Sagittarius – Horoscope for July

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், குரு – அஷ்டம ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ், கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:

02.07.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

03.07.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

17.07.2025  அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.07.2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.07.2025  அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

29.07.2025  அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

தனகாரகன் குருவை நாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள். 

குடும்பத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் வரும்.

தொழில், வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். 

உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். 

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.

மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். 

பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 17, 18, ஜூலை 14, 15

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *