Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thirupathy theppa thiruvizha

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சீதா, ராமர், லட்சுமணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    இரண்டாவது நாளான இன்று இரவு ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி அமர்ந்து காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். 

    மூன்றாவது நாளான நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
     

  • Panai oolai theppam

    உலக பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயில் பங்குனித் தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா வரும் 20.03.2019 அன்று புதன் கிழமை மாலை 7 மணிக்கு நடைப்பெற உள்ளது.

    இந்த வருடம் 20 வருடம் கழித்து இயற்கை தெப்பமான பணை ஓலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை வடிவமைத்து வருகினர் அந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் .

     பிளாஸ்டிக் பொருட்கள் தவிற்கும் விதமாக இயற்கை மரமான பணை ஓலைகளால் செய்யப்பட்ட தெப்பம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டுகளில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேன்னர்களால் செய்யப்பட்ட தெப்பம் கட்டபட்டு வந்தது.

     ஆனால் இந்த முறை பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்து பணை ஓலையால் கட்டப்பட்ட தெப்பம் மக்களிடத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வை இந்த வருடம் உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை.
     

  • Thirupathy Direct dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரடியாக மகா துவாரம் என படக்கூடிய  ராஜகோபுரத்தின் வழியாக நேரடியாக  செல்ல கூடிய தரிசனத்திற்கு அனுமதிக்கக்  கூடியவர்களின் பட்டியலை அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது.

    1, ஜனாதிபதி
    2, துணை ஜனாதிபதி
    3, பிரதமர்
    4, ஆந்திர மாநில கவர்னர்
    5, முன்னாள் ஜனாதிபதி,  முன்னாள் துணை ஜனாதிபதி
    6, துணை பிரதமர்
    7, உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி
    8, நாடாளுமன்ற சபாநாயகர்
    9, ஆந்திர மாநில முதல்வர்
    10, மத்திய அமைச்சர்கள்
    11, மற்ற மாநில முதல்வர்கள்
    12, மற்ற மாநில கவர்னர்கள்
    13,  உச்சநீதிமன்ற நீதிபதிகள்
    14, ஆந்திர மாநில அமைச்சர்கள்
    15, முன்னாள் பிரதமர்
    16, முன்னாள் கவர்னர், முன்னாள் ஆந்திர மாநில முதல்வர்
    17, முன்னாள் உச்சநீதிமன்ற  முதன்மை நீதிபதி
    18, ஆந்திர மாநில சட்டமன்றத் சபாநாயகர், துணை சபாநாயகர்
    19, சட்டமேலவை சபாநாயகர், துணை சபாநாயகர்
    20, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி

    ஆகிய 20 பேர்  பட்டியலுடன் கூடிய அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது
     

  • Subramaniya swami veedhi ula video

    ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழாவில் பக்தர்களின் உள்ளங்கைகளில் "600 கிலோ " எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் 

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்  நடைபெற்று வரும்் பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாளான   இன்று  பக்தர்களின உள்ளங்கைகளில் சுமார் "600 கிலோ " எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் முருகன் தெய்வானையுடன்   "கைப்பாரமாக " தூக்கி சீர் பாதம் மற்றும் பக்தர்கள் வலம் வந்தனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனிப் பெருவிழா இந்த சிறப்பு வாய்ந்ததாகும் இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகவே இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது திருவிழா தொடர்ந்து வருகின்ற 25-ந் தேதி வரை நடக்கிறது.

    திருவிழாவின் 5ம் நாளில் "கைப் பாரம"் நிகழ்ச்சி விசேஷமாக நடந்தது விழாவையொட்டி கோவிலில் உள்ள சுவாமி எழுந்தருளும் வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் முருகப்பெருமான் அமர்ந்து மேல ரத வீதி சந்திப்பில் எழுந்தருளினார். 

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெய்வானையுடன் மணக்கோலம் கொண்ட முருகப்பெருமானுக்கு அரோகரா   திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள்  அனைவரும்  வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தலைக்கு மேல் |அலாக்காக தூக்கி ஆட்டி அசைத்து பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர். மேலும அங்கு்கூடி இருந்த பக்தர்கள் மற்றும் சீர் பாதங்கள் 

    ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்கைகளில் முருகப்பெருமானை கை பாரமாக சுமந்து செல்லும் நிகழ்ச்சி ஆண்டுக்கு 1 முறை மட்டுமே அதுவும் பங்குனி திருவிழாவின் போது நடை பெறும் முக்கிய 
     

  • March 18 – Pradhosha Naal

    18-மார்-2019 திங்கள்  
    காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், 
    மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேர்
    விளம்பி வருடம் – பங்குனி 4
     பிரதோஷம் 
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    துவாதசி    ம    2.42
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    7.05
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஜெயம் 
    ரிஷபம் – வரவு
    மிதுனம் – சோர்வு
    கடனம் – பயம் 
    சிம்மம் – உழைப்பு 
    கன்னி – களிப்பு
    துலாம் –   நன்மை 
    விருச்சிகம் – சாதனை
    தனுசு – லாபம் 
    மகரம் –   அச்சம் 
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – யோகம் 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்
     

  • Thirupathy Koil Theporchavam

    திருப்பதி வேங்கடேசப் பெருமாள் தெப்போற்ஸவ நிகழ்ச்சி, நேற்று மாலை, கோயில் அருகிலிருக்கும் சுவாமி புஷ்கரணியில் நடைபெற்றது.

    தெப்போற்ஸவ விழா இன்று தொடங்கி, அடுத்த ஐந்து நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோயில் திருக்குளம் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    உற்சவத்தின் முதல் நாளான இன்று, கோதண்டராம சுவாமி, சீதா லட்சுமண சமேதராக எழுந்தருளுகிறார். நாளை, ருக்மணி கிருஷ்ணர் அலங்காரத்திலும், நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாள்களும், தேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி திருக்கோலத்திலும் வேங்கடவன் தெப்பத்தில் பவனி வருவர்.

    விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி, திருமலை தேவஸ்தானம் வசந்தோற்ஸவம், சகஸ்ரதீப அலங்காரம் ஆகிய ஆர்ஜித சேவைகளை ரத்துசெய்துள்ளது. 

  • Thiruparankundram Subrmaniya swamy veedhi ula

    ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழாவில் பக்தர்களின் உள்ளங்கைகளில் "600 கிலோ " எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில்  "கைப்பாரமாக "  முருகப்பெருமான் வலம் வந்தார். 

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்  நடைபெற்று வரும்் பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாளான   இன்று  பக்தர்களின உள்ளங்கைகளில் சுமார் "600 கிலோ " எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் முருகன் தெய்வானையுடன்   "கைப்பாரமாக " தூக்கி சீர் பாதம் மற்றும் பக்தர்கள் வலம் வந்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க பக்தி பரவசம் அடைந்தனர்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனிப் பெருவிழா இந்த சிறப்பு வாய்ந்ததாகும் இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகவே இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது திருவிழா தொடர்ந்து வருகின்ற 25-ந் தேதி வரை நடக்கிறது.

    திருவிழாவின் 5ம் நாளான இன்று (16-ந் தேதி) "கைப் பாரம"் நிகழ்ச்சி விசேஷமாக நடந்தது விழாவையொட்டி கோவிலில் உள்ள சுவாமி எழுந்தருளும் வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் முருகப்பெருமான் அமர்ந்து மேல ரத வீதி சந்திப்பில் எழுந்தருளினார். 

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெய்வானையுடன் மணக்கோலம் கொண்ட முருகப்பெருமானுக்கு அரோகரா   திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள்  அனைவரும்  வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தலைக்கு மேல்  தூக்கி ஆட்டி அசைத்து பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர். 

    மேலும அங்கு்கூடி இருந்த பக்தர்கள் மற்றும் சீர் பாதங்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்கைகளில் முருகப்பெருமானை கை பாரமாக சுமந்து செல்லும் நிகழ்ச்சி ஆண்டுக்கு 1 முறை மட்டுமே அதுவும் பங்குனி திருவிழாவின் போது நடை பெறும் முக்கிய நிகழ்வாகும்.

  • Dhavanthri peedaathi abishegam

    வாலாஜா ஸ்ரீ தன்வந்தரி ஆரோக்கிய  பீடத்தில் உலக நன்மை வேண்டி  1008 கலச அபிஷேகளுடன் 1000 நாதஸ்வர மேலதாலங்களுடன்    16 தெய்வங்களுக்கு திருகல்யானம்  உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் பிரோஹித் கலந்துகொண்டு வழிப்பாடு செய்தார். 
     
    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி யாக பீடத்தில் மஹோத்சவம் 2019 என்ற தலைப்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழித்தோங்க பருவகால மழையை வேண்டியும் 16 தெய்வங்களுக்கு ஒரே  முகூர்த்தத்தில் ஒரே மேடையில் திருக்கல்யாணமும் மற்றும் தன்வந்திரி யாக பீடத்தின் பதினைந்தாம் ஆண்டு கல்வெட்டு திறப்பு விழாவும் மேலும் தன்வந்திரியாக பீடத்தை 58வது ஜெயந்தி விழா என்பன உள்ளிட்ட முப்பெரும் விழா கலந்த நிகழ்ச்சி வெகுவிமற்சியாக நடைபெற்று வருகிறது.

     இதில்  1008 கலச அபிஷேகம் செய்தும் ஆயிரம் நாதஸ்வர இசையும் மேலதாளங்கல் முழங்க 16 தெய்வங்களுக்கு திருமண நிகழ்ச்சியானது துவங்கியது மேலும் இந்த ஐந்தாம் ஆண்டு தெய்வங்களின் திருமண நிகழ்ச்சியின் நினைவையொட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டு  திறக்கப்பட்டது இதில் தமிழக ஆளுனர். பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கல்வெட்டினை திறந்து வைத்தார் மேலும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமிகளை வழிபட்டார்.

    இதனை தொடர்ந்து கிராமிய கலைஞர்கள் ஆனா நாதஸ்வர கலைஞர்களை பாராட்டி சான்றுகள் வழங்கினர் .பின்னர் பேசிய ஆளுனர் . மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி  2016 ம் ஆண்டு யோக ,சித்தா ,ஆகிய துறைகளை மக்கள் நன்மைக்கு துவைக்கி வைத்தார் .என பேசினார் .இவ் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
     

  • March 17 subamugurthanaal

    மார்ச் 17  –  வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – பங்குனி 3
    17-மார்-2019 ஞாயிறு  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    மா    5.02
    நட்சத்திரம்    :    பூசம்    இ    8.43
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்