திருமுல்லைவாயில் அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆகஸ்டு 21 ஆம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி 20 ஆம் தேதி மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை நடக்கின்றன. அன்று மாலை வாஸ்து ஹோமம், முதல் காலயாக சாலை பூஜை போன்றவை நடக்கின்றன. 21 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பெருங்குளம் ராமகிருஷ்ண சோதிடர் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார். பெருங்குளம் சுப்பிரமணிய சோதிடர் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரவிசேகர் செய்து வருகிறார்.
Author: cmsadmin
-
பொத்தூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
திருமுல்லைவாயில் அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆகஸ்டு 21 ஆம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி 20 ஆம் தேதி மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை நடக்கின்றன. அன்று மாலை வாஸ்து ஹோமம், முதல் காலயாக சாலை பூஜை போன்றவை நடக்கின்றன. 21 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பெருங்குளம் ராமகிருஷ்ண சோதிடர் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார். பெருங்குளம் சுப்பிரமணிய சோதிடர் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரவிசேகர் செய்து வருகிறார்.
-
பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோக நரசிம்ம சுவாமி குடமுழுக்கு விழா….
திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி சன்னதிக்கு வரும் 22-ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி, ஸ்ரீ கஜேந்திர சுவாமி, ஸ்ரீதிருமழிசையாழ்வார், குளக்கரை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி சன்னிதிகளுக்கு குடமுழுக்கு செய்வதென்று முடிவு செய்யப்பட்டு, முதலமைச்சர் உத்தரவின் படி அதற்கான பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டன. ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட குடமுழுக்குப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து, 4 சன்னிதிகளுக்கான கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.25 மணிக்குள் நடக்க உள்ளன. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ம் தேதி முதல் யாகசாலைகள் அமைக்கப்படவுள்ளன. அன்றைய தினம் முதல்கால ஹோமம், திவ்யபிரபந்த சேவை, வேதபாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆகஸ்டு 19-ம் தேதியன்று விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி, பூர்ணாஹுதி, சாற்றுமுறை, விமான கலசம் ஸ்தாபனம், ஹோமம் உள்ளிட்டவையும், 20-ம் தேதியன்று ஹோமம், மூலவருக்கு சொர்ணபந்தனமும் (தங்கத்தில்), ரஜதபந்தனமும் (வெள்ளியில்) சாத்தப்படவுள்ளன. 21-ம் தேதியன்று ஹோமம், மஹாசாந்தி ஜப்யம், அதிவாச திருமஞ்சனம், மஹாசாந்தி திருமஞ்சனம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன.
இதையடுத்து, 22-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு பெருமாள், கும்பத்துடன் சன்னிதியில் எழுந்தருள உள்ளார். சரியாக காலை 9.30 மணியிலிருந்து 10.25-க்குள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளன.

திருப்பதியில் பவித்ரோற்சவம் நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நேற்று நிறைவு அடைந்தது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்களின் போது ஏற்படும் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்யவும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஊழியர்களால் ஏற்படும் தோஷங்களை களையவும் ஆண்டுக்கு ஒருமுறை 3 நாட்கள் பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.அதன்படி ஆகஸ்டு 14 ஆம் தேதி பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கி 16 ஆம் தேதி நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பவித்ரோற்சவம் நிறைவடைந்தன் அடையாளமாக ஹோமம் வளர்த்து, பூர்ண ஷூதி நடைபெற்றது. இதில் பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் மஹோத்சவ விழா
திருவல்லிக்கேணி நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ம்ருத்திகா பிருந்தவன சந்நிதானத்தில் 345-ஆவது ஆராதனை மஹோத்ஸவம் விழா ஆகஸ்ட் 17 தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
17 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அன்னதானத்துக்கு வேண்டிய தானிய பூஜையானது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-இல் காலையில் பஞ்சாமிர்த அபிஷேகம், நாணயங்களைக் கொண்டு கனகாபிஷேகம், நண்பகல் அன்னதானம் ஆகியன நடைபெறுகின்றன.
தொடர்ந்து சனிக்கிழமை காலை அபிஷேக அலங்காரம், பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் அதைத் தொடர்ந்து அன்னதானம், மாலை புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை தங்கத்தேரில் பிரஹலாதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் அதைத்தொடர்ந்து 11 மணியளவில் வசந்த பூஜை, அன்னதானம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு….
திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி சாம்ப சிவ ராவ் தெரிவித்துள்ளார்.
திருமலைக்கு வரும் பக்தர் களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆன்லைன் சேவை டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்படுவதாகவும், இதன் மூலம் வெளி மாநில பக்தர்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக விரைவில் திருமலையில் காம்ப்ளக்ஸ் கட்டப்படும் எனவும் இந்த காம்பளக்ஸில் அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் சுவாமியை தரிசிக்கலாம் என்றும் கூறினார்.
அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சாம்ப சிவ ராவ் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதியில் ஆர்ஜித சேவை தற்காலிக ரத்து
பவித்ரோற்சவத்தை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமும் நடக்கும் பூஜைகளில் அல்லது யாராவது தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காகவும், தோஷங்களுக்காகவும் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது.இதையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவமூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை வைர, வைடூரியம் அணிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், பூவராக சுவாமி கோயிலில் பவித்ர மாலை சமர்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் …..
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி,
ஆகஸ்டு 17 ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுதினம் 18 ஆம் தேதி மாலை 3.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.