Thirupathi actress

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை அஞ்சலி மற்றும் அவர் நடித்த தெலுங்கு படமான "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர்.  இன்று விஐபி இடைவேளையின் போது திரைப்பட நாயகி அஞ்சலி, கதாநாயகன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, திரைப்பட இயக்குநர் சிவா, திரைப்பட எழுத்தாளர் கோனா வெங்கட் ஆகியோர் சுவாமி தரிசனத்தில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.  

தரிசனத்திற்குப் பின் ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதசிர்வாதம் வழங்கினர்.  கோயில் நிர்வாகிகள்  தீர்த்தப்பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்   தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்    பின்னர் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரணுடன் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்துள்ளதாகவும்  மேலும் சில படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *