Viruchigam Shakthi Online – November Monthly Prediction – 2024

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசி ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சனி (வ) – பஞசம ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன்  என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றம்:

05.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

08.11.2024 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

13.11.2024 அன்று  ராசியில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

16.11.2024 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  ராசிக்கு  மாறுகிறார்.

பலன்:

சொல் போல் செயலும் இருக்க வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.  

தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

விசாகம்:

இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

அனுஷம்:

இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

கேட்டை:

இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள் : 18, 19, 20

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *