Where is the Lord? What did the sage say!

 

இறைவன் எங்கே இருக்கிறார்? ஞானி சொன்னது என்ன?

ஒருமுறை ஞானி ஒருவர் இமயமலையில் இருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் ஆன்மீக யாத்திரை சென்று மக்களிடம் இறை பக்தி குறித்து எடுத்துரைத்து வந்தார். அப்படி வருகையில், கிராமம் ஒன்றில் செல்வாக்குடன் இருக்கும் செல்வந்தர் ஒருவர் ஞானியை சந்தித்து, தனது வீட்டிற்கு வந்து பசியாறும்படி அழைப்பு விடுத்தார். ஞானியும் தனது ஆன்மீக உபதேசங்களை முடித்துவிட்டு அவருடன் சென்றார்.

அப்போது இறை பக்தி இல்லாத செல்வந்தரின் மகன் ஞானியை பார்த்து, "இறைவன் எங்கேயிருக்கின்றார்?" என்று கேட்டான். அதற்கு ஞானி, "இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்" என்றார். அப்படியானால், தனியாக கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவனிடம், ஞானி கேட்டார், "உன் வீட்டில் பூஜை அறை இருக்கிறதா?" அவன், "ஆம்," என்றான். "அப்படியானால், பள்ளி அறை இருக்குமே?" "ஆம்," என்றான். "உணவு கூடம்?" "ஆம்," "கழிவறை?" "ஆம்."

"அப்படியானால், நீ உணவை உணவறையில் சாப்பிடுகிறாயா? கழிவறையில் அமர்ந்து சாப்பிடுகிறாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அதில் என்ன சந்தேகம்? எல்லோரும் உணவை உணவு கூடத்தில் தானே சாப்பிடுவார்கள்." ஞானி சிரித்தார். "உன் வீட்டில் பல அறைகள் இருந்தும், உணவை நீ உணவகத்தில் தான் சாப்பிடுகிறாய். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், மனதை ஒருமைப்படுத்தி ஆத்ம ஞானம் பெற ஒரு இடம் வேண்டும். அதற்காகதான் இறைவன் கோவில்களில் குடிகொண்டுள்ளான்," என்றார்.

அப்போது, வெளியில் இருந்து வீட்டிற்குள் ஓடி வந்த செல்லப்பிராணியான நாய் அவன் மீது தாவிய போது, அதன் காலில் இருந்த சேரானது அவனது புத்தாடையில் படிந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவன், நாயை காலால் எட்டி உதைக்க வழி தாங்காமல் குறைத்து கொண்டு அது ஓடியது. இதைப் பார்த்து வேதனை அடைந்த ஞானி, "வாயில்லா பிராணி அதனை கால்களால் எட்டி உதைக்கலாமா? நம்மைப் போன்று அதுவும் உயிரல்லவா?" என்றார். அதற்கு, அவன், "நம் உயிரும் நாயின் உயிரும் ஒன்றாகுமா?" என்றான். மீண்டும் அவனது அறியாமையை கண்டு சிரித்த ஞானி, அவனிடம் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியை பார்த்து, "இது எதனால் இயங்குகிறது?" என்றார். அதற்கு, அவன், "மின்சாரத்தால்," என்றான். "அப்படியானால், அந்த தொலைக்காட்சி பெட்டி எப்படி இயங்குகிறது?" "அதுவும் மின்சாரத்தால்," "அப்படியா? குளிர்சாதன பெட்டி?" "அதுவும் மின்சாரத்தால்." "அப்படியானால், மின்விசிறி சுயல்கிறதே. குளிர்சாதன பெட்டி ஏன் சுயலவில்லை?" என வினாவினார். அதற்கு அவன், "இது கூட தெரியாத உங்களை எப்படி எல்லோரும் முற்றும் உணர்ந்த ஞானி என்கின்ற நேரே?" என்றான்.

சற்று நேரம் மௌனமாக இருந்த ஞானி சொன்னார், "மகனே, உன் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் ஒரே மின்சாரத்தால் இயங்குகிறது. அப்படி இருக்க அவை ஏன் வெவ்வேறு விதமாக செயல்படுகிறது தெரியுமா?" மீண்டும் உரைத்தார், "மின்சாரம் ஒன்றாக இருந்தாலும், அது சென்று சேரும் பொருளின் தன்மைக்கேற்றே இயங்கும். அது போன்று தான் உயிர் எனும் ஜோதியானது ஒன்றுதான். அது மாடுகளிடம் சென்றடையும் போது அதன் தன்மையுடனும், நாய் உள்ளிட்ட பிற ஜீவராசிகளிடம் சென்றடையும் போது அவைகளில் தன்மையுடனும் செயல்படுவது போல் நாமும் செயல்படுகிறோம். எனவே, நமக்குள் இருக்கும் உயிர் வேறு, மற்ற பிராணிகளுக்கு இருப்பது வேறு. உயிர் அல்ல, எல்லாம் பரம்பொருளான ஈசனின் ஜோதி வடிவமே," என விளக்கமாக கூறியதை கேட்டு, மனம் தெளிந்த செல்வந்தரின் மகன், அவரது காலில் விழுந்து வணங்கினான்.

பொன்.கோ.முத்து, திருவள்ளூர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *