“Love has a “deep place” that can hold it” “May the curse of the frog be removed” by our Lord”

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேர் அன்பில்"
நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப் பார் கருத்தனாவான்." 
என்று திருமழிசை ஆழ்வாரால்"  மங்களாசாசனம் பெற்ற
அன்பில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். 

விஷ்ணு புராணமும் ஐந்தாவது திவ்ய தேசத்தின் பெருமையும் அறிவோம் வாருங்கள்.

சுதபா மாமுனிவர் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவ வலிமை பெற்றவர். மகாவிஷ்ணு மீது அதீத பக்தி கொண்ட இவர், ஒருமுறை பாற்கடலில் நீருக்கடியில் இறைவனை நோக்கி  தவம் புரிந்து கொண்டிருந்தார்.  அப்போது அவரைப் பார்க்க துர்வாசர் வந்தார். நீருக்குள் இருந்தமையால்,  சுதபா முனிவர், துர்வாசர் தன்னை தேடி வந்ததை அறியவில்லை.  இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக கருதிய துருவாசர்  கோபத்தில் அவரை நீருக்கடியில் வாழும் தவளையாக ஆகும்படி  சபித்துவிடுகிறார். அப்போது துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் சுதபா முனிவர். முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாகவே"  இச்சாபம் கிடைத்தது எனவும்,  தகுந்த நேரத்தில் மகாவிஷ்ணுவின்  தரிசனம் கிடைக்க பெற்று சாப விமோசனம் ஏற்படும் என சுதபா  முனிவரிடம் துர்வாசர் கூறினார்.

அதன்படி சுதபா முனிவர், மேலன் பில் உள்ள மண்டுக தீர்த்தம் (தவளை திருத்தத்தில்) புனித நீராடி" மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தின் வலிமையை கண்டு மனம் உருகிய திருமால் அன்பின் மிகுதியால் அவருக்கு சுந்தரராஜராக காட்சியளித்து அருளினார். இதனால் சுதபா முனிவர் சாப விமோசனம் பெற்றார்.

என்பதும் மேலும் மற்றொரு திருமால் பெருமையாக'  இங்கு  ஒரு முறை பிரம்ம தேவனுக்கு உலகில் தான் மட்டுமே" மிக உயர்ந்தவன்.தன்னால்தான் அழகுடன் உயிரினங்கள் பிறக்கின்றன என்றஎண்ணம் மேலிட்டது. மேலும்  தன்னை யாரும் வணங்குவதில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. பிரம்மதேவனின்' இந்த மன  ஓட்டத்தை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மனை எச்சரித்தார். அதன் பின்னும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் செயல்பட்ட பிரம்மனுக்கு பாடம் புகட்ட  எண்ணி'   பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடன்னாக  பிறவி எடுக்குமாறு சபித்துவிட்டார்.  அப்போது மகாவிஷ்ணுவும் பேரழகு மானிடனாக பிரம்மன் முன் தோன்றினார். இதனால் வியந்து போன பிரம்மன் நம் படைப்பில் இது போன்ற ஒரு மானிடனை இதுவரை படைக்கவில்லையே"என நினைத்தவாறு"அந்தப் பேரழகனிடம் கேட்டபோது, பிரம்மனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக்கூடியது.

இவை இரண்டையும் கொண்டிருக்கும் எவராலும் மேன்மையான வாழ்க்கையை வாழ முடியாது. என்று அறிவுரை செய்தார். இறைவனின் இந்த அறிவுரையை ஏற்று பிரம்ம தேவனும் தன் தவறை உணர்ந்து வழிபட்டான். அப்போது பள்ளி கொண்ட திருக்கோளத்தில் எம் பெருமான்" அன்பின் வடிவமாக எழுந்து அருளினார். 
சுதபா மாமுனிவர், பிரம்மதேவன் ஆகியோரிடம் மிகுந்த அன்பு கொண்டு' திருமால் எழுந்தருளிய இடம்  என்பதால் ‘அன்பில்’என்ற பெயருடன் இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது. 

கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்கு முக பிரம்மா உடன் அன்பின் வடிவமாக கருணை புரியும் முகத்தோடு அருள் பாவிக்கிறார் அருள்மிகு ஸ்ரீ  சுந்தர்ராஜ பெருமாள். ஆண்டாள் தெற்கு அருள் புரிகிறாள்.மூலவர், அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், உற்சவர், அருள்மிகு ஸ்ரீ வடிவழகிய நம்பி, தாயார், அருள்மிகு ஸ்ரீ அழகியவல்லி, தலவிருட்சம், தாழம்பூ, தீர்த்தம், மண்டுக தீர்த்தம் (தவளை) 108 திவ்விய தேச தலங்களில் 5 ஆம் திவ்ய தேசமான அன்பில்" திருச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இலால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில்  மேலன்பில் என்ற இடத்தில் உள்ளது. திருமழிசை ஆழ்வாரால்" பாடப்பட்ட பெருமைக்குரிய இடமாகும்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *