Author: லிங்கேஷ்

  • September 11 2024 Pattabishegam

    செப்டம்பர் 11 – மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்…
    குரோதி வருடம் – ஆவணி 26
    செப்டம்பர் 11 – 2024
    புதன்
    மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  அஷ்டமி இ 7.22
    நட்சத்திரம் :  கேட்டை மா 6.07
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   பரணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • Karur Koil Festival

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரிய தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேரினை சுமந்து முக்கிய வீதிகள் வலம் வந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் பிடாரி அழகு நாச்சியம்மன் குருநாதன் கோவில் அமைந்துள்ளது.

    எட்டுப்பட்டி ஊர் மக்களுக்கும் காவல் தெய்வமான இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கண்டார்.

    இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தூக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மன் எழுந்தருளிய தூக்கு தேரினை 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கிருஷ்ணராயபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வலம் வந்தனர்.

    வழி நெடுங்கிலும் பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்தும்,  அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

  • September 10 2024 Indrayanaal

    செப்டம்பர் 10 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஆவணி 25
    செப்டம்பர் 10 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி இ 7.10
    நட்சத்திரம் :  அனுஷம் மா 5.13
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • September 10 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உற்சாகம்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  உயர்வு   
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    எதிர்ப்பு
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  ஏமாற்றம்
    தனுசு         –    வரவு
    மகரம்         –   ஜெயம்
    கும்பம்         –     உழைப்பு   
    மீனம்         –    விவேகம்
    சந்திராஷ்டமம்    –        ரேவதி, அஸ்வினி

  • Susindram koil kodiyetram

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமிக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, கலந்து கொண்டு சாமி தரிசனம் மேலும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் துவங்கியது, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

    இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.அந்த வகையூல் இன்று சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் ஆவணி திருவிழா  திருக்கொடியேற்றம் இன்று காலை நடைப்பெற்றது,

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் எம்எல்ஏ தளவாய்சுந்தரம், மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இது திருவிழாவானது, பத்து நாட்கள் நடைபெறுகிறது, தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைப்பெறுகிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • September 09 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஆக்கம்
    ரிஷபம்         – அமைதி
    மிதுனம்     – ஓய்வு
    கடகம்         –  புகழ்  
    சிம்மம்         –   பிரீதி
    கன்னி         –    ஊக்கம்
    துலாம்         –     தனம்  
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –    வெற்றி
    மகரம்         –   போட்டி
    கும்பம்         –     தெளிவு  
    மீனம்         –    லாபம்   
    சந்திராஷ்டமம்    –         உத்திரட்டாதி, ரேவதி

  • September 09 2024 Sasti Viradham

    செப்டம்பர் 09 – சஷ்டி விரதம்…
    குரோதி வருடம் – ஆவணி 24
    செப்டம்பர் 09 – 2024
    திங்கள்
    சஷ்டி விரதம்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  சஷ்டி மா 6.26
    நட்சத்திரம் :  விசாகம் ம 3.49
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் :   ரேவதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Kamatchi amman koil kumbabishegam

    திருவண்ணாமலையில் 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை வடக்குவீதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன்,பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், தீபாரதனையும் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு  முலீகை பொருட்களை கொண்டு யாகம் நடத்தி பின்னர் மஹா பூர்ணாஹிதி நடைபெற்றது.

    பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம், தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

     திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்ற மூல காரணமான ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

  • September 08 2024 Rasipalan

    செப்டம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – ஆவணி 23
    செப்டம்பர் 08 – 2024
    ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி மா 5.15
    நட்சத்திரம் :  சுவாதி ம 1.58
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   உத்திரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • September 08 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஜெயம்
    ரிஷபம்         – அலைச்சல்
    மிதுனம்     – அசதி
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   விவேகம்   
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –    கவலை
    மகரம்         –   வரவு
    கும்பம்         –     தாமதம்
    மீனம்         –    தெளிவு    
    சந்திராஷ்டமம்    –         பூரட்டாதி, உத்திரட்டாதி