Author: அட்மின்

  • December is a lucky month for these zodiac signs! Everything will be good!

    கன்னி:

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன்தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன்ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராஹூகளத்திர ஸ்தானத்தில் சந்திரன்லாப ஸ்தானத்தில் குரு () – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-12-2025 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-12-2025 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-12-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தனது உழைப்பால் வாழ்வில வெற்றிக் கனியை ருசிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

    தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.

    குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் மேம்படும்.

    பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.
    கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள்.
    மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

    உத்திரம்:

    இந்த மாதம் மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும்.

    ஹஸ்தம்:

    இந்த மாதம் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம்.

    சித்திரை:

    இந்த மாதம் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும்.

    பரிகாரம்:

    துளிஸியை ஐயப்பனுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;
    சந்திராஷ்டம தினங்கள்: 2, 3. 29, 30
    அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

     

  • December is a lucky month for these zodiac signs! Everything will be good!

    சிம்மம்:

    கிரகநிலை:

    ராசியில் கேதுதைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன்களத்திர ஸ்தானத்தில் சனி, ராஹூஅஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்அயன சயன போக ஸ்தானத்தில் குரு () என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-12-2025 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-12-2025 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-12-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தனது தோரணையாலும் சாமர்த்தியத்தினாலும் வெற்றி பெறும் சிம்ம ராசியினரே இந்த மாதம் மிக நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறும். காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். முயற்சிகளில் உடனடியாக பலன் காண முடியும். எந்த ஒரு வேலைக்கும் சிறிது முயற்சியினால் நன்மைகள் கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் நிறைவான லாபம் வரக் காண்பீர்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். ஆனாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.

    பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

    அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

    கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.

    மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

    மகம்:

    இந்த மாதம் நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள் இனி மெல்ல நிறைவேற்றுவீர்கள்.

    பூரம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும்.

    உத்திரம்:

    இந்த மாதம் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

    பரிகாரம்:

    தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

     

  • Gemini: December is a lucky month for these zodiac signs! Everything will be good!

    மிதுனம்:

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு () – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேதுபஞ்சம ஸ்தானத்தில் புதன்ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன்பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராஹூதொழில் ஸ்தானத்தில் சந்திரன்என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-12-2025 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    22-12-2025 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-12-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிக்கும் மிதுன ராசியினரே இந்த மாதம் அதிக முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தைரியத்துடன் பீடு நடை போட்டு வாழ்வில் முன்னேறுவீர்கள்.

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.

    குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும்.

    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.

    அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம்:

     

     தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
     

  • What is the secret of the vel? Why is the vel the symbol of Lord Murugan? Its philosophy & history

    தமிழகத்தில் முருகன் வழிபாட்டின் முக்கிய அடையாளமாக வேல் கருதப்படுகிறது. எந்த முருகன் கோவிலிலும் வேல் இன்றி இருப்பது அரிது. இது வேலின் ஆன்மிக, தத்துவ மற்றும் புராணச் சிறப்பை வெளிப்படுத்துகிறது. சுந்தரவேல், சக்திவேல், கனகவேல், வடிவேல், கதிர்வேல், வேலாயுதம், வேலச்சாமி, வேலன் போன்ற பெயர்கள் தமிழகத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு சூட்டப்படுவது கூட வேலின் பெருமையை உணர்த்துகிறது.

    கந்தபுராணம் முருகனின் கையில் இருக்கும் வேலின் மகத்துவத்தை விரிவாக கூறுகிறது. வேல் என்பது வெறும் ஆயுதம் அல்ல; அது வேட்டையாடல், போர்க்குணம், தலைவர் தன்மை, மறைப்பொருள், ஞானம், அசுர சக்திகளை அழிக்கும் சக்தி என்பவற்றை சுட்டிக்காட்டும் ஒரு குறியீடாக விளங்குகிறது.

    அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் வேல்வகுப்பு, வேல்விருத்தம் போன்ற பாடல்கள் வேலின் பெருமையை உயர்த்திக் கூறுகின்றன. வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று போருத வீரன் போன்ற பல பெயர்களால் முருகனைப் போற்றியமை இலக்கியத்திலும் தெளிவாகத் தெரிகிறது. அருணகிரிநாதர் வேலின் தத்துவத்தை தீ, சூரியன், சந்திரன் போன்ற ஒளியூட்டும் சக்திகளுடன் ஒப்பிடுகிறார். அதனால் வேல் இருளை அகற்றி ஞானத்தை தரும் தெய்வீகச் சின்னமாக கருதப்படுகிறது.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சி, தமிழகத்தில் வேல் முருகனைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டதை விளக்குகிறது. இன்றும் வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர், கோவை மாவட்டம் பூரண்டான் பாளையம், மதுரை பசுமலை அருகிலுள்ள குமரகம் போன்ற தலங்களில், கோயில் இல்லாமல் ஒரு வேல் மட்டுமே நட்டு வழிபடும் வழக்கம் தொடர்கிறது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற புகழ்பெற்ற முருகன் தலங்களில், கோபுரங்களில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை தூரத்திலிருந்தே கோவிலின் இருப்பிடத்தைக் காட்டி, பக்தர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

  • 41-day fasting instructions for eighteen-step darshan

    41 நாள் விரதம்

    கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது மரபாகும். அந்த நாளில் மாலை அணிய முடியாவிட்டால், அடுத்த சனிக்கிழமை அல்லது உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை அணியலாம். அர்ச்சகர் அல்லது குருநாதர் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து, கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது மூலம் விரதம் தொடங்கப்படுகிறது.

    சபரிமலையின் பதினெட்டு படிகள் வழியாக ஏறி ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு 41 நாள் விரதம் அவசியமானதாகும். விரதக் காலத்தில் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மையுடன் இருப்பதே திரிகரண சுத்தி. அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, பக்தியுடன் சரண கோஷம் சொல்ல வேண்டும்.

    தூங்கும்போது பாய் மட்டும் பயன்படுத்தி, தலையணையைத் தவிர்க்க வேண்டும். பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதிகளில் பனிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய யாத்திரைக்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய ஒழுக்கங்கள் விதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

  • Who is Guruswami? How to perform Kanni Puja?

    குருசுவாமியின் தகுதி

    சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்று வந்தவர்களே குருசுவாமி என அழைக்கப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றால் குருசுவாமி ஆக முடியாது.

    ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை அல்லது மகர விளக்குக் காலத்தில் இருமுடி கட்டி, 41 முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலைக்கு ஏறியவர்களே இந்த உயர்ந்த பதவியைப் பெறுவர்.

    குருசுவாமிகள், பிற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவும், வழிகாட்டவும் தகுதியுடையவர்கள். மேலும், சபரிமலை சீசன் அல்லாத நாட்களிலும், அவர்கள் ஐயப்பனுக்கு நித்யபூஜை செய்து வருவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

     

    கன்னி பூஜை

    சபரிமலைக்கு முதல் முறையாக செல்பவர்கள் நடத்தும் முக்கியமான சடங்குதான் கன்னி பூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்றும் அழைக்கின்றனர்.கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி மாதம் வரை, வீட்டில் ஒரு சிறப்பு நாளைத் தேர்ந்தெடுத்து இந்த பூஜை நடைபெறும். இதற்காக பந்தல் அமைத்து, அதன் நடுவில் மண்டபம் அமைத்து, அதில் ஐயப்பன் படத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    அவரைச் சுற்றிலும்

    • கணபதி

    • மாளிகைப்புறத்தம்மன்

    • கருப்பசுவாமி

    • கடுத்தசுவாமி

    • ஆழி

    ஆகிய தெய்வங்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டு விளக்கேற்ற வேண்டும்.

    எல்லா தெய்வங்களுக்கும் வல், பொரி, பாக்கு, சித்ரான்னம் போன்ற நைவேத்யங்கள் படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

    இந்நாளில் அன்னதானம் செய்வதும் மிக முக்கியமானது.

  • From Hariharaputra to Sabarimala: History and Worship

    ஹரிஹர புத்திரன்

    ஹரியான மகாவிஷ்ணுவும், ஹரனான சிவபெருமானும் இணைந்து அருளிய தெய்வக் குழந்தையாக ஹரிஹர புத்திரன் அவதரித்தார். மனித அவதாரத்தில் பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார்.

    புலிப்பாலை எடுத்து வருவதற்காகக் காட்டுக்குச் சென்ற மணிகண்டன், அங்கு மஹிஷியை வதம் செய்து தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றினார். பின்னர் சபரிமலையில் தங்கியிருந்து பக்தர்களுக்காக கோயில் அமைந்தது. இது ஐயப்பன் பற்றிய பரிச்சயமான வரலாறு.

    ஆனால் பூதநாதோபாக்கியானம் என்னும் நூலில் இந்த வரலாறு சற்று மாறுபட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஐயப்பன் பாண்டிய மன்னரின் சேவகனாக இருந்தார் என்றும், மன்னரின் ஆணைப்படி புலிப்பாலை கொண்டு வரக் காட்டுக்கு சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கவனிக்க…

    மாலையணிந்த பின் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிய வேண்டும்.

    செருப்பு அணியக் கூடாது.

    கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தக் கூடாது.

    மது, மாமிசம், தாம்பத்யம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    பொய் உரைக்கக் கூடாது.

    உறவினரின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அங்கு செல்வதும் கூடாது. இதை மீறினால் மாலையை அகற்றி மலைப் பயணத்தையும் நிறுத்த வேண்டும்.

    சவ ஊர்வலத்தைப் பார்த்தால், வீட்டில் கோமியம் தெளித்து நீராட்டு எடுத்த பின் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.

  • The lamp to be lit in the puja room during the month of Karthigai

    கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான்  மண் அகல் விளக்குகளை ஏற்றி, வீட்டில் இருக்கும் இருளை நீக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்கு வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பு வாய்ந்த மாதம். இந்த கார்த்திகை மாதம் 30 நாளும், ஒரு நாள் கூட வீட்டில் விளக்கு ஏற்றாமல் பெண்கள் இருக்கவே கூடாது. மாதவிடாய் நாட்கள் வந்த போதிலும், வீட்டில் அடுத்தவர்களை விட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறை தவிர்த்து மற்ற இடங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் தாராளமாக விளக்கு ஏற்றலாம். கார்த்திகை மாதம் விளக்கு ஏற்றாமல் வீட்டை இருளில் மூழ்கடிக்க கூடாது. முதலில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

     

    கார்த்திகை மாதம் தீப வழிபாடு சரி இப்போது கார்த்திகை மாதம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம். கார்த்திகை மாதம் முழுவதும் பூஜையறையில் ஏற்ற வேண்டிய விளக்கு குத்துவிளக்கு. குத்துவிளக்கில் 5 திரிகளும் ஏற்றப்பட வேண்டும். உங்கள் பூஜை அறை பிரகாசமாக இருக்கும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வைத்து, குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் மனதார நினைத்து வேண்டுதல் வைக்கும் போது, நிச்சயம் உங்கள் வாழ்வில் தீராத இருக்கும் கஷ்டம் தீரும். கார்த்திகை மாதம் 30 நாளும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர உங்களுடைய வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, இப்படி எத்தனை அறைகள் இருக்கிறதோ அந்த அறையில் எல்லாம் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை ஆறு மணிக்கு ஒரு அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

     

    இது தவிர கட்டாயம் நிலை வாசல் படியில் இரண்டு விளக்கு, கார்த்திகை மாதம் முழுவதும் மாலை 6மணிக்கு ஏற்றப்பட வேண்டும். இந்த விளக்கு மாலை ஒரு மணி நேரம் எரிந்தால் போதும். மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை அந்த எண்ணெய் தீரும் வரைக்கும் எரியட்டும். அப்படியே விட்டுவிடுங்கள். கார்த்திகை மாதம் முழுவதும் மேல் சொன்ன இந்த எளிமையான தீப வழிபாட்டை எவர் ஒருவர் செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் எல்லாம் விலகி உங்கள் வாழ்க்கை பிரகாசமாவதற்கு. தேவையான அத்தனை நன்மைகளையும் அந்த தெய்வம் நடத்திக் கொடுக்கும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் நம்பிக்கை.

