Goddess Saraswati seated on a white lotus

படைப்பு கடவுளான பிரம்ம தேவனின் சக்தியாக விளங்கும் அன்னை சரஸ்வதி தேவியை' ரிக்வேதம்  ஒரு ஆறாக குறிப்பிட்டுள்ளது. வளமையை தந்து படைப்பு ஆற்றலை உருவாக்கி எண்ணங்களை தூய்மைப்படுத்துவதால், நீரோடு சரஸ்வதியை ஒப்பிடுகின்றனர். நீர் போல் பெருக்கெடுத்து ஓடும், சரஸ்வதி தேவி படைப்பின் சக்தியாகவும், கலைகள், கல்வி, பேச்சாற்றல், கவித்திறன் என கலைகளின் தலைவியாக சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறாள். அறிவு என்னும் ஒளிச்சுடரை தூண்டி அறியாமை இருளை அகல செய்யும், வெண்மையின் அடையாளமாக திகழும், சரஸ்வதி தேவி வெள்ளை நிற உடை அணிந்து, வெள்ளைத் தாமரையில் எழுந்தருளி தனக்கென அரிதாக தனி கோவில் கொண்டு அருள் பாவிக்கும் இடமானது.

திருவாரூர் மாவட்டம்   கூத்தனூர். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கலை வடிவமாக காணப்படும் இக்கோவிலின் முன் கலை நையத்துடன்  மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் மூலவராக சரஸ்வதி தேவி கலைகளின் அம்சமாகவே' பத்மாசனத்தில், வலது கீழ் கரத்தில்  முத்திரை, இடது கரத்தில் புத்தகமும்,  வலது மேல் கரத்தில்  அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் அமிர்த கலசத்துடன் கலை அம்சத்துடன் காணப்படுகிறாள். மேலும் இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சென்று அடைவதாக   வரலாறு கூறுகிறது. தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் பெற்றோர் இங்கு அழைத்து வந்து சரஸ்வதி தேவியை வணங்க செய்து அதன் பின்னே பள்ளியில் சேர்க்கின்றனர்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *