Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Karadayan nonbu merkollum murai

    இவ்விரத நாளன்று பெண்கள் நித்திய கடன்கள் முடித்து நீராடி பூஜை அறையை அலங்கரிக்கின்றனர்.

    காமாட்சி அம்மன் படத்தினையோ, தேங்காய் வைத்த கலசத்தினையோ வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றர்.

    மஞ்சள் அல்லது பூக்களைக் கட்டிய நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைக்கின்றனர்.

    இலையில் கார்காலத்தில் விளைந்த நெல்லிருந்து கிடைத்த அரிசி மற்றும் காராமணியைக் கொண்டு தயார் செய்த உப்பு மற்றும் வெல்ல அடைகளையும், உருகாத வெண்ணையையும் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

    வழிபாட்டின் போது ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் நீ எனக்கு மாங்கல்யப் பாக்கியம் தா’ என வேண்டிக் கொண்டு காமாட்சி அம்மன் படத்திற்கு ஒரு நோன்பு கயிற்றினை சாற்றிவிட்டு பெண்கள் தங்கள் கழுத்தில் நோன்புக் கயிற்றினைக் கட்டிக் கொள்கின்றனர்.

    வழிபாட்டின் முடிவில் அடைகளை பிரசாதமாக உண்டு வழிபாட்டினை நிறைவு செய்கின்றனர்.
     

  • Savithri viradham

    காரடையான் நோன்பு…. இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

    இவ்விரதம் மேற்கொள்வதால் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிப்பதோடு அவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வினை அம்மன் வழங்குவதாக் கருதுகின்றனர்.

    வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் இந்த விரதம் பின்பற்றப்படுகிறது.

    இவ்விரத வழிபாட்டின் போது கார்காலத்தில் விளைந்த நெல்லினைக் கொண்டு அடை செய்து சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வழிபாட்டில் கவுரி ஆகிய காமாட்சி அம்மனை வைத்து வழிபடுவதால் கவுரி விரதம், காமாட்சி விரதம் என்றும், சாவித்திரி வழிபட்டதால் சாவித்திரி விரதம் என்றும் இவ்விரத முறை அழைக்கப்படுகிறது.

    இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.
     

  • Ammavaru App

    திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான படங்கள் குறித்து பக்தர்கள் விளக்கம் பெறுவதற்காக "பத்மாவதி அம்மவாரு ஆப்' என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகிலுள்ள தோட்டத்தில், தாயாரின் அவதாரம் குறித்த விளக்கப்படங்கள் தற்போது வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களின்மூலம், தாயாரின் அவதாரம் குறித்த புராணத் தகவல்களைப் பக்தர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்தப் படங்கள், விரைவில் செயலி வடிவத்துக்கு மாறும் எனத் தெரிவித்தார்.

    இந்தச் செயலிக்கு, `பத்மாவதி அம்மவாரு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியில், தாயாரின் புகைப்படங்களைத் தொட்டால், அந்தப் படங்கள்குறித்த தகவல்களை அறியலாம். மேலும், கோயில் மண்டபத்திலுள்ள சிலைகள்குறித்த விவரங்களையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். `பத்மாவதி அம்மவாரு' செயலி, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     அத்துடன் கோயில் மண்டபங்களில் உள்ள சிலைகள் குறித்த தகவல்களையும் இந்தச் செயலியில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை தேவஸ்தானம் விரைவில் அறிமுகம் செய்யும் என்றார் அவர்.
     

  • Thirupathy Koil Special Dharshan

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களின் சிபாரிசு கடிதங்களுக்கு அறை ஒதுக்கீடு, தரிசன டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி  தரிசனம் செய்வதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர்கள்  என்று மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதங்களுக்கு அறைகள் மற்றும் விஐபி  தரிசன  டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே கோயிலில், முக்கிய பிரமுகர்களின் பதவியை கவுரவிக்கும் விதமாக, அவர்களின்  சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அறை ஒதுக்கீடு, தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தேர்தல் முடியும் வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. 

    ஆனால் நேரடியாக வரும் விஐபிக்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏழுமலையான் கோயிலுக்கு முன் அரசியல் பேசக்கூடாது  என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலர் தொடர்ந்து அரசியல் பேசி வந்தனர். 

    தற்போது தேர்தல் விதிகள் உள்ளதால் கோயிலுக்கு வரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வாக்குறுதியை அளிப்பதோ,   பேசுவதோ கூடாது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள் எடுத்து வருபவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • Kallazhagar koil thirukalyanam

    108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது திருக்கல்யாண வைபவம். 

    இந்த விழாவானது வருகிற 18-ந்தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் அதே மண்டப வளாகத்தில் சாமி, தேவியர்களுடன் எழுந்தருள்வார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ந்தேதி, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் விழா நடைபெறுகிறது. மேலும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருக்கல்யாண திருக்கோலத்தில் கள்ளழகர் பெருமாள், மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணக்கிறார்.

  • Nandhiyin Kurukke Sella Kudadhu

    ஒவ்வொரு சிவன் கோயில் வாசலிலும் நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலங்களில் நந்திக்கு சிறப்பு பூஜை செய்து முக்கியத்துவம் கொடுப்பர். நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என பலரும் கூறுவர்.

    இதற்கு காரணம் நந்தி கர்ப்பகிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். நந்தி சிவனின் வாகனமாகும். வாகனம் எதுவாக இருந்தாலும் அது ஜீவ ஆத்துமாவை குறிக்கும். ஜீவ ஆத்துமா கருவறையில் உள்ள பரம ஆத்துமாவை (இறைவன்) குறிக்கும். ஜீவாத்துமாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். 

    இதனால் கருவறையில் உள்ள இறைவனை பார்த்த வண்ணம் உள்ளது. நந்தியின் குறுக்கே செல்ல தடை விதிக்க காரணம் கடவுளை அடைய  நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்பதால் தான். சன்னதியை மறைத்து நிற்க வேண்டாம் என்பதற்கு காரணமும் இதுதான். 

    கடவுள்களுக்கெல்லாம் முதல்வன் எப்படி விநாயகரோ அதே போல் கோயில்களுக்கெல்லாம் முதல்வன் நந்தீஸ்வரர் தான். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது. 
     

  • Tuesday Friday

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

    எனவே இவ்விரு தினங்களிலுமே ஒரு சில விடயங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
     
    சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ள வேண்டும்.

    வீட்டில் வெள்ளி நிறப் புறாக்களை வளர்க்க வேண்டும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்யக் கூடாதவை?

    குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

    இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.

    ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

    வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.

    விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

    நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.
     

  • Rasi Palangal

    இன்று இந்த ராசிக்கு உற்சாகம்…. 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   சிரத்தை
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – ஆர்வம் 
    கடனம் – அசதி
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி – சோர்வு 
    துலாம் –   நலம் 
    விருச்சிகம் – ஆக்கம் 
    தனுசு – நன்மை 
    மகரம் –   இன்பம் 
    கும்பம் – அமைதி
    மீனம் – பரிவு
    சந்திராஷ்டமம்    – அஸ்தம்,சித்திரை
     

  • March 10

    மார்ச் 10
    விளம்பி வருடம் – மாசி 26
    10-மார்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    2.32
    நட்சத்திரம்    :    அசுவினி    இ    1.28
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Rasi Palangal

    இன்று இந்த ராசிக்கு மறதி அதிகம்…. 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   களிப்பு 
    ரிஷபம் – லாபம்
    மிதுனம் – பயம் 
    கடனம் – நன்மை  
    சிம்மம் – பகை
    கன்னி – தேர்ச்சி 
    துலாம் –   நலம் 
    விருச்சிகம் – ஆர்வம் 
    தனுசு – ஆதாயம் 
    மகரம் –   மறதி 
    கும்பம் – பணிவு 
    மீனம் – ஆதரவு    
    சந்திராஷ்டமம்    – உத்திரம், அஸ்தம்