Vellore pradhosham

வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷம் நந்திபகவானுக்கு பால்,தயிர் ,தேன்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரங்களை  மகாதீபாராதனைகள் பக்தர்கள் சுவாமிதரிசணம் செய்தனர்.

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,தேன்,சந்தனம்,விபூதி,கரும்புசாறு ,பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து அருகம்புல்,வில்வ இலைகள் ,தாமரை மலர்கள்,மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.

பின்னர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரி அகிலாண்டீஸ்வரி அம்மன் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *