Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மே 16 – இன்றைய நல்லநேரம்…

    மே 16 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – வைகாசி – 03
    மே 16, 2024
    வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் :  அஷ்டமி கா 9.06
    நட்சத்திரம் :  மகம் இ 8.33
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • மே 16 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சுபம்
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – சுகம்  
    கடகம்         –  ஆதாயம்
    சிம்மம்         –   தாமதம்  
    கன்னி         –    விருப்பம்  
    துலாம்         –     தடை
    விருச்சிகம்     –  தேர்ச்சி  
    தனுசு         –     அலைச்சல்
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      பக்தி
    சந்திராஷ்டமம்    –        மூலம். பூராடம்

  • அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா

    அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா

     அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரஸ்தி பெற்ற அருள்மிகு செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.‌ இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி வசந்த விழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வைகாசி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மங்கல இசை உடன் ஊர்வலமாக கொடி எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.‌ அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கும், பலிபீடத்திற்கும், மஞ்சள், தயிர், பால், இளநீர், திருமஞ்சனம், தேன், பழக்கலவைகள் என்ன 11 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
    அதனைத் தொடர்ந்து கலசங்களில் பூஜித்து வைக்கப்பட்ட புனித நீர் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு தீப தூப ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவருக்கும் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.‌ 

     

  • காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா

    காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா

     

  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கிய வைகாசி விசாகத் திருவிழா

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கிய வைகாசி விசாகத் திருவிழா

     

     

  • காரைக்கால் ஸ்ரீவீரமாகாளிம்மன் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேகம்

    காரைக்கால் ஸ்ரீவீரமாகாளிம்மன் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேகம்

    காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளிம்மன் ஆலயத்தில் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேக நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

  • மே 15 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – அமைதி
    ரிஷபம்         – நஷ்டம்
    மிதுனம்     – பாசம்
    கடகம்         –  நற்செயல்
    சிம்மம்         –   பாராட்டு
    கன்னி         –    சிந்தனை
    துலாம்         –     சலனம்
    விருச்சிகம்     –  ஆர்வம்
    தனுசு         –     சுகம்
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      பிரயாசை
    மீனம்         –      கீர்த்தி
    சந்திராஷ்டமம்    –        கேட்டை , மூலம்

  • மே 15 – இன்றைய நாள் எப்படி?

    மே 15 – இன்றைய நாள் எப்படி?
    குரோதி வருடம் – வைகாசி – 02
    மே 15, 2024
    புதன்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    எமகண்டம் : 7.30 – 9.00
    குளிகை : 10.30 – 12.00
    ராகு : 12.00 – 1.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  சப்தமி கா 7.40
    நட்சத்திரம் :  ஆயில்யம் மா 6.12
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா…

    குடியாத்தம் நகரில் கோலாகலமாக நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழா. குடியாத்தம் நகரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

    இந்த ஆண்டு சிரசு ஊர்வலம் அதிகாலையில் முன்கூட்டியே நடைபெற்றதால் பக்தர்கள் ஏமாற்றம். வழக்கமாக காலை 6:00 மணிக்கு தரணம் வேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு 10 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சிரசு வந்தடையும். ஆனால் இந்த முறை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எட்டு முப்பது மணிக்கு எல்லாம் கோவிலுக்குள் சென்றதால் வெளி மாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து சரசு விழாவை காண வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆண்டு தோறும் வைகாசி 1- ம் தேதி நடைபெறும் புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நகர் முழுவதும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான  தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் இருந்து அமம்ன் சிரசு நகரின் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலத்தில் உள்ள அம்மன் உடலில் பொறுதப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    அமம்ன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

     

  • சட்டை நாதர் சுவாமி கோயிலில் கோ பூஜை வழிபாடு…

    சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு  சிறப்பு கோ பூஜை வழிபாடு.

     மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.  இந்நிலையில்  வைகாசி  மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வணங்கி வழிபட்டனர்.