Palani valli kummi nadanam

பழனி கிரிவலப் பாதையில் 200  க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கன க்கான பக்தர்கள் சாமி  செய்ய வருவார்கள். அந்த வகையில்  இன்று கோவையை  சூலூர் கள்ளப்பாளையம் சேர்ந்த வைரவேல் வள்ளிகும்மி  குழுவினர் பழனியில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். பழனி அடிவாரம் கிரிவலப்பாதையில் வலம் வந்த  கோவை சூலூர் கள்ளப்பாளையம் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஒரே மாதிரியான சேலை கட்டி வள்ளிக்கும்மி நடனமாடிய படியே கிரிவலம் சென்றனர். அப்போது முருகன் பக்தி பாடல்கள் பாடியபடியே நடனமாடியது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *