Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மார்ச் 10 – அமாவாசை

    மார்ச் 10 – அமாவாசை
    சோபகிருது வருடம் – மாசி 27
    அமாவாசை
    10-மார்-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : அமாவாசை ம 3.39
    நட்சத்திரம் : சதயம் அ.கா 4.50
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக்கொள்ளை….

    ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக்கொள்ளை….

    மயிலாடுதுறை அருகே முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக் கொள்ளை திருவிழா.

    வீதியுலாவாக மயனாத்திற்கு சென்ற சுவாமிக்கு தீபாரதனை எடுத்து கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கொள்ளையிடும் மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து கிழங்கை பெற்று சென்றனர்.
     
    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    கோவில் பரம்பரை அறங்காவலர் பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்காளம்மன் சுவாமி, வீரபத்திரர் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மாவிளக்கிட்டு அமபாளுக்கம் வீரபத்திரருக்கும் வேண்டுதலை நிறைவேற்ற மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சுவாமிகள்  (சுடுகாடு) மயானத்தை  அடைந்தது.

    அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டு விரதம் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகளை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கிழங்கை கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழங்கை கொள்ளையிட்டு பக்தர்களுக்கு வழங்கினர்.

    இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்துச் சென்று ஆலயத்தில் அம்மனை தரிசித்து கிழங்கை உண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • சிவராத்திரி முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் அருகே பிரகன் நாட்டையாஞ்சலி நிகழ்ச்சி…

    சிவராத்திரி முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் அருகே பிரகன் நாட்டையாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

    சிவராத்திரி விழா நேற்று சிவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலில் நேற்று அரசு விழாவாக பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஆறு நாட்களுக்கு பிரகன் நாட்டியஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் நாள் நிகழ்வாக தஞ்சை பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து வந்த நாட்டிய கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை அரங்கேற்றி இசை அஞ்சலி செலுத்தினர். இதில் பெங்களூர் கௌசல்யா நிவாஸ் அணியினர் சிவராத்திரி உருவான வரலாறு முழுவதும் பெண்கள் ஆண்கள் வேடமிட்டும் நாட்டிய‌நாடகத்தை நிகழ்த்தினர்.

    மும்பை சேர்ந்த நடண கலைஞர்கள் தொடிவாளா நடணம்  ஆடி அசத்தினர. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

  • மார்ச் 9 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நன்மை
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     – தேர்ச்சி
    கடகம்         –  நஷ்டம்    
    சிம்மம்         –   துன்பம்   
    கன்னி         –    சினம்
    துலாம்         –     ஓய்வு
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –     தோல்வி
    மகரம்         –    சுகம்
    கும்பம்         –      கவனம்   
    மீனம்         –      வேகம்
    சந்திராஷ்டமம்    –       புனர்பூசம்

  • மார்ச் 9 – ராமேஸ்வரம் சிவன் தேர்

    மார்ச் 9 – ராமேஸ்வரம் சிவன் தேர்
    சோபகிருது வருடம் – மாசி 26
    09-மார்-2024 சனி
    ராமேஸ்வரம் சிவன் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி மா 6.00
    நட்சத்திரம் : அவிட்டம் கா 6.58
    யோகம் : சித்த-அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • அங்காளம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்…

    ஆரோவில் அருகே அங்காளம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிேஷகம் உள்ளிட்ட ஆறு வகை அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை உற்வசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது.

    ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி இன்று தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும்  தயிர், எலும்பிசை,மஞ்சள்,பால், இளநீர், உள்ளிட்ட ஆறு வகையான சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.

  • மகா சிவராத்திரியோடு, பிரதோஷம்… தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு அபிஷேகம்…

    மகா சிவராத்திரியோடு, பிரதோஷமும் சேர்ந்து வருவதை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டு வருகின்றனர்

    உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது.  

     மகா சிவராத்திரியோடு பிரதோஷமும் சேர்த்து வருவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


     
    அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

    பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிப்படனர்.

  • மார்ச் 8 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆக்கம்
    ரிஷபம்         – சோர்வு
    மிதுனம்     – துயரம்
    கடகம்         –  துன்பம்   
    சிம்மம்         –   நஷ்டம்  
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  உதவி
    தனுசு         –     ஊக்கம்
    மகரம்         –    ஓய்வு
    கும்பம்         –      சுகம்  
    மீனம்         –      பரிவு
    சந்திராஷ்டமம்    –       திருவாதிரை

  • மார்ச் 8 – மகா சிவராத்திரி

    மார்ச் 8 – மகா சிவராத்திரி
    மாசி 25 சோபகிருது வருடம்
    சுபமுகூர்த்த நாள்
    பிரதோஷம்
    மகா சிவராத்திரி
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 8.19
    நட்சத்திரம் : திருவோணம் கா 8.30
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • மகா சிவராத்திரியன்று மறந்தும் இதை செய்யாதீங்க…

    மகா சிவராத்திரி நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

    சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.

    கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.