Krishnan koil car festival

அய்யம்பேட்டையில் 200 ஆண்டு பழமை வாய்ந்த  கிருஷ்ணன் கோவில் பங்குனி பிரம்மோற்சவம். திருத்தேர் வீதியுலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா  அய்யம்பேட்டையில் 200 ஆண்டு பழமை வாய்ந்த  ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கிய விழா இன்று காலையில் ரதாரோஹணம், அதனைத் தொடர்ந்து திருத்தேரில் சுவாமி எழுந்தருளி வேதமந்திரங்கள் முழங்க காட்சியளித்தார். பின்னர் தேர் முற்றத்திலிருந்து நான்கு முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நடைபெற்றது. இதில் அய்யம்பேட்டை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *