Palanai Soorasamharam

பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் நடைபெற்றது ,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்ய கூடிய நிகழ்ச்சி  மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நடைபெற்றது.

முன்னதாக மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கி கொண்டு நவ வீரர்கள் முன்னே அணிவகுத்து வர மலையடிவாரத்திற்கு வந்து சூரபத்மன்களை வதம் செய்தார். முதலில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரனையும், அடுத்ததாக கிழக்கு வீதியில் பானுகோபன் சூரனையும் சின்னகுமரர் வதம் செய்வார்.

பின்னர் தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும் இறுதியாக மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்யக்கூடிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி விமர்சியாக திருவிழாவானது நடைபெற்றது.  விழாவுக்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *