Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Garuda bagavan statue kumbabishegam

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் 21 அடி உயர கருட பகவான் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் பரிவார மூர்த்திகளாகவும் பெரிய திருவடியாகவும் விளங்கும் கருட பகவானுக்கு 21 அடி உயரம் உள்ள விஸ்வரூப கருட பகவான் தும்பிகை ஆழ்வார் மற்றும் நவக்கிரகங்கள் மிகவும் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    இதன் மகா கும்பாபிஷேகம் இன்றுகாலை நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பகவத் அணுக்கரை, ஆச்சார்ய வர்ணம், அங்குரார்பணம், அக்னி பூஜை, வாஸ்து சாந்தி, திருமஞ்சனம் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்ற பின்பு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நேற்று இரவு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இன்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சம்ரோஷணம், பிரம்மபூஜையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பு புதிதாக கட்டப்பட்ட 21 அடி உயர விஸ்வரூப கருட பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை தீர்த்த பிரசாத விநியோகங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.v

  • September 11 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  அலைச்சல்
    ரிஷபம் –    நட்பு
    மிதுனம் –   சுகம்
    கடகம் –    உயர்வு
    சிம்மம் –   அமைதி
    கன்னி –    நலம்
    துலாம் –     திடம்
    விருச்சிகம் – பிரீதி
    தனுசு –     ஆசை
    மகரம் –    எதிர்ப்பு  
    கும்பம் –     வரவு
    மீனம் –      லாபம்
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்

  • September 11 2023 Subamuhurthanaal

    செப்டம்பர் 11- சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஆவணி 25
    11-செப்-2023 திங்கள்
    பாரதியார் நினைவு நாள்
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி ந.இ 2.1
    நட்சத்திரம்: பூசம் இ 10.56
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • maha shakthi mariamman koil festival

    கிருஷ்ணகிரியில் உள்ள கிட்டம்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி வட்டம், கிட்டம்பட்டியில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு ஜீர்ணோதாரன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.   

    இன்று காலை அம்மன் மூல மந்திர ஜெப ஹோமத்துடன் துவங்கிய விழா, 108 மூலிகை யாகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மனுக்கு 108 மூலிகை நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் கிட்டம்பட்டி, அவதானப்பட்டி, அகசிப்பள்ளி, மோட்டூர், கனகமுட்லு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் க்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

  • Karur mariamman koil kumbabishegam

    கரூர் தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட  சின்னாண்டாங் கோவில்  பகுதியில் தீர்த்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    தற்போது புனரமைப்பு  பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.  புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹூதி பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 2 கால யாகவேள்வி பூஜைகளை நடைபெற்றது.

     இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை  நிறை வடைந்ததும்   சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை  மேளதாளங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோபுர கலசத்தை வந்தடைந்த உடன் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றினர்.

    கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் செல்வ விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் கரூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • September 10 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  தீரம்
    ரிஷபம் –    பக்தி
    மிதுனம் –   எதிர்ப்பு
    கடகம் –    பிரீதி
    சிம்மம் –   சுகம்
    கன்னி –    முயற்சி
    துலாம் –     வரவு
    விருச்சிகம் – உயர்வு
    தனுசு –     நட்பு
    மகரம் –    லாபம்
    கும்பம் –     நலம்
    மீனம் –      அன்பு
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்

  • September 10 2023 Subamuhurthanaal

    செப்டம்பர் 10 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஆவணி 24
    10-செப்-2023 ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி ந.இ 12.12
    நட்சத்திரம் : புனர்பூசம் இ 8.35
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thiruchendur deparadhanai

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணிதிருவிழா  கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான குடவருவாயில் தீபாராதனை இன்று மேலக் கோவிலில் வைத்து நடைபெற்றது.

    இதனையொட்டி முன்னதாக  குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. குடவருவாயில் தீபாராதனையொட்டி  சுவாமி அம்பாள் தனித்தனியே தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் பிரதான கதவு சாத்தப்பட்டது. அதேநேரத்தில் எதிர்புரம் சுவாமி ஜெயந்திநாதர்  கீழ ரதவீதி முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்ததும், எதிர் சேவைக்காக கதவு திறக்கப்பட்டது.

    பின்னர்  தொடர்ந்து  சுவாமிகும் அம்பாளுக்கும் ஜெயந்திநாதருக்கு ஒரே நேரத்தில்  தீபாராதனை  நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர். தொடார்ந்து சுவாமி மற்றும்  அம்பாள் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி  சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில்  உலா வந்தனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது..

  • Prityankara devi festival

    மகா பிரத்தியங்கிரா காளி ஜென்மாஷ்டமி தினத்தில் அவதரித்த திருநாள் என்பதால் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட மகா பிரித்திங்கரா காளி ஆலயத்தில் ஜென்மாஷ்டமி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படும். அதன்படி ஆலய பீடாதிபதி நடத்துர் ஜனார்த்தன சுவாமிகள் மற்றும் இளைய பிடாதிபதி வரத தேசிகன் தலைமையில் காலை காலை முதல் காளிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நள்ளிரவு பைரவ பலி  பூஜை மற்றும் குருதி பூஜைகள் நிறைவடைந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் பிரித்தியங்கரா காளிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்படும் பட்டாசு சத்தங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் பிரித்யங்கரா காளிக்கு ஜெ! ஜெ! என பல்லாயிரக்கணக்கான மக்கள் கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் குழந்தைகள் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    4

    மேலும் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அஷ்டமி தினத்தில் மாதம்தோறும் நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது இந்த பூஜைகளில் கலந்து கொள்வதால் பில்லி சூனியம் ஏவல் மற்றும் தீய சக்திகளிடமிருந்து நம்மை அம்மன் பாதுகாப்பால் என்பதும் எதிரிகளின் சூழ்ச்சி மற்றும் தடைகள் தகர்த்தெறிந்து அனைத்திலும் வெற்றி பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன் நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் மாதம் தோறும் மற்றும் வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் ஜென்ம அஷ்டமி தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூஜை மற்றும் யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

  • September 09 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மகிழ்ச்சி
    ரிஷபம் –    திறமை
    மிதுனம் –   லாபம்
    கடகம் –    உதவி
    சிம்மம் –   உயர்வு
    கன்னி –    பிரீதி
    துலாம் –     வரவு
    விருச்சிகம் – உழைப்பு
    தனுசு –     அன்பு
    மகரம் –    ஆசை
    கும்பம் –     சுகவீனம்
    மீனம் –      பொறுமை
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை