அழுக்காறாமை – நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் (தினம் ஒரு திருக்குறள்)

குறள் : 
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 
தழுக்கா றிலாத இயல்பு 
மு.வ விளக்க உரை: 
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
கலைஞர் விளக்க உரை: 
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்