பிப்ரவரி 27 – கரிநாள் இன்று
விளம்பி வருடம் – மாசி 15
27-பிப்-2019 புதன்
கரிநாள்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 11.08
நட்சத்திரம் : கேட்டை அ.கா 5.22
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
Feb 27 -Indraya naal eppadi
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வீம்பு
ரிஷபம் – ஊக்கம்
மிதுனம் – உதவி
கடனம் – திறமை
சிம்மம் – சிரமம்
கன்னி – சினம்
துலாம் – பரிசு
விருச்சிகம் – செலவு
தனுசு – நன்மை
மகரம் – விவேகம்
கும்பம் – பெருமை
மீனம் – தனம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
-
Kalyana Thadai Neekum Koil
துறையூர் பெருமாள் மலை…. ! இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணகோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி.
திருப்பதியை போன்று 7 சிறு மலைக்குன்றுகளையும் கடந்து கோவிலை அடையலாம். திருப்பதியில் உள்ளது போன்று அலமேலுமங்கை கோயிலும் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. இங்கு பெருமாள் குடதிசை (வடக்கு) பாதம் வைத்து குணதிசை (தெற்கு) சிரம் (தலை) வைத்து பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி தருகிறார்.
துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு மலைபாதையில் பயணித்தால் பெருமாள் மலையின் உச்சியை அடையலாம். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இந்த கோயில் மலைமீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலைமீது நடந்து சென்றால் 1500 படிக்கட்டுகளையும்.
இந்த கோவில் சோழ மன்னருள் ஒருவரான கரிகாற் சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டதாகும். இவர் தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று திருப்பதி வெங்க டாஜலபதி பெருமாளை சேவித்து இறைவனடி சேருவதற்காக தனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட இந்த மலையில் இருந்த ஒரு இலந்தை மரத்தின் அடியில் இருந்து தவம் செய்தார்.
திருப்பதி பெருமாள் அவரது தவ வலிமையை கண்டு இந்த மன்னனின் வேண்டுகோளின் படி இந்த மலையில் அவன் முன்பு சங்ராயுத பாணியாக திருமண கோலத்தில் பிரசன்னமானார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி என்ற திருநாமத்தோடு திருமணகோலத்தில் பிரசன்னமானதால் கல்யாண பிரசன்ன வெங்கடாஜலபதி என்றும் ஸ்ரீனிவாசன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
பிரசன்ன வெங்கடாஜலபதியை தொடர்ந்து 9 சனிக்கிழமைகளில் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாளைய திருமணத் தடை நீங்கும் விரைவில் திருமணம் நடைபெறும் அதோடு வேலை வாய்ப்புகளுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அரசாங்கம் அரசியலில் நிலைத்து இருக்க மேன்மை பெறலாம். செங்கோலுடன் இருக்கும் பெருமாளை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். இந்த கோவிலை எழுப்பிய மன்னர் பெருமாளுக்கு வலது புறமும் ஸ்ரீ அலமேலுமங்கை தாயாருக்கு இடது புறமும் பாலகனாக வீற்றிருக்கிறார்.
தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு, சொல் உன்னுடையதாகவும். செயல் என்னுடையதாகவும் இருக்க அந்த மன்னருக்கு பெருமாள் அருள் புரிந்ததால் மன்னரே இந்த ஸ்தலநாயகனாக தற்போது ஷேத்திர பாலகன் கருப்பண்ணார். வீர்பசுவாமி இலந்தடியான் போன்ற திருநாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த ஸ்தல நாயகருக்கு திருப்பதி பெருமாள் பிரசன்னமானதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு வரும் பக்கதர்கள் செலுத்துகிறார்கள்.
-
Perumal Kalyanam
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உற்சவ மூர்த்தி தேகளீசபெருமாள் ஆண்டு தோறும் கடலூரில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்வது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி திருக்கோவிலில் இருந்து கடலூருக்குக்கு வருகை தந்தார். தீர்த்தவாரிக் கு பிறகு திருக்கோவி லூருக்கு திரும்பும் வழியில் திருவதிகை ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சூடி கொடுத்த சுடர் கொடியால்ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து மாலைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆலய திருப்பணி குழு தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் சீனுவாசன், அரசியல் கட்சி பிரமுகர்கள் வர்த்தக பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டன இதற்கான ஏற்பாடுகளை இந்து சமுதாய ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகள்,தாமரை பூ குழுவினர் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். -
Uthrakosa Mangai
அதிசய மரகத நடராஜர் சிலை உள்ள உத்திர கோசமங்கை மங்கள நாதர் கோயில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என்று நம்பப்படுகிறது.
ஆதிகாலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது. இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன், அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்தால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.
பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும் தான். இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.
ஒருமுறை நான்முகனுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும் மற்றொருவர் முடியையும் தேடிச்செல்வது என்றும் யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.
பிரம்மன் முடியைத் தேடியும் விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன் தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தனர்.
அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும் என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.
ஒரு அதிசயமான மரகதத்தினால் ஆன நடராஜர் சிலை உள்ள மிகவும் பெருமை வாய்ந்த திருத்தலம். மதுரையிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்திர கோசமங்கை என்ற ஊரில் உள்ள பிரசித்திபெற்ற மங்களநாதர் –மங்களாம்பிகை கோவில் ஆகும்.
இந்த தல வரலாறு பற்றி கூறியது என்னவென்றால் ராவணனுடைய மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்ததாம். அவள், இந்த உலகத்திலேயே சிறந்த சிவபெருமானை வணங்கும் பக்தனையே திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையில் இருந்தாள். சிவபெருமானை நோக்கி தியானம் செய்தாள் சிவபெருமான் அவரிடமிருந்த வேதநூல் ஒன்றை முனிவர்களிடம் தந்து இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் அவர்களிடம் என்னுடைய பக்தை மண்டோதரி என்னை வணங்கி தியானம் செய்து வருகிறாள். எனவே அவளுக்கு காட்சி தர செல்கிறேன் என்றார். மண்டோதரி முன்னர் ஒரு குழந்தை உருவத்தில் காட்சி தந்தார். அப்பொழுது அங்கு வந்த ராவணன், சிவபெருமான் தான் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டான். ராவணன் ஆர்வத்தில் குழந்தை உருவில் உள்ள சிவபெருமானை தொட முயன்றான். உடனே சிவபெருமான் அக்னி பிழம்பாக மாறி அனைத்து பொருட்களும் எரிய தொடங்கின. வேத நூல்களை காப்பாற்றும் முயற்சியில் தேவர்கள் முயன்றனர். அதில் தோல்வியடைந்து சிவபெருமானுக்கு அதில் தோல்வியடைந்து சிவபெருமானுக்கு அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று, அங்கிருந்த தீர்த்த குளத்தில் விழுந்து மாண்டார். மாணிக்க வாசகர் மட்டும் வருவது வரட்டும் என்று வேத நூல்களை இறுகப்பற்றி நமச்சிவாய நாமம் கூற ஆபத்தின்றி முடிந்தது. வேத நூல்களை காப்பாற்றி சிவபெருமானிடம் ஒப்படைத்தார். மாண்ட தேவர்களையும் இறைவன் உயிர்ப்பித்தார். பின்னர், மண்டோதரிக்கும் ராவணனுக்கும் திருமணம் நடக்க அருள்புரிந்தார்.
இந்த வேளையில் தைரியமாக தனது மீது பற்று கொண்டு வேத நூலை காத்த, மாணிக்க வாசகருக்கு, கௌரவித்து லிங்க வடிவத்தில் இருத்தி உள்ளார். மேலும் இந்த தலத்தில் மரகத நடராஜர், மாணிக்க வாசகர், இரட்டை பைரவர், சுப்ரமணியர் ஸ்படிக லிங்கம் ஆகியவைகள் உள்ளது சிறப்பானதாகும். சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்துவது இங்கு மட்டுமே உள்ளது. இறைவன் மங்களநாதர், இறைவி மங்களேஸ்வரியின் திருவருளைப்பெற மூன்று வேளையும் தரிசித்து வழிபட தடைபட்ட திருமணங்கள் நிறை வேறும் என்பதுவும், முன்வினையில் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பதுவும், இப்பிறவியில் செய்த தீயபாவங்களும் அகலும் என்பதுவும் ஐதீகம். காலை, மதியம் , மாலையில் மூன்று வேளையும் தரிசிக்க ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மரகதச்சிலையின் உயரம் 5 1/2 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டுமே பூஜை நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் என்ற விழா அன்று, மரகதச்சிலையின் சந்தன காப்பு நீக்கி, மற்ற அபிஷேகம் அனைத்தும் நடத்தப்படுகிறது.
இங்குள்ள உட்பிரகாரத்தில் நுழையும் இடத்தில் இரண்டு யாளிகள் வாயில் உள்ள கல்பந்தை கைகளால் உருட்ட முடிவது, சிற்பக்கலையின் நுணுக்கத்தை காண முடிகிறது. திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி தினத்தன்று முழுவதும் உபவாசம் இருந்து ஈஸ்வரனை தியானிப்பதுவே திருவாதிரை நோன்பாகும். சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை என்பதால் இந்த பெருமை பெறுகிறது. அன்று தேரில் வீதி உலா வருவதை ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். இதனால் முக்தி கிடைப்பதாக கூறுகின்றனர்.
எனவே தான் மார்கழி மாதம், சிறப்புடைய மாதம் என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் உளுந்து மாவினால் செய்த களி, நைவேத்யமாக படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என பெரியவர்கள் கூறுவர்.
-
Feb 26 Indraya Naal Eppadi
பிப்ரவரி 26 – தேய்பிறை அஷ்டமி விரதம்
விளம்பி வருடம் – மாசி 14
தேய்பிறை அஷ்டமி விரதம்
26-பிப்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 11.06
நட்சத்திரம் : அனுஷம் அ.கா 4.25
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – தோல்வி
மிதுனம் – பரிசு
கடனம் – சுபம்
சிம்மம் – வெற்றி
கன்னி – நன்மை
துலாம் – களிப்பு
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – சாந்தம்
மகரம் – ஜெயம்
கும்பம் – துன்பம்
மீனம் – பயம்
சந்திராஷ்டமம் : பரணி
-
world famous temples
மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha)
பாங்காக்கில் அமைந்துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர் சிலையானது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலைக்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda)

புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக்கியமானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேடகோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த்தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும்பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதோடு, இரவிலும், பகலிலும் நன்கு மின்னும்.தக்த்சாங் மடம் (Taktshang Monastry)

பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின் மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற்கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.தங்க கோயில் (Golden Temple)

இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் "ஹர்மந்திர்" ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
பிரம்பனன் (Prambanan)
இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ்பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷியாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக்கூடியவை.வாட் ராங் குன் (Wat Rong Khun)

தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.போரோபுதூர் (Borobudur)

இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோபுதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.
ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple)
உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்கநாதர் கோவில் தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப் புராணங்களின் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது.
-
Sivalaya Ottam
சைவ, வைணவ ஒற்று மையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3 ஆம் தேதி தொடங்குகிறது.
சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.
பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.
அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.
-
Virupaksha Temple
சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இந்த விருபாக்ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் இந்த கோயிலில் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. பம்பாபதி என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் கருவறை, மூன்று வாயில் அறைகள் மற்றும் தூண்களை கொண்ட ஒரு மண்டபம் போன்றவை காணப்படுகின்றன.
விருபாக்ஷா கோயில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆதியில் ஒரு சில சிலைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த கோயில் பின்னாளில் விரிவுபடுத்த பட்ட தாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரங்க மண்டபம் எனப்படும் கருவறையானது கிருஷ்ணராய தேவராயரால் 1510ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக இது விஜயநகர கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு அமைந்துள்ளது. தூண்கள், கோயில் மடைப்பள்ளி, விளக்கு தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹிந்து புராணங்களில் வரும் விலங்குகளின் உருவங்கள் இந்த கோயிலில் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.