Author: cmsadmin

  • ஜூன் 28 – வெள்ளி

    ஜூன் 28  – வெள்ளி
    குரோதி வருடம் – ஆனி 14
    ஜூன் 28 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி மா 6.24
    நட்சத்திரம் :  பூரட்டாதி ம 12.24
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • சுயம்பு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 94 ம் ஆண்டு சிரசு ஊர்வலம்…

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீகெங்கையம்மன் கோயில் 94 ஆம் ஆண்டு சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சிரசு திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் இத்திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து  நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் கூழ் அமுது படைத்தல்,  மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊர்வலம் ஆராதனை நடந்தது. அம்மனுக்கு ஏராளமான பெண்கள்   பொங்கலிட்டும் , நேர்த்திக்கடன் செலுத்தியும் வணங்கினார்கள்.

    மேலும் தமிழ் கலாச்சாரம் போற்றும் வகையில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் கச்சேரி விளையாட்டுப் போட்டிகள், வாண வேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் இரவு திருப்பத்தூர் மாவட்டமே போற்றும் வகையில் வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து அருள்மிகு கெங்கை அம்மன் சிரசு திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். வீடுகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

    திருவிழாவை காண தேவலாபுரம்,ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்மகிருஷ்ணம் பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கோவிந்தாபுரம்,  துத்திப்பட்டு, ஆம்பூர் நகரம், வேலூர், திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     

  • பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா…

    பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    பழனி கடைவீதி பின்புறம் கச்சேரி புதுத்தெருவில் ஆனிமாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை சக்திகரகம் எடுத்து வருதலுடன் துவங்கியது.  மாலையில் சரவணப்பொய்கையில் சக்திகரகம் எடுத்து வருதல் அம்மனுக்கு மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது.  புதன்கிழமை காலை சண்முகநதிக்கு தீர்த்தம் எடுத்து வருதலும் மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது.  

    நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏந்தியபடி ஓம் சக்தி கோஷத்துடன் ஊர்வலம் வந்தனர்.  இரவு 12 மணி அளவில் சக்திகரகம் சண்முகநதியில் விடப்பட்டது.  மறுபூஜை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும், சமையல் போட்டிகளும் நடைபெறுகிறது.  வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து கிடா வெட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.  

    அன்று அருள்மிகு கருப்பண சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம். சந்தனகாப்பு அலங்காரமும், அசைவவிருந்தும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் மற்றும் நிர்வாகி பி எஸ் கே எல் ராஜா , இளைஞர் நற்பணி மன்றம், மாதர் சங்கம் ஆகியன இணைந்து நடத்தி வருகிறது.

  • ஜூன் 27 – இன்றைய ராசிபலன்….

    ஜூன் 27 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நம்பிக்கை
    ரிஷபம்         – பாராட்டு
    மிதுனம்     – உதவி
    கடகம்         –  சிரமம்  
    சிம்மம்         –   ஊக்கம்
    கன்னி         –    தனம்    
    துலாம்         –     பரிவு   
    விருச்சிகம்     –  நிறைவு
    தனுசு         –     ஓய்வு
    மகரம்         –    பரிசு
    கும்பம்         –      நேர்மை
    மீனம்         –      பாசம்
    சந்திராஷ்டமம்    –         புனர்பூசம், பூசம்

  • ஜூன் 27 – இன்றைய நாள் எப்படி?

    ஜூன் 27 – இன்றைய நாள் எப்படி?
    குரோதி வருடம் – ஆனி 13
    ஜூன் 27 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  சஷ்டி இ 8.50
    நட்சத்திரம் :  சதயம் ம 2.00
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • கோட்டை மாரியம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை….

    தர்மபுரி நெல்லி நகர் ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது திரளான பெண்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை.

     தர்மபுரி நெல்லி நகர் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீ ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயில் 40-வது ஆண்டு திருவிழா கடந்த 18-ஆம்  தேதி கம்பம் நடுவலுடன் விழா துங்கியது அதனைத் தொடர்ந்து  108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது  இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் வேண்டியும் உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும் மாணவ மாணவிகள் கல்வி அறிவிப்பு பெறவும் திருமண தடை நீங்கவும் கடன் பிரச்சினை நீங்கவும் செல்வம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.

    பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து   பூக்களால் அர்ச்சனை செய்து தீபாரதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர் இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன விழாவிற்கான ஏற்பாடுகளை ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயில் விழா குழுவினர் செய்தனர்.

  • ஜூன் 26 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஆதாயம்
    ரிஷபம்         – நன்மை  
    மிதுனம்     – தெளிவு
    கடகம்         –  உறுதி
    சிம்மம்         –   பெருமை
    கன்னி         –    நஷ்டம்   
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     ஆசை
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      பரிவு
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –         திருவாதிரை, புனர்பூசம்

  • ஜூன் 26 – இன்றைய நல்லநேரம்

    ஜூன் 26 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஆனி 12
    ஜூன் 26 – 2024
    புதன்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    எமகண்டம் : 7.30 – 9.00
    குளிகை : 10.30 – 12.00
    ராகு : 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி அ.கா 1.25
    நட்சத்திரம் :  அவிட்டம் ம 3.30
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஜூன் 25 – சதுர்த்தி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நலம்
    ரிஷபம்         – பாராட்டு
    மிதுனம்     – ஆசை
    கடகம்         –  பரிசு
    சிம்மம்         –   செலவு
    கன்னி         –    மேன்மை  
    துலாம்         –     ஆர்வம்
    விருச்சிகம்     –  உதவி
    தனுசு         –     முயற்சி  
    மகரம்         –    உறுதி  
    கும்பம்         –      பக்தி
    மீனம்         –      தடங்கல்  
    சந்திராஷ்டமம்    –         மிருகசீருஷம், திருவாதிரை

  • ஜூன் 25 – சங்கடஹர சதுர்த்தி

    ஜூன் 25 – சங்கடஹர சதுர்த்தி
    குரோதி வருடம் – ஆனி 11
    ஜூன் 25 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    எமகண்டம் : 9.00 – 10.30
    குளிகை : 2.00 – 1.30
    ராகு : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை அ.கா 3.25
    நட்சத்திரம் :  திருவோணம் மா 4.52
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்