mohanoor perumal alayam thirukalyanam

நாமக்கல் மோகனுார்  பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாத 3-வது வார ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு சிறப்பு வைபவ நிகழ்வாக திருமலையில் ஒரு நாள் நிகழ்வு ( அதாவது திருப்பதியில் அதிகாலை முதல் இரவு வரை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் இந்த பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது)முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவ நிகழ்வு மிக விமர்சையாக கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் நடைபெற்றது.

முன்னதாக பட்டாச்சாரியார்கள் வேத மந்திரப்படி திருமண வைபவத்தை துவக்கினர் பின்னர் சீர் தட்டு அழைத்து வரும் நிகழ்வு,கங்கணம் கட்டுதல்,மாலை மாற்றுதல் நிகழ்வு திரு மாங்கல்ய தாரணம் நிறைவு பெற்று எம்பெருமான் திருக்கல்யாண வைபவ நிகழ்வு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது,பின்னர் பல்வேறு தீப  உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டு நிறைவாக மகாதீபம் காண்பிக்கப்பட்டது |இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *