Devotees hope that the “Paatala Ponni” who is seen performing auspicious rituals in Chennai will fulfill their wishes!

சென்னையில் பல்வேறு அம்மன் கோவில்கள் உள்ளன அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது. புரசைவாக்கம் அருள்மிகு ஸ்ரீ பாதாள பொன்னியம்மன் திருக்கோவிலாகும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இங்கு அக்காலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கிணறு வெட்டுவதற்காக  பூமியில் மண் தோண்டிய போது  பத்தடியில் நீர் சுரக்கும் இவ்விடத்தில் 40 அடிக்கு மேல் தோண்டியும்  தண்ணீர் தென்படவில்லை,  இருந்த போதும் முயற்சியை கைவிடாத விவசாயிகள் தொடர்ந்து மண் வெட்டிய போது. கடப்பாரை, பாறை ஒன்றின் மீது உரசிய சப்தம்" கேட்டது.

தொடர்ந்து மேலும் தோண்டிய போது அக்கினி தோன்றி, நிலத்தடி நீர் பீறிட்டு வெளியேறியது இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நற்புறமும் கடப்பாரையை வைத்து மண்ணில் புதைந்து கிடந்த பாறையை மேலே தோண்டி எடுத்தபோது. அது வெறும் பாறை அல்ல அம்மன் விக்ரகம் என தெரிந்தது, மேலும் அதன் கீழ் மற்றொரு ஐம்பொன் அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் மீது சுவாமி வந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்ததாகவும் காலப்போக்கில் இயற்கையின் சீற்றத்தால் அக்கோவிலானது மண்ணில் புதைந்து விட்டது,  தான் பூமியில் பாதாளத்தில் வாசம் செய்து வந்ததாகவும், சக்தியின் வடிவமாக பொன்னி என்ற பெயரில் தற்போது தன்னை வெளிப்படுத்தி உள்ளதாகவும், எனவே இந்த இடத்திலேயே கோவில் எழுப்பி தன்னை வழிபட்டால் வேண்டிய வரங்களை அளித்து மக்களை காப்பதாகவும் அருள்வாக்கு சொன்னதை ஏற்று'மக்கள் கிணறு தோண்டிய பாதாளத்திற்கு மேல் தென்னங்கீற்றால் கூரை அமைத்து, அம்மனை வழிபட்டு வந்தனர்.

 அதன் காரணமாகவே இங்குள்ள அம்பிகை பாதாள பொன்னியம்மன் என அழைக்கப்படுகிறாள்.  அதன்படி கிணறு தோண்டிய விவசாயிகளின் வம்சாவழியினர் தற்போதும்," ஆடி திருவிழாவின் போது  இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் வழங்குகின்றனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறி பக்தி பெருக பெருக அதன் வெளிப்பாடாக கோவில் விரிவடைந்து. விநாயகர் பெருமான், முருகன், நவகிரக மூர்த்திகள்,  தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவன், துர்க்கை அம்மன், அண்ணன்மார்களும் காட்சியளிக்கின்றனர. பிரம்மாண்டமாக  நூற்றுக்கால் மகா மண்டபம் அமைந்துள்ளது. அருள்மிகு அன்னை ஸ்ரீ பொன்னியம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அட்சயப்  பாத்திரமும் ஏந்தி  சாந்த வடிவில்' அள்ள" அள்ள" குறையாத  அட்சய பாத்திரம் போன்று தன்னை வேண்ட வேண்ட குறையாத அருளினை அள்ளி வழங்கும்  சொரூபிணியாக காட்சியளிக்கிறாள் ஆதி பராசக்தி. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன, ஏழு பௌர்ணமி, அல்லது ஏழு அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி பாதாள பொன்னியம்மனை வழிபட்டால் உள்ளத்தில் புதைந்துள்ள வேதனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *