Vedapuriswarar temple pradhosham

புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பிரதோஷ நாளில் பக்தர்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்குகிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்திலும் விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு, சிவபெருமான் மகிழ்ச்சியையும், செழிப்பையும், பேரின்ப வாழ்வையும் வழங்குவார் என்பது நம்பிக்கை. அதனால் பிரதோஷ நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த பிரதோஷ நாளை முன்னிட்டு புதுச்சேரி புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில்,சிவ பெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், திருநீறு மற்றும் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை வழிபட்டு வணங்கி சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *