Author: cmsadmin

  • மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி பூரம் விழா

    மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 26 ஆம் தேதி ஐப்பசி பூரம் விழா நடைபெறுகிறது. தீபாவளி தினத்தன்று அம்மனுக்கு தங்கக்கவசம், வைரக்கிரீடம் சாத்தப்படுகிறது.

    அக்டோபர் 26 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு மூலஸ்தான அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடைபெறுகிறது. உச்சிக்காலத்தில் ஆலவட்ட உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேரும்.

    அக்டோபர் 29 ஆம் தேதி தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கக் கவசமும், வைரக்கிரீடமும் சாத்தப்படும். சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடியாகிறது.
    அதேபோல அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை திருக்கோயிலில் கோலாட்ட உற்சவம் நடைபெறும். விழா தொடக்க நாள் முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி, ஸ்ரீமீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்துவார்.

    நவம்பர் 4 ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மன் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார். நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் அருள்பாலிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஊர் நன்மைக்காக ஒரு திருவிழா…

    நாமக்கல் மாவட்டம், ஈச்சம்பட்டி என்ற கிராமத்தில் ஊர் நன்மைக்காக நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வீரகாம பெருமாள் கோவில் திருவிழா நடத்தப்பட்டது.
    இந்த கோவிலில், 14 வருடங்களாக திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று, பாரம்பரிய முறையில் வீரகாமபெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. மனிதர்கள் மண்டியிட்டு செல்லக்கூடிய 4 அடி உயரம் கொண்ட இடைவெளியில், மாடு பிடித்தவர் மண்டியிட்டு குனிந்து செல்ல, அவரை பின்பற்றி கோவில் காளையும், சிறிய இடைவெளியில் நுழைந்து வந்ததை கண்ட கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்தனர்.
    இந்நிகழ்வை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஆண்கள் பாரம்பரிய முறையில் நடனமாடியது பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.

  • திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்குகிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31ஆம் தேதி தொடங்குகிறது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ந் தேதி தொடங்குகிறது.
    அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
    காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    தொடர்ந்து ஐந்து நாட்களும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    2-ம் திருநாளில் இருந்து அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    6-ம் திருநாள் வரை மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.

    6-ம் திருநாள் அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது.

    மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

  • அய்யா வைகுண்டர் தேர்திருவிழா

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி 10 ம் நாள் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்ம பதி ஆலயத்தில் கடந்த வாரம் பிரமோச்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் ஒரு நிகழ்வாக அன்னவாகனம், கருடவாகனம், மயில்வாகனம், ஆஞ்சநேயவாகனம், சர்ப்பவாகனம், மலர்முகசிம்மவாகனம், குதிரைவாகனம், காமதேனுவாகனம், இந்திரவாகனம் என அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா தர்மபதியை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறது. விழாவின் 10வது நாளன இன்று அய்யா வைகுண்ட பதியில் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மணலி புதுநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

  • காளஹஸ்தீஸ்வரர் கோபுரம் அருகில் செல்ல தடை

    காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் செப்பனிடும் பணிகள் காரணமாக, பிக்ஷல கோபுரம் அருகில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    காளஹஸ்தியிலுள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் செப்பனிடும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, ரூ. 31 லட்சம் செலவில் கோயிலின் வடக்கு நுழைவாயிலான பிக்ஷôல கோபுரத்தில் உடைந்துள்ள சிலைகள் அகற்றபட்டு, சுதை சிற்பங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
    கோபுரத்தின் மேல் வளர்ந்துள்ள செடி, கொடிகள் களையப்பட்டு, சிமெண்ட் பூச்சு மூலம் விரிசலை அடைக்கும் பணியும் நடந்து வருகிறது.
    இப்பணிகள் முடிவடையும் வரை கோபுரம் அருகில் செல்ல பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    இதன்படி, கோயிலையொட்டி செல்லும் கன ரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • கோயில்களில் தேங்காய் உடைக்கும் வழக்கம் வந்தது ஏன்?

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.
    அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.