஆராதனை, 10.45 மணிக்கு சாந்து மண்டகப்படி, இரவு 11 மணிக்கு திருவிழா நிறைவு பெற்று கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
-
அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், ஒன்றான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் 9-ந்தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும். அதன்படி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அன்று பகல் 10 மணி முதல் 12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சாமிக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அதைத்தொடர்ந்து தங்கரிஷப வாகனத்தில் சாமி மாட வீதியுலாவும் நடைபெறும்.
விழாவின் தொடர்ச்சியாக 10-ந் தேதி கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி நடைபெறும். 11-ந் தேதி அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 12 மற்றும் 23-ந் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
விழாவின் நிறைவாக, வருகிற 14-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், குமரகோவிலில் மண்டகபடியும் நடைபெறும். அன்று இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் சாமி வீதியுலா நடைபெறும். -
பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்
காக்கும் கடவுளான திருமால் எடுத்த தசாவதாரத்தில் , ஒரு மனிதன் , தான் எடுத்த மானிடப் பிறவியில் எத்தகைய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்துக் காட்டிய அவதாரமே ஸ்ரீ ராம அவதாரம்.
எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்ற தெய்வ வாக்கின் படி, இந்த மண்ணுலகையும், மக்களையும் இலங்கை வேந்தனான ராவணனின் ஆணவப் பிடியில் இருந்து காக்க மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமே ராம அவதாரம் .
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக நம் புராணங்கள் தெரிவிக்கின்றன.அந்த பொன் நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகிறோம் . இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண கதை ஒன்று உண்டு . பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர்.
அப்போது விஷ்ணு பகவான், ‘உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது
உலகை ரட்சிக்கும் இறைவனே ஆனாலும் மனிதனாக பிறப்பெடுத்து விட்டால் , மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் அனுபவித்தாக வேண்டும் என்று உணர்த்திய புண்ணிய புருஷர் ஸ்ரீ ராமர் . ரகு குலத்தில் தசரத மகா சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், மிதிலை ஜானகி தேவியை மணந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்தினி விரதத்தை மேற்கொண்டார் . தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு உதாரண புருஷனாய் திகழ்ந்தார் .

ராம நவமி கொண்டாடும் விதம்
ராமர் பிறப்பதற்கு முன்பான ஒன்பது நாட்கள்’கர்ப்போஸ்தவம்’ என்ற ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ‘ஜன்மோதீஸவம்’ என்ற ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது . இவ் விரதம் இருப்பவர்கள் தொடக்க நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபட்டு , ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும். இப்படி ஒன்பது நாளும் விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும்.
ராம நவமி தினத்தன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். சிலர் ஸ்ரீராமர் படத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஆதலால் இந்த ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

ராம நாமத்தின் மகிமை :
ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன . ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமம் ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்
ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் . ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார். . அதற்கு ஆஞ்சநேயர, “ ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும்” என்றாராம்

அவ்வளவு சக்தி வாய்ந்தது ராமநாமம்.!!
ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம்.
பாவங்களில் இருந்து கரை சேருவோம் . -
திருமலையில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து பக்தர்களும் ஏழுமலையான் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், திருமலையில் சுமார் இரண்டாண்டுகளாக குலுக்கல் முறையில், நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டது.
இந்த டிக்கெட்டுகளைப் பெற பக்தர்கள், சேவை தேதியின் முன்தினம் திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் தரிசனத்துக்குச் செல்பவரின் பெயர், செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்டவற்றை அளித்து பெருவிரல் ரேகை பதிவு மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு அதிகாரிகள் குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்டவரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அளிப்பர். தகவல் பெற்றவர்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று பணம் அளித்து டிக்கெட் பெற்றுக் கொண்டு மறுநாள் காலை ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.நிலுவையில் உள்ள டிக்கெட்டுகளின் விவரங்கள்
ஏப்ரல் 4 தோமாலை 4, அர்ச்சனா 12,
ஏப்ரல் 5 அர்ச்சனா 14,
ஏப்ரல் 6 அர்ச்சனா 13, தோமாலை 4,
ஏப்ரல் 7 மேல்சாட் வஸ்திரம் 3, பூராபிஷேகம் 11,
ஏப்ரல் 12 தோமாலை 2, அர்ச்சனா 5,
ஏப்ரல் 13 அர்ச்சனா 7,
ஏப்ரல் 14 மேல்சாட் வஸ்திரம் 2, பூராபிஷேகம் 3,
ஏப்ரல் 18 தோமாலை 10, அர்ச்சனா 8,
ஏப்ரல் 19 அர்ச்சனா 11,
ஏப்ரல் 21 மேல்சாட் வஸ்திரம் 3, பூராபிஷேகம் 5,
ஏப்ரல் 25 அர்ச்சனா 11,
ஏப்ரல் 26 அர்ச்சனா 12,
ஏப்ரல் 27 அர்ச்சனா 20
ஏப்ரல் 28 மேல்சாட் வஸ்திரம் 1, பூராபிஷேகம் 9.