செப்டம்பர் 05 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
குரோதி வருடம் – ஆவணி 20
செப்டம்பர் 05 – 2024
வியாழன்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
ஆசிரியர் தினம்
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை கா 11.48
நட்சத்திரம் : உத்திரம் கா 6.42
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Author: லிங்கேஷ்
-
September 05 2024 Subamuhurthanaal
-
venugopala swamy yesal sevai
காஞ்சிபுரம் ஸ்ரீ யது குல வேணுகோபால பஜனை கோவிலில் கண்ணன் அவதார விழாவில் ஏழாம் நாளில் யானை வாகனத்தில் மீது எழுந்தருளிய வேணுகோபால பெருமாள் குலுங்கியபடி ஏசல் சேவை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் நகரமான காஞ்சி மாநகரில் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ யதுகுல வேணுகோபால பஜனை கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ கண்ணன் அவதார நாளான கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு 12 நாட்கள் விழா எடுத்து அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கண்ணன் அவதார விழாவாக 12 நாட்கள் கொண்டாடப்பட்ட வருகிறது. அந்த வகையில், 7ஆம் நாளான இன்று ஸ்ரீ யது குல வேணுகோபால பெருமாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வேணுகோபால பெருமாள் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள், கிரீடம் அணிவித்து மலர் மாலைகளால் அலங்கரித்து யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
யானை வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால பெருமாள் பாண்டவ பெருமாள் கோவில் மாடவீதியை திருவீதி உலா வந்து ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் மூன்று முறை முன் பின்னாக சென்று ஏர்செல் சேவையானது நடைபெற்றது. பெருமாள் குலுங்கியபடி நடைபெற்ற ஏசல் சேவையைக் காண ஏராளமான மக்கள் குவிந்து ஏசலின் சேவையை கண்டு ரசித்தனர்.
-
September 04 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – இன்பம்
ரிஷபம் – இரக்கம்
மிதுனம் – உயர்வு
கடகம் – நட்பு
சிம்மம் – ஆதரவு
கன்னி – அலைச்சல்
துலாம் – நஷ்டம்
விருச்சிகம் – லாபம்
தனுசு – நற்செயல்
மகரம் – களிப்பு
கும்பம் – சுகம்
மீனம் – நலம்
சந்திராஷ்டமம் – திருவோணம் -
September 04 2024 Chandra Darisana Naal
செப்டம்பர் 04 – சந்திர தரிசன நாள்
குரோதி வருடம் – ஆவணி 19
செப்டம்பர் 04 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை கா 9.49
நட்சத்திரம் : உத்திரம் முழுவதும் 0.00
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
September 03 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – பாசம்
கடகம் – உயர்வு
சிம்மம் – விவேகம்
கன்னி – அனுகூலம்
துலாம் – தோல்வி
விருச்சிகம் – ஆதரவு
தனுசு – சிரமம்
மகரம் – அசதி
கும்பம் – மேன்மை
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – உத்திராடம் -
September 03 2024 Indrayanaal
செப்டம்பர் 03 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – ஆவணி 18
செப்டம்பர் 03 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : பிரதமை
திதி நேரம் : அமாவாசை கா 7.59
நட்சத்திரம் : மகம் அ.கா 1.50
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Maha chandi yagam
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி யாகம் நடைபெற்றது.
யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு 108 வகையிலான மூலிகைகள் சேலைகள் யாகத்தில் இடப்பட்டன.
பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில் கன்னியாகுமரி, சென்னை, பெரம்பலூர், மதுரை, கடலூர், தஞ்சாவூர், சேலம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
-
Nellaiappar koil Kodiyetram
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறக்கூடிய மூலத் திருவிழா விமர்சியான திருவிழாவாகும். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்றைய தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்ட கலசம் கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தர் மானூர் அம்பலம் நோக்கி புறப்படும் நிகழ்ச்சி வரும் 10ம் தேதியும் கரூர் சித்தருக்கு சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி பெரும் நிகழ்ச்சி வரும் 12ம் தேதியும் நடைபெறுகிறது.
-
Thirupathy unlimited laddu
திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கை லட்டு பிரசாத விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை கும்பிட்ட பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்பதே தேவஸ்தானத்தில் பாலிசி என்று கூறிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தலா ஐம்பது ரூபாய் விலையில் லட்டுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் சாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் இரண்டு லட்டு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆனால் இதுவரை தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை கவனிக்காமல் இருந்து விட்டதாகவும், கடந்த இரண்டரை மாதங்களாக தேவஸ்தான நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து நாளை முதல் ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றுடன் லட்டு கவுண்டர்களுக்கு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் டிக்கெட்டுக்கு ஒரு லட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதனுடன் கூடுதலாக தேவஸ்தானத்தின் பாலிசியை அடிப்படையாகக் கொண்டு பக்தர்கள் தலா 50 ரூபாய் விலையில் தங்களுக்கு எத்தனை லட்டுக்கள் தேவையோ அத்தனை லட்டுக்களை அன்லிமிடெட் ஆக வாங்கி கொள்ளலாம் என்று கூறினார்.
மேலும் திருப்பதி மலையில் உள்ள இடைத்தரகர்களை ஒழித்து கட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பான பலனை கொடுப்பதாக கூறிய அவர், சாமி கும்பிடாமல் திருப்பதி மலையில் இருந்து ஒரு சிலர் ஏராளமான லட்டுக்களை வாங்கி சென்று அவற்றை தங்கள் வீட்டு திருமணங்களில் உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்ததை காண முடிந்தது.
திருப்பதி தேவஸ்தான லட்டுக்களை வீட்டு விசேஷங்களில் உறவினர்களுக்கு வழங்குவதை அவர்கள் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். ஆனால் திருப்பதி லட்டு என்பது பிரசாதம். அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.
-
September 02 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – நிறைவு
மிதுனம் – பகை
கடகம் – மறதி
சிம்மம் – அச்சம்
கன்னி – நலம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – நன்மை
தனுசு – அனுகூலம்
மகரம் – நட்பு
கும்பம் – போட்டி
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்