இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – பிரீதி
மிதுனம் – சுகம்
கடனம் – உயர்வு
சிம்மம் – நட்பு
கன்னி – புகழ்
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – வெற்றி
தனுசு – நிறைவு
மகரம் – கவலை
கும்பம் – செலவு
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி
Author: லிங்கேஷ்
-
Rasi palangal
-
May 16 Pradhosham
மே 16 – பிரதோஷம்
விகாரி வருடம் – வைகாசி 2
பிரதோஷம்
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
16-மே-2019 வியாழன் ரம்ஜான்10
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சூன்ய
திதி நேரம் : துவாதசி கா 7.46
நட்சத்திரம் : சித்திரை அ.கா 4.06
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Thirupathy Ezhumalayan Koil Rain Yagam
திருமலை திருப்பதி தேவஸ்தானம் காஞ்சி மடம் இணைந்து மழை வேண்டி திருமலையில் காரீரி இஸ்டி யாகம் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு யாகம் நடைபெற்று வருகிறது.
நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் போதிய மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று தொடங்கிய காரீரி இஸ்டி யாகம் 18 ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.
மேலும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஷ்வர சாமி கோவிலில் வருண ஜபத்தையும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் திருமலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் காரீரி இஸ்ட்டி யாகத்தை தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதியினர் சமேதர்களாக காரீரி இஸ்ட்டி யாகத்தில் கலந்து கொண்டனர்.
உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை, கருப்பு ஆடு ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நடத்தினர்.
இதேபோல் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வர சுவாமி கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் இசைக்கலைஞர்கள் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்த வர்ஷ்னிராக ஆலாபனை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், கடந்த 2017 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்ட்டி யாகம், வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன அந்த ஆண்டில் சிறப்பான முறையில் மழை பெய்து நாடு செழிப்படைந்தது. இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்ட்டி யாகத்தைத் தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும், நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள் என்று கூறினார்.
இம் மாதம் 18 ம் தேதி வரை காரீரி இஸ்ட்டியாகம், வருணஜபம், அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடை பெறும் என அவர் தெரிவித்தார்.
-
thirupathy malaiappar
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான இன்று மாலை குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் எழுந்தருளினார். பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட திருக்கல்யாண வைபவத்தை தேவஸ்தானம் திருமலையில், 3 நாள்கள் பரிணய உற்சவமாக நடத்தி வருகிறது.



அதன்படி, திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் நேற்று திங்கட்கிழமை விமரிசையாக தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான இன்று மாலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கில் பரினய மண்டபத்திற்கு ( கல்யாண மண்டபத்துக்கு ) எழுந்தருளினர்.



அதன்பின், அவர்களுக்கு திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, தீப தூப ஆராதனை செய்து, அவர்கள் இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தினர். பின்னர், இரவு மீண்டும் உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இதில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான இணை செயல் அலுவலர் லட்சுமிகாந்தம், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் மற்றும் அதிகாரிகளும், அர்ச்சகர்களும், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
-
Samayapuram Rishaba vaganathil Amman Veedhi Ula
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழா கடந்த 6 ந்தேதி தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
ஆயிரம் கண்களுடைய சமயபுரத்தாளுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும்.பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில்,ஐம்பெருங்கலை,ஐம்பெரும்பீடம், மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள பஞ்சபிரகார உற்சவம் மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்க்காக இவ்விழா நடைபெறும்.
இந்நிலையில் 9 ம் நாளில் அம்மன் ரிஷப வாகனத்தில் வசந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு சன்னதி மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஆதாயம்
ரிஷபம் – சுகம்
மிதுனம் – நிறைவு
கடனம் – வரவு
சிம்மம் – செலவு
கன்னி – தாமதம்
துலாம் – தடங்கல்
விருச்சிகம் – களிப்பு
தனுசு – வெற்றி
மகரம் – கவலை
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – சாந்தி
சந்திராஷ்டமம் – பூரட்டாதி -
May 15 Indrya Naal Eppadi
மே 15 – காஞ்சி குமரக்கோட்டம் முருகன் தேர்
விகாரி வருடம் – வைகாசி 1
காஞ்சி குமரக்கோட்டம் முருகன் தேர்
15-மே-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சூன்ய
திதி நேரம் : ஏகாதசி கா 9.50
நட்சத்திரம் : உத்திரம் கா 6.03
யோகம் : அமிர்த-மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Valam tharum vaigasi madham
வைகாசி முதல் நாளில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம். கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள புனித நீர் நிலைகளில் வடக்கு நோக்கி கங்கையை பிரார்த்தித்து நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது. ஆதிசக்தியானவள் அந்த ஆறு குழந்தைகளை அரவணைத்து ஓருடல் ஆக்கினாள் என்பது புராணம். அக்குழந்தையே ஆறுமுகனான முருகப்பெருமான்.
வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே.
வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
-
Vaigasi Madha Subamugurtham
16-05-2019 வியாழன் – வைகாசி மாதம் 2 – வளர்பிறை, சுன்யதிதி – சுப முகூர்த்தம்
17-05-2019 வெள்ளி – வைகாசி மாதம் 3 – வளர்பிறை, சதுர்தசி சுப முகூர்த்தம்
23-05-2019 வியாழன் – வைகாசி மாதம் 9 தேய்பிறை, பஞ்சமி முகூர்த்தம்
29-05-2019 புதன் – வைகாசி மாதம் 15 தேய்பிறை, தசமி முகூர்த்தம்
06-06-2019 வியாழன் – வைகாசி மாதம் 23 வளர்பிறை, சதுர்த்தி சுப முகூர்த்தம்
13-06-2019 வியாழன் – வைகாசி மாதம் 30 வளர்பிறை, ஏகாதசி சுப முகூர்த்தம்
14-06-2019 வெள்ளி – வைகாசி மாதம் 31 வளர்பிறை, துவாதசி சுப முகூர்த்தம் -
Prinaya Urchavam Kolagalam
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலத்துடன் தொடங்கியது. திருமலையில் உள்ள ஸ்ரீ நாராயணகிரி பூங்காவில் ஸ்ரீ பத்மாவதி-சீனிவாசர் பரிணயம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள உற்சவத்தில் முதல் நாளான இன்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு நாராயணகிரி பூங்காவை வந்து அடைந்தார். உடன் ஸ்ரீ தேவி, பூதேவி உற்சவ மூர்த்திகள் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதனையடுத்து பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார். பின்னர் சம்பிரதாயப்படி பட்டுப்புடவைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி,வேத மந்திரங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதத்தை தெரிவித்துக்கொண்டனர்.
அப்போது இறைவனது திருக்கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மகிழ்ச்சியால் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது அப்பொழுது நான்கு வேதங்கள் ஓதப்பட்டு அன்னமய்யா கீர்த்தனையில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டது.
இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் , இணை செயல் அலுவலர் லக்ஷ்மீ காந்தம், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருணனை உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை செவ்வாய்க்கிழமை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் பரிணயம் மண்டபத்திற்கு எழுந்தருள உள்ளனர்.