Author: cmsadmin

  • பழமுதிர்ச்சோலையில் நவம்பர் 5-ம் தேதி சூரசம்ஹாரம்….

    பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ல் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா நவம்பர் 5 ஆம் தே நடைபெறுகிறது.
    மதுரை மாவட்டம் அழகர் மலையில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திங்கள்கிழமையன்று காலையில் 9.15 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது.
    நவம்பர் 1 ஆம் தேதியன்று, மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி தருவதும், தங்க ரத உலாவும் நடைபெறும். தொடர்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது.

  • அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை…

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    இப்பணியில் சுமார் 150 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 700மும், 130 கிராம் தங்கமும், 599 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
    அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.

  • தீபாவளிக்கு மட்டும் திறக்கப்படும் அதிய கோயில்

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்….

    ஹாசனாம்பா கோயிலில் பல வீநோத நம்பிக்கைகள் உள்ளது….

    மாமியார்-மருமகள் கல்….

    ஒரு குட்டி கதை…. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

    திருடர்கள் கோயில்…

    ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

    அணையா தீபம் …

    ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

    கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…
    கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

    வாடா மலர்கள்….
    ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.
    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 20 ஆம் தேதி காலை திறக்கப்பட்டது.
    அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை 13 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார்.

  • சபரி மலை தரிசனத்திற்கு இலவச முன்பதிவு செய்ய….

    மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். அப்போது பக்தர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் நெரிசல் மூலம் விபத்துகளும் ஏற்படுவது உண்டு. இந்த சமயங்களில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் வெகு தொலைவிலிருந்து சபரிமலை வரும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்ப்பதற்காக கேரள காவல் துறையின் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தரிசனத்திற்கு இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் மட்டும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கூப்பனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். தரிசனத்திற்கு செல்லும்போது அந்த கூப்பனை பம்பையிலுள்ள போலீஸ் தகவல் மையத்தில் காண்பித்து டோக்கன் பெறவேண்டும். இந்த டோக்கனை காண்பித்து சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று எளிதில் தரிசனம் செய்யலாம்.

  • திருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி கொடியேற்றம்….

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக்டோபர் 31 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.
    அக்டோபர் 31 ஆம் தேதி அன்று காலை சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, விரதம் மேற்கெள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். காப்பு கட்டிக் கொள்ளும் பக்தர்கள் ஆறு நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி பால், பழம், துளசி, மிளகு உள்ளிட்ட பல்வேறு விரதங்கள் மேற்கொள்வர். தேன், சர்க்கரை கலந்த தினை மாவு கோயில் சார்பில் வழங்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 4ல் வேல் வாங்குதல், நவம்பர் 5ல் சூரசம்ஹாரமும், நவம்பர் 6 ஆம் தேதி காலையில் தேரோட்டம், மதியம் பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.
    சஷ்டி விழா நடக்கும் நாட்களின் தினம் காலை 11:00 மணி, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர்க்கு சண்முகார்ச்சனை நடக்கும்.

  • திருமலையில் வாடகை அறை பெற முன்பணம் வசூலிப்பது ரத்து….

    திருப்பதி ஏழுமலையான கோயிலில் தேவஸ்தான அறைகளில் தங்கும் பக்தர்கள் இனி முன்பணம் செலுத்த தேவையில்லை.
    திருப்பதி செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான 6,500 அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ரூ.50-ல் இருந்து ரூ.6,000 வரை வாடகைக்கு அறைகள் உள்ளன.
    அதில் குறைந்த வாடகையில் உள்ள அறைகளுக்கு ரூ.500-ம், மற்ற அறைகளுக்கு வாடகை தொகைக்கு ஏற்றார் போலவும் முன்பணம் பெறப்பட்டு வந்தது.
    இந்நிலையில் நேரம் விரயம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இனிமேல் வாடகை அறைகளுக்கு முன்பணம் செலுத்த தேவையில்லை என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    இதன் மூலம் திருமலையில் அறைகள் பெரும் பக்தர்கள் 24 மணி நேரம் மட்டுமே தங்க முடியும். தரிசனம் கிடைக்காமலோ அல்லது பேருந்து மற்றும் ரயில் கிடைக்காமல் போனாலோ தகுந்த ஆதாரங்களை காட்டி அறையில் கூடுதலாக ஒரு நாள் தங்கலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம்…..

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    ஊஞ்சல் உற்சவம் இரவு 7.15க்கு தொடங்கி 8க்கு நிறைவடைகிறது. முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் அக்டோபர் 24ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6க்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின், இரவு 7க்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருள்கிறார். நிறைவு நாளான அக்டோபர் 26ம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். மற்ற நாட்களை விட அன்றைய தினம் நம்பெருமாள் ஊஞ்சலாட்டம் அதிக நேரம் நடைபெறும். ரங்கம் சார்பு கோயிலான திருவெள்ளறை பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவமும் நேற்று தொடங்கியது.

  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா…

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. நவம்பர் 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு திருக்கோயிலில் உள்ள அருள்மிகு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சண்முகார்ச்சனை நடைபெறும்.

    நவம்பர் 14 ஆம் தேதி உச்சிக்காலத்தில் அருள்மிகு சுந்தரேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். உபயதாரர் நிகழ்ச்சி ரத்து: அக்டோபர் 29 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை திருக்கோயிலில் உபயதாரர்களின் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை நடத்தப்படாது என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.