     

  • Benefits and miraculous effects of Karthigai Deepam!

    கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவமிருந்த அம்பிகை, மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக ஒரு சிவலிங்கத்தை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்குவதற்காக கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றி விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் தவறாமல் கடைப்பிடித்த நாரத முனிவர், அதன் பலனாக சப்தரிஷிகளையும் மேம்பட்ட நிலையில் இருப்பதற்கு அருளைப் பெற்றார்.

    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து, மூன்று முறஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே!
    என்ற மந்திரத்தைச் சொல்வது மிகுந்த விசேஷபலனை தரும்.

    திருக்கார்த்திகை நாளில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

    கார்த்திகை திருநாளில், நெல் பொரியுடன் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை தயாரித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.
    வெள்ளை நிறப் பொரி திருநீறு பூசிய சிவனை குறிக்கிறது; தேங்காய் துருவல் கொடைத் தன்மையின் அடையாளமான மாவலியை குறிக்கிறது; வெல்லம் பக்தர்களின் மனப்பக்தியைச் சுட்டிக்காட்டுகிறது.

    ஆத்மார்த்தமான பக்தியால் மகிழும் சிவன், நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால், இந்நாளில் பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

  • The Hidden Navapashanam Secret of Bogar Siddhar – Poombari Child Murugan

    நவபாஷாணத்தின் மறைக்கப்பட்ட மர்மம்

    உலகில் நவபாஷாண சிலைகளை முதலில் உருவாக்கியவர் போகர் சித்தர். பலர் பழனி தண்டாயுதபாணியை மட்டுமே போகரின் படைப்பு என நினைக்கின்றனர். ஆனால் அதே போகரே கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பரையும் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது பெரும்பாலும் அறியப்படாத உண்மை.

    பூம்பாறை – முருகன் அழைத்தால்தான் செல்ல முடியும்

    கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை கிராமம். “முருகன் நினைத்தால்தான் இங்கு வர முடியும்” என்பது அப்பகுதி மக்களின் உறுதியான நம்பிக்கை. பாண்டவர்கள் வனவாச காலத்தில் இறுதியாகத் தங்கிய பகுதி இதே பழனி-கொடைக்கானல் மலைத்தொடர்தான். அங்குள்ள யானைமுட்டி குகையில் போகர் ஞான சக்தியும் மூலிகை ரசாயனமும் கொண்டு நவபாஷாண சிலைகளை உருவாக்கினார்.

    முதலில் தண்டாயுதபாணி வடிவில் பழனியில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் பஞ்சபூத சக்திகளை ஒருங்கிணைத்து, பூம்பாறை திருமண மண்டபத்தில் குழந்தை வடிவ முருகனைப் பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்தக் குழந்தை வேலப்பர் அபரிமிதமான அருள் புரிகிறார்.

    அருணகிரிநாதரின் தெய்வீக அனுபவம்

    ஒரு முறை அருணகிரிநாதர் பூம்பாறை வந்து தரிசிக்க வேண்டி இரவில் கோவில் மண்டபத்தில் தங்கினார். அப்போது ஒரு ராட்சசி அவரைக் கொல்ல வந்தது. உடனே முருகன் குழந்தை வடிவம் எடுத்து அருணகிரிநாதரின் மார்பில் ஏறி விளையாடினார். இதைக் கண்ட ராட்சசி, “தாயுடன் குழந்தை தூங்குகிறது” என எண்ணி விலகிச் சென்றது. அந்த அற்புத அனுபவத்தால் பேரருள் பெற்ற அருணகிரிநாதர் இத்தல முருகனை “குழந்தை வேலர்” எனப் பாடினார். அந்தப் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. இங்கு அருணகிரிநாதருக்கும் தனிச் சிலை உள்ளது.

    பழனி தண்டாயுதபாணியும் பூம்பாறை குழந்தை வேலப்பரும் உலகில் அரிய நவபாஷாண தெய்வங்கள். இவர்களைத் தரிசித்தால் பாவ வினைகள் தீர்ந்து, வாழ்வில் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    வேலும் மயிலும் துணை!