Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நட்பு
    ரிஷபம் – ஆதரவு 
    மிதுனம் – ஆதாயம் 
    கடனம் – ஆர்வம் 
    சிம்மம் – தெளிவு 
    கன்னி – தேர்ச்சி  
    துலாம் –  பணிவு
    விருச்சிகம் – கவனம் 
    தனுசு – நேர்மை 
    மகரம் – அலைச்சல்
    கும்பம் – அனுகூலம் 
    மீனம் – குழப்பம்
    சந்திராஷ்டமம்    : திருவோணம்
     

  • Feb 19 Full moon day

    பிப்ரவரி 19 –  பவுர்ணமி 
    விளம்பி வருடம் – மாசி 7
     பவுர்ணமி 
    19-பிப்-2019 செவ்வாய்  ஜமாதுல் ஆகிர்13
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    இ    10.05
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    11.03
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sakthi vinayakar koil Kumbabishegam

    உளுந்தூர்பேட்டை  கந்தசாமி புரத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் கந்தசாமி புரத்தில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ராமகிருஷ்ணா  குருகுலத்தில் இருந்து வந்திருந்த பத்மபிரியா அம்மாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியையொட்டி நேற்றைய தினத்தில் இருந்து யாகசாலை பூஜைகள் துரைசாமிசிவாச்சார்யார், மற்றும் சங்கரசிவம் குருக்களின் தலைமையில் இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது. 

    நேற்றிலிருந்து இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இன்று காலை சரியாக 9 மணியளவில் யாகசாலையில் இருந்து புறப்பட்ட கலசங்கள் சக்திவிநாயகர்,  தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிக  மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

    இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சௌ. ராமலிங்கம், லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன்,  குரு. கணேசன், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கர் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு ,அமுதசுரபி விநியோக சங்க தென் மண்டல செயலாளர் ராமுசுப்பிரமணியன், உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Ponni Amman Koil Kumbabishegam Vedio

    அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில்  உள்ள பல ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ  பொன்னியம்மன் திருக்கோயிலில்  ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  முன்னதாக நேற்று  கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ தீபாராதனையும் நடைபெற்றது.

     அதே போல் இரவு அம்மனுக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராற்பணம், கலாகர்ஷணம் மற்றும் தீபாராாதனையும் நடைபெற்றது.   அதனைத் தொடர்ந்து இன்று காலை மஹா சங்கல்பம், தத்வார்ச்சனையும்,  அவம்ருத யாகமும் விசேஷ ஹோமமும் 10 மணியளவில் கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, கலசத்தில் உள்ள புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர். 

    அப்போது கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷம் எழுப்பினர்.  கலசத்தில் கொண்டு வந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
     

  • Thiruthani thirukalyanam

    திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலை நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 10ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து 9வது நாளான இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.

     முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை  சமாதானம் செய்து கோயிலுக்குள் செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

  • Indraya Rasi palangal

    இன்று சந்திராஷ்டமம் உள்ள ராசிகள் …..
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நட்பு 
    ரிஷபம் – பணிவு 
    மிதுனம் – ஆசை  
    கடனம் –  பரிவு 
    சிம்மம் – செலவு 
    கன்னி – மேன்மை 
    துலாம் –  ஆர்வம் 
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – உதவி
    மகரம் – பக்தி  
    கும்பம் – தடை 
    மீனம் – போட்டி 
    சந்திராஷ்டமம்    : உத்திராடம், திருவோணம்
     

  • feb 18 Indraya naal

    பிப்ரவரி 18  – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – மாசி 6
    18-பிப்-2019 திங்கள்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    12.49
    நட்சத்திரம்    :    பூசம்    ம    12.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thiruchendur Murugan Fest

    திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வருகிற 19-ந் தேதி 10-ம் திருவிழா அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 10-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4.50 மணிக்கு கும்ப லக்கனத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

     

  • Vadiudai Amman Koil Ther

    சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் தேர் உற்சவம்  நடைபெற்றதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

    பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க 2௦௦௦ஆண்டு பழமையான திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகோவிலில் கடந்த 1941ம் ஆண்டு மன்னர் காலத்தில்  தேர் உற்சவம் நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த  2016 ம் ஆண்டு  46 இலட்சம் மதிப்பில் தேக்கு மற்றும் இலுப்பை மரத்தினால் 41அடி உயர திருத்தேர் புதியதாக செய்யப்பட்டு நான்காவது  ஆண்டாக இன்று  தேர் உற்சவம்  நடைபெற்றது. மாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான  இன்று  சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரி அம்மனை  அலங்கரித்து 108 சங்க நாதம் முழங்க சிவாச்சாரியார்களின் பஜனை கோஷங்களுடன் நான்கு மாட வீதிகளிலும் சுற்றி வரும் தேரை  பக்தர்கள்  வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனையடுத்து வருகின்ற 18 ம் தேதி சுந்தரர்க்கும் சங்கிலிநாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம்  நடைபெற உள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்கள் முருகர் அம்மன் சிவன் வேடமிட்டு  நடனமாடி தேரை வரவேற்றனர் வழி நெடுகிலும்  ஏராளமான மக்கள்   காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் 

    வரலாற்று சிறப்புமிக்க வடிவுடையம்மன் கோவில் ஆண்டு தோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டபட்டு வருகிறது முக்கிய நிகழ்வான  தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஓம் நமச்சிவாய தியாகராய என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்   
     

  • Thiruthani Murugan koil Ther Video

    திருத்தணி முருகன் கோயிலில்  மாசி பிரம்மோற்சவம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மரத்தேரோட்டம். மேள தாளங்கள் முழங்க, முருகன் பஜனை குழுவினர்  பக்தி பாடல்கள் இசையுடன், முருகப்பெருமான் மலைக் கோயில் மாட வீதிகளில் உலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

    முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் மாசிமாத பிரம்மோற்சவம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. உற்சவ விழாவில் தினம் தோறும் உற்சவர்  சிறப்பு அலங்காரத்தில் வாகன சேவைகளில் எழுந்தருளி  மலைக் கோயில் மாட வீதிகளில் உலா நடைபெற்று வருகின்றது. 

    உற்சவ விழாவில் 7ஆம் நாளில் மாலை சிறப்பு பெற்ற மரத்தேரோட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயில் தேர்  பழுதடைந்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேர் புதுபிக்க வேண்டும் என்று  முருக பக்தர்கள் கோரிக்கை  இந்து அறநிலைத்துறை  கண்டுக்கொள்ளாத நிலையில் திருத்தணி  முருகன்  திருவடி திருச்சபை சார்பில்  ரூ.50 லட்சம்  மதிப்பீட்டில்  33 அடி உயரமுள்ள மரத்தேர் புதியதாக உருவாக்கப்பட்டு திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

    இதனை அடுத்து இன்று  மாலை நடைபெற்ற தேர் திருவிழாவை யொட்டி  மரத்தேர்   மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத உற்சவர் சுப்பிரமணியர்  சிறப்பு  அலங்காரத்தில் மரத்தேரில்  அமர்ந்தனர். கோயில் அர்ச்சர்கள் சிறப்பு பூஜைகள் தீபாராதனை தொடர்ந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் பவனி நடைபெற்றது. மலைக் கோயில் சுற்றி  தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோரக என்று பயபக்தியுடன் வழிபட்டனர். 

    தேர் மாட வீதிகளில்  உலா சென்ற போது முருகன் பக்தி குழுக்கள் திருமுருகன் பாடல்கள் இசைத்தவாறும், கெண்டை மேளம், நாதஸ்வரம், பஜனைகள்  மலைக்கோயிலில்  கோலாகலத்தை ஏற்ப்படுத்தியது. தேரோட்டத்தில் திருத்தணி கோ.அரி எம்.பி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.