Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ‘கோவிந்தா’ கோஷத்தோடு வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்…

    சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்தோடு அருள்மிகு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

    உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருமாலிருஞ்சோலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரை புறப்பாடானார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார்.

    அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, திருவில்லிப்புத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச்சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார். அங்கு அருள்மிகு வீரராகவப் பெருமாளுக்கு கள்ளழகர் மாலை சாத்தும் வைபவம் நடைபெற்றது. வைகையாற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு 'கோவிந்தா' முழக்கத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். பெண்கள் சர்க்கரை தீபம் காட்டினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநகர காவல்துறையின் சார்பாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியின் சார்பாக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும், நடமாடும் கழிப்பறை வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அழகர்கோவில் தொடங்கி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில் வரை சற்றேறக்குறைய 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் இருமார்க்கத்திலும் கள்ளழகர் எழுந்தருள்கிறார். வைகையாற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் பிற்பகல் 12 மணியளவில் பக்தர்களால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  • ஏப்ரல் 23 – சித்ரா பவுர்ணமி,…

    ஏப்ரல் 23 – சித்ரா பவுர்ணமி,…
    குரோதி வருடம் – சித்திரை – 10
    ஏப் 23, 2024
    செவ்வாய்
    சித்ரா பவுர்ணமி,
    மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
    வாஸ்து நாள் (காலை 8.54 – 9.30)
    நல்ல நேரம் : 7.30 – 9.002
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 2.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  சதுர்த்தசி அ.கா 4.20
    நட்சத்திரம் :  சித்திரை இ 11.00
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஏப்ரல் 23 – வாஸ்து நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – லாபம்
    ரிஷபம்         – பயம்
    மிதுனம்     – பரிவு
    கடகம்         –  சுபம்
    சிம்மம்         –   நன்மை   
    கன்னி         –    கவலை
    துலாம்         –     செலவு  
    விருச்சிகம்     –  அன்பு
    தனுசு         –     தாமதம்
    மகரம்         –    வரவு
    கும்பம்         –      சுகம்
    மீனம்         –      போட்டி
    சந்திராஷ்டமம்    –        அவிட்டம், சதயம்

  • திருப்பதியில் தங்க தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி…

    திருப்பதி ஏழுமலையான் கோயில்  வருடாந்திர   வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை  மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன்  தங்க தேரில் திருமாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல வலம் வந்து அருள் பாலித்தார்.

    தங்க ரதம்  வீதி உலாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்த கோவிந்தா மனம் உருகி வேண்டி கற்பூர ஆரத்தி எடுத்து தங்க தேரில் வலம் வந்த சுவாமியை வழிபாடு செய்தனர். தங்க தேரில்  தரிசிப்பதன் மூலம் லட்சுமி தேவி அருள் செல்வம், இன்பம், ஆசீர்வாதம், அனைத்து தானியங்கள் மற்றும் ஏழுமலையானின்  அருள் கிடைக்கும்  என்று பக்தர்கள் நம்பிக்கை.

    இந்நிகழ்ச்சியில் இ.ஓ. ஏ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம், விஜிஓ நந்த கிஷோர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று மதியம்  கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் 2 மணிக்கு பால்,தயிர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

  • ஏப்ரல் 22 – இன்றைய ராசிபலன்….

    ஏப்ரல் 22 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சினம்
    ரிஷபம்         – திறமை  
    மிதுனம்     – உறுதி
    கடகம்         –  கோபம்
    சிம்மம்         –   தனம்  
    கன்னி         –    பயம்
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  போட்டி
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    தாமதம்
    கும்பம்         –      நற்சொல்
    மீனம்         –      வீம்பு
    சந்திராஷ்டமம்    –        திருவோணம், அவிட்டம்

  • ஏப்ரல் 22 – மதுரை மீனாட்சி தேர்…

    ஏப்ரல் 22 – மதுரை மீனாட்சி தேர்…
    குரோதி வருடம் – சித்திரை – 9
    ஏப் 22, 2024
    திங்கள்
    மதுரை மீனாட்சி,
    கடையம்,
    சங்கரன்கோவில்,
    தூத்துக்குடி சிவன் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 4.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 2.29
    நட்சத்திரம் :  அஸ்தம் இ 8.50
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழா…

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழா நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நால்வரால்  பாடல் பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீ இளங்கிலி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆச்சி ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் விழா நடைபெறும். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று கொடியேற்றமும் மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும் 5-ம் நாள் திருக்கல்யாண உற்சவம் 7-வது நாளான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    இன்று காலை 8:00 மணிக்கு தேரில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளினர். அதன் பின்னர் பக்தர்கள் சிவ சிவ என கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இத்திருத்தேர் நான்கு மாத  வீதிகளிலும் வலம் வந்தது. இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • திருமாங்கல்யம் தந்த திருமங்கலத்தில் மீனாட்சி திருக்கல்யாணம்…

    மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்திற்கு திருமாங்கல்யம் செய்து தந்த திருமங்கலத்தில் மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    600 ஆண்டுகளுக்கு மேல் பழம்பெருமை வாய்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி – சொக்கநாதர் ஆலயத்தில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் கல்யாண வைபோகத்திற்கு திருமங்கலத்தில் இருந்துதான்  திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக வரலாறு உள்ளது அதனால்யே இந்த ஊருக்கு திருமாங்கல்யபுரம் என்ற பெயர் வந்ததாகவும் இது நாளடைவில் திருமங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    மீனாட்சி அம்மன் கல்யாண வைபோகத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த ஊர் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் அதே வேளையில் இத்திருக்கோவிலிலும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சொக்கநாதர் – பிரியாவிடை மீனாட்சி அம்மன்,பவளக் கனிவாய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் மீனாட்சிக்கு பட்டாடை உடுத்தி  கோவில் சிவாச்சாரியார்கள் சொக்கநாதர் – மீனாட்சியாக மாலை மாற்றும் வைபவமும் அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சொக்கநாதர் – மீனாட்சிக்கு திருமாங்கல்யம் சூட்டினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.சொக்கநாதர் – மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தையொட்டி சுமங்கலி பெண்கள் புதிதாக திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொண்டனர்.

    இந்த திருமண வைபவத்தை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, கோவில் சிவாச்சாரியார் சங்கரநாராயண பட்டர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • காஞ்சிபுரம் ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

    காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜகுபேரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜகுபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டிருந்தது.இக்கோவிலில்  ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும்,இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி-3 யாககுண்டங்கள்,151 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சென்னை வடபழனி கோயில் அர்ச்சகர் சௌந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்கள். யாகசாலை பூஜைகள் நேற்று  மாலையில் தொடங்கியது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள்  தலைமையிலான விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிந்தமையால் விழா குழுவினரால் ஏற்பாட்டில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு சுற்று வட்டார ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ குபேரர் அருள் பெற்று அன்னதானம் பெற்று சென்றனர்.

  • ஏப்ரல் 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    ஏப்ரல் 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – சித்திரை – 8
    ஏப் 21, 2024
    ஞாயிறு
    பிரதோஷம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    மகாவீர் ஜெயந்தி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி அ.கா 12.30
    நட்சத்திரம் :  உத்திரம் மா 6.23
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்