Lord Shiva gave a boon to Nandi.

நந்தியை வாகனம் ஆக்கி வாகனத்தை  மலையாக்கி அதன் மீது அமர்ந்து சிவபெருமான் அருள் பாவிக்கும் புண்ணிய பூமி" 
ஆந்திர மாநிலம்  ஸ்ரீ சைலம். புராண காலத்தில் சிலாதர் என்ற மகரிஷி வாழ்ந்த இடமாகும்.  பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி இவர் தவம் இருந்தமையால், இறைவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இச்செய்தி அறிந்து குழந்தைகளை ஆசிர்வதிப்பதற்காக  பார்க்க சனகாதி மாமுனிவர்கள்  வந்தனர்.

அவர்கள், நந்திதேவர் சில காலம் மட்டும் தான் பூமியில் வாழ்வார் என சிலாதர் மகரிஷியிடம் கூறினர். இதைக் கேட்டு, வருந்திய தந்தையிடம் நந்தி,”தந்தையே" வருந்தாதீர். நான் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்து. சாகா வரம் பெறுவேன்” என்றார். அதன்படி அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், நந்தியை தன் வாகனமாக இருக்குமாறு வரம் அளித்து. நந்தியின் அனுமதியின்றி தன்னை பார்க்க வர முடியாது என்று கட்டளையிட்டார். மேலும்  அவனது தம்பியாகிய பர்வதனும் தவம் புரிந்தான். அவன் தவம் இருந்த பர்வதன்கடும் தவம் செய்து ஈசனின் திரு  பாதம் எப்போதும் தன் மீது பட வேண்டும் என்பதற்காக வரம் பெற்றான். அதன் பயனாக பர்வதனை ஒரு மலையாக மாரி  ஸ்ரீ பர்வதம் என  பெயரிட்டு அம்மலையின் மீது சுயம்பு லிங்கமாக அமர்ந்து எழுந்தருளினார்.

ஆந்த ஸ்ரீ பர்வதமே தற்போது ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது.  சைலம் என்றால் மலை எனப் பொருள்படும். நாகஸ்ரீ என்ற சிவபக்தை தவமிருந்து 
இப்பகுதி தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென  வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது. சிலந்தர் மகரிஷி  தவம் செய்தமையால் இம்மலை சிலந்தர் மலை ஆனது.  மல்லிகாபுரி தேசத்தை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா பூக்களாலும் சிவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீசைலம் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு லிங்க வடிவான ஈசனுக்கு  நாமே அபிஷேக தீப ஆராதனை செய்து வழிபடும் ஐதீகம் உள்ளது. நந்தியை தனது வாகனம் ஆகியது இங்குதான்.    அதன் மீது சிவன் அமர்ந்து ஆட்சிபுரிகிறார். சக்தியின் திருப்பெயர்   அருள்மிகு ஸ்ரீபிரமராம்பாள், பருப்பநாயகி இறைவனின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர்,ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர்.  தல விருட்சம்  – மருதமரம், புண்ணிய தீர்த்தம் – பாலாநதி ஆலயம் கண்ட காலம், 1000 ஆண்டுகளுக்கு முன்பு. புராணப் பெயர்- திருப்பருப்பதம் கிராமம்- ஸ்ரீசைலம் மாவட்டம்,

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *