இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பீடை
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – ஆதரவு
கடனம் – தோல்வி
சிம்மம் – பரிசு
கன்னி – லாபம்
துலாம் – செலவு
விருச்சிகம் – சுகம்
தனுசு – வரவு
மகரம் – வெற்றி
கும்பம் – நன்மை
மீனம் – பயம்
சந்திராஷ்டமம் – திருவோணம்
Author: லிங்கேஷ்
-
Rasi Plangal
-
April 14 – Tamil New Year
ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
விகாரி வருடம் – சித்திரை 1
தமிழ் புத்தாண்டு
14-ஏப்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சூன்ய
திதி நேரம் : நவமி கா 6.31
நட்சத்திரம் : ஆயில்யம் இ 3.08
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Tamil New Year vepampoo Pachadi
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும் என்பதை உணர்த்தும் விதமான வேப்பம்பூ பச்சடி அன்றைய உணர்வில் சேர்க்கப்படுகிறது.
வேப்பம்பூ பச்சடியை செய்யும் முறை ….
தேவையானவை:
மாங்காய் : 2
வெல்லம் : தேவையான அளவு
வேப்பம்பூ : சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
பச்சைமிளகாய் ; 5செய்முறை:
மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாற வேண்டும்.
-
Tamil New Year Wishes
சித்திரை 1 …. உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் சித்திரை 1 ஆம் தேதி, அரசு விடுமுறை அளித்து வருகிறது.
தமிழர்களின் நாட்காட்டியில் அமைந்துள்ள முதல் மாதமான சித்திரையின் முதல் நாளை ’புது வருஷம்’ என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் அழைக்கின்றனர்.
அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.
தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்காரத் தோரணமிடுவர். இதையடுத்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். பின்னர் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வர்.
தமிழ்ப்பத அன்றைய வழிபாட்டின் போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர். அதேபோல் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுளின் படத்தின் முன்பு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு விளம்பியில் பிறந்தது. இந்தாண்டு என்ற விகாரி என்ற பெயரில் பிறந்துள்ளது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சினம்
ரிஷபம் – பீடை
மிதுனம் – அச்சம்
கடனம் – செலவு
சிம்மம் – உதவி
கன்னி – விவேகம்
துலாம் – வீரம்
விருச்சிகம் – போட்டி
தனுசு – பெருமை
மகரம் – இன்பம்
கும்பம் – இரக்கம்
மீனம் – கீர்த்தி
சந்திராஷ்டமம் – உத்திராடம்
-
April 13 Sir Rama Navami
ஏப்ரல் 13 ஸ்ரீராமநவமி
விளம்பி வருடம் – பங்குனி 30
ஸ்ரீராமநவமி, ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்
13-ஏப்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 8.40
நட்சத்திரம் : புனர்பூசம் கா 6.12
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Vetri tharum sri rama jayam
ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும். ராமன்என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.
அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும் மந்திரமாக ஸ்ரீராம ஜெயம் விளங்குகிறது.
"ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா'என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும்"பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதைஅடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா'என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமிகடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.
சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதி வேண்டுதல்களுக்காக இவ்வாறு எழுதப்படுகிறது.
-
Varumai Pini Agatrum Rama Navami
ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது. சித்திரைமாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை.
இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம்உச்சரிக்கலாம்.
ராம நவமி நாளில் விரதமிருந்து மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு.
-
Rama Navami Viradha vazipadu
ராமநவமி அன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர் மாக்கோலம் போடுவார்கள்.
ஸ்ரீராமர் பிறந்தது, நன்றாக அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு.
ஸ்ரீராமர் பிறந்ததை, தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.
ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.
-
Astami navamiku etram thandha iraivan
அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் காரியத்திலும் இறங்காமல், இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே., நாங்கள் என்ன பாவம் செய்தோம்?'' என்று வருந்தினவாம். அதற்கு கருணை வடிவே ஆன இறைவன் "உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்'' என்று வாக்களித்தாராம்.
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.
பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம். ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